ஷரபோவாடன்


டென்னிஸ் விளையாட சில துப்புகள்

1. ‘ஆ’, ‘ஊ’, ‘ஏ’, ‘ஈ’, ‘ஓ’ என்று கத்த சண்டைக் காட்சி இயக்குநர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

2. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்குமான இடைவெளியில் ராக்கெட்டில் உள்ள சதுரங்களை எண்ணுவதற்காக சகுந்தலா தேவியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

3. ஓரமாய் உட்கார்ந்திருக்கும் நடுவர்களை அனல் கக்கி முறையிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அணுக வேண்டும்.

4. தலையில் துண்டு போட்டு வெயிலைத் தணிக்க, தோற்றுப் போன அரசியல்வாதிகளிடம் முக்காடிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

5. சின்ன சின்ன விளம்பரங்களை சட்டையில் தைத்துக் கொள்ள ஆறு புள்ளி எழுத்துருவில் மறுப்புகூறை முன்வைக்கும் மென்பொருளாளர்களிடமிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. நான்கு பந்துகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள, நாலு தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒரே சமயத்தில் மேய்க்கும் சோனியாவிடம் அறிய வேண்டும்.

7. போன முறை ஜெயித்த பந்தையே மீண்டும் கண்டுபிடித்துப் பெற, இரும்புக் கோடரியை நதியிடமிருந்து திரும்பப் பெற்றவனிடம் கேட்க வேண்டும்.

8. நெட்டில் பட்டு திருடிய பாயிண்டுக்கு ‘சாரி’ கேட்க, ஜார்ஜ் புஷ்ஷிடம் அறிய வேண்டும்.

9. ஒரு செட் தோற்றாலும், மீண்டு வந்து வெல்வதற்கு தமிழ்ப்பட ஹீரோயிஸக் கதைகளைக் கண்ணுற வேண்டும்.

10. காலில் கோடி டாலருக்கு காலணி அணிந்தாலும், பந்தில் மட்டுமே குறியாக இருப்பதை, பங்குவிலை எவ்வளவு ஏறினாலும் அசராமல் அடுத்த தொழில்நுட்பத்தை நோக்கும் கூகிளிடம் நோக்க வேண்டும்.

போன வருட ஷரபோவா பதிவு.

3 responses to “ஷரபோவாடன்

  1. இன்னொரு ஷரபோவா ஜொல்லு இங்க ! ( விளம்பரந்தான் ! )
    http://anandvinay.blogspot.com/2005/06/blog-post_24.html

  2. அந்த பழையபதிவுக்கே இன்னொரு ஒட்டு போடலாம் போல இருக்கு. 🙂

  3. பிங்குபாக்: It is tough to write about French players « Snap Judgment

KARTHIKRAMAS -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.