மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டி: தமிழில் : இரா முருகன்
மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை.
இது ஆபாசம் அப்படீன்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம்?
ஆறடி அறைகளின் குரல்கள் – பாவண்ணன்:
கிராமம், வாழ்வின் கசப்புகள், கையறு நிலை, இசைவான உறவில்லாததன் வலி, வாழமுடியாத தவிப்பு என்ற களங்களில் இயங்குபவை மற்ற கவிதைகள். 1984ல் அய்யனார் எழுதிய ஒரு வரி “எனக்குரிய காற்றை எனக்குப் பிரித்துத்தாரும்” என்பதாகும். 2002ல் அவரே எழுதிய இன்னொரு வரி “காற்று அழிந்துபோன இந்த நகருக்குள் வந்தேன்” என்பதாகும். இடைப்பட்ட பதினெட்டு ஆண்டுகளாக சுதந்தரத்தின் அடையாளமாக விளங்கும் காற்றைக் கண்டடைந்து துய்க்கும் ஆவலில் அலைந்த அலைச்சல்களையும் நீண்ட பயணத்தின் தவிப்புகளையும் தனிமைத் துயரங்களையும் பதிவுசெய்த வரிகளே இத்தொகுப்பில் கவிதைகளாக உள்ளன.
காற்று அழிந்துபோன நகரில் அய்யனார் வசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த இடம் மேன்ஷன். சுதந்தரத்தை அறியும் வாய்ப்பைத் தராவிட்டாலும் வாழ்வின் மற்ற முகங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது மேன்ஷன் அறை. எளிமையாக தூக்கத்தில் மூழ்க வழியற்ற இடம் அது. கனவுகளின் வெப்பத்தில் கொதிப்பேற்றும் இடம். தெரிந்த பெண்களின் முகங்களை மனப்பரப்பில் நௌ¤யவைக்கும் இடம். ஓர் இரவுத் து£ரத்தில் வசிக்கும் மனைவியின் ஞாபகத்தை வரவழைக்கும் இடம். சந்தேகங்களாலும் ரகசியங்களாலும் ஆளை உருட்டிஉருட்டி விளையாடும் இடம். இலக்கியப் பரப்பில் சிற்றில் என்றொரு சொல்லாட்சி உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவதற்காக மணல்வீட்டில் கட்டப்படும் வீட்டுக்குத்தான் சிற்றில் என்ற பெயர். கதவு, வாசல், ஜன்னல், தோட்டம் எதுவுமே இல்லாத ஒன்று அது. ஆனால் எல்லாமே இருப்பதைப்போன்று பாவிக்கப்படுகிற வடிவம். ஓடி உழைத்து உயிர்த்திருக்க பெருநகரைநோக்கி வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உடனடித் தங்குமிடமாக அமையும் அறைகள் இத்தகு சிற்றில்வகைப்பட்டவை. எல்லாமே உருவகித்துக்கொள்ளப்படவேண்டிய இடம். அன்பையும் நட்பையும்கூட இருப்பதைப்போல உருவகித்துக்கொள்ளுமாறு அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய துரதிருஷ்டம். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் எழும் கேள்விதான் “அறை என்பது வீடாகுமா?” என்பது.
ஏன் இந்த மனிதர்கள் இப்படி கொடுக்குமுனை மின்னும் சொற்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள்? பழகியவர்கள், பழகாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற எந்த பேதமும் ஏன் இச்சொற்களுக்கு இருப்பதில்லை? இப்படி கொட்டிக்கொட்டி எதற்காக விஷத்தைப் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறார்கள்? கொட்டிக்கொட்டி சாதாரண பிள்ளைப்பூச்சிகள்கூட ஏன் குளவிகளாக மாற்றப்படுகின்றன?எல்லாமே குளவிகளாக மாறினால் இந்த மண்ணில் வண்ணத்துப் பூச்சிகளையும் தேனீக்களையும் எங்கேபோய் கண்டுபிடிக்கமுடியும்? இந்த மாற்றத்தால்தான் எல்லாருமே கொம்புள்ளவர்களாகவும் உளவாளிகளாகவும் உருமாறிவிடுகிறார்களா?
‘நிகழ்’
வீடுகள் முளைக்கும்
விளைநிலம் எல்லாம்
காடுமேடெல்லாம் கார்கள்
காற்றை நசித்துக் கடக்கும்
பற்சக்கரப் பதிவுகள்
இனிய தோட்டத்தில்
இரும்புக் கழிகள்
இதயத்துக்கருகில்
இயந்திரப் பொறிகள்
கம்ப்யூட்டரின் மடியில்
படுத்துப் புரளும் பூமி
காற்றும் விற்கப்படும்.
சத்தியமும் அன்பும்
வாங்க ஆளின்றி!
— மேன்ஷன் கவிதைகள் :: பவுத்த அய்யனார்
தட்டிக்கொடுத்தவர் – சுஜாதா/Anandha Vikadan
அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங் — ஆசாரகீனன்:
“தியானமன் சதுக்கத்தில் மாணவர் புரட்சியை சீன அரசு வன்முறையைக் கையாண்டு அடக்கியதை ஒப்புக் கொள்ளாத சீனர்களின் வலிமை மிக்க அடையாளமாகத் திகழ்ந்தவர் இவர். ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டத் தலைவர்களை கடுமையாகக் கண்டித்ததோடு, மாணவர் போராட்டமானது எதிர்-புரட்சித் தன்மை கொண்டது என்ற சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான நிலையை ஒப்புக் கொள்ளவும் மறுத்தவர் ஜாவ் ஜியாங்.
அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தின் பொறுப்பாளராக ஆகிவிட்ட அவர் டெங்கின் ஆசியுடன் தீவிர பொருளாதார சீரமைப்புகளை மேற்கொண்டார். ஜாவ் ஜியாங் 1987-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றதன் மூலம் டெங்கின் வாரிசாகவும் ஆனார்.”
நன்றி: Thinnai – Weekly Tamil Magazine










