Daily Archives: மார்ச் 14, 2005

ஃப்ளாஷ் செய்தி

நம்மி பலரால் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, இளைய தளபதி வேணாம்…. குறைந்தபட்சம் முரளி அல்லது வேணு அரவிந்த்தைப் கதாநாயகனாகப் போட்டு திரைப்படம் செய்ய இயலாது. வலைப்பதிவர் அருள் போல மேக்ரோமீடியாவைக் கொண்டு உருப்படியான படங்களை நேரத்தை மட்டும் முதலீடாகக் கொண்டு மனதுக்கு நெருங்கிய விஷயத்தை பளிச்சென்று திரையிடலாம். சமீபத்தில் நடந்த ஃப்ளாஷ் போட்டியில் உலகத்தின் பிரச்சினைகளை நச்சென்று சொல்லி பரிசைத் தட்டி சென்றவர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் இங்கு காணலாம்: Citizens For Global Solutions

மேலும் சில புகழ்பெற்ற ஃப்ளாஷ் சித்திரங்கள்:
வைரங்களின் கதை | மிருகங்களின் கதை

அன்றும் இன்றும்

இனப்படுகொலைகள் ருவாண்டா 1990-1994 டார்ஃபர், சுடான் 2003-
மக்கள் தொகை (கொலைக்குவிப்புக்கு முன்பு) 7.6 million 6 million
இறந்தவர்கள் கிட்டத்தட்ட 800,000 டுட்ஸிகளும் மிதவாத ஹுட்டுகளும்
(ஏப்ரல் – ஜூலை, 1994)
ஏழத்தாழ 350,000 – 400,000
புலம் பெயர்ந்தவர்கள் (தாய்நாட்டுக்குள்) 1.5 மில்லியன் டுட்ஸிக்கள்
(1990-1994)
1.66 million
அகதிகள் உகாண்டாவில் 200,000 டுட்ஸிக்கள்
(1959-1994)
ஸெய்ரில் (Zaire) 2 மில்லியன் ஹுட்டுகள் (ஜுலை 1994)
சாட் (Chad) முகாம்களில் 205,500

நன்றி: The Epoch Times | Real-Life Hotel Rwanda Hero Calls for Action in Darfur