குறிப்பேடுகளின் அட்டைப்படங்கள்


Sadha in Monalisaவாசகர் டிஷ்யூம்: ஜூன் மாதம் பிறந்து விட்டது… பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட விருக்கின்றன. என்னுடைய பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்க கடைக்கு சென்றேன். சினிமா கவர்ச்சி என்பது பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் வரை வந்துவிட்ட கொடுமையை பார்த்து மிரண்டு போனேன். நோட்டுப் புத்தகங்களில் அரைகுறை டிரஸ்ஸில் குளோசப் படங்களாக நடிகைகள் மின்னிக் கொண்டிருந்தார்கள். அந்த நோட்டுப் புத்தகங்களைத்தான் மாணவர்கள் வாங்கிச் சென்றார்கள்.

ரோட்டில் அவ்வப்போது ஒட்டப்படும் கவர்ச்சிப் பட காட்சியைப் பார்த்து வரிந்து கட்டிக்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போலீஸார், இந்த மாதிரி கவர்ச்சிப் படம் போட்ட நோட்டு புத்தகங்களை தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?

பள்ளி ஆசிரியர்களே… பெற்றோரே… இந்த ஆண்டாவது சினிமா கவர்ச்சியை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்று புது சபதம் போடுங்கள்!

– சிதம்பர செல்வன், சென்னை – 24.

2 responses to “குறிப்பேடுகளின் அட்டைப்படங்கள்

  1. பாலாஜி சார் .. சரியாச் சொன்னீங்க…..
    நானும் +2 படிக்கும் பொழுது கணக்கு புத்தகத்தில் ஸ்டெபி கிராஃப் படத்தை அட்டையாக போட்டேன். புத்தகத்தை திறந்த பார்த்த காலத்தை விட அட்டையைப் பார்த்த காலம் தான் அதிகம். விளைவு +2வில் கணக்கைத் தவிர எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் கணக்கில் மட்டும் 152/200.

  2. நான் தீவிர சபாடினி ரசிகன். ஸ்டெஃபிய விட நல்லா ஆடுவாங்க இல்லியா 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.