சிந்துவை அதிகம் திரைப்பட நாயகியாக பார்த்ததில்லை. ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது பார்க்கும் ‘மெட்டி ஒலி’யில் மாமியாருக்கு (சாந்தி வில்லியம்ஸ்) அடுத்த உயிர் சித்திரம் இவர்தான். வளைகுடாவில் கணவன். பெட்டி நிறையப் பணம். தொலைபேசியில் குடித்தனம். கண்களில் வாழ்க்கையின் மேல் அலட்சியம் கலந்த வெறுப்பு. முன்னாள் நட்பை படுக்கைக்கு அழைக்கும் துணிச்சல். உண்மை குட்டுப்படும் தருணங்களில் scared to death பயம்.
பெண் ரசிகர்களிடையே அருவருப்பையும் சீரியல் விமர்சகர்களிடையே ஒரு ‘அட’வையும் என்னிடையே ஆச்சரியத்தையும் உண்டாக்கியவர்.
‘இணைந்த கைகள்’ முதல் படம் என்று வாழ்க்கை குறிப்பிடுகிறார்கள். சுனாமிக்காக தெருவில் உண்டியல் குலுக்கியவர் மயங்கி விழுந்து மறைந்திருக்கிறார். முப்பத்திரண்டு வயது. ஒன்பது வயது மகள். குணச்சித்திரம், வில்லி வேடங்கள், அக்கா/அண்ணி என்று நிறையவே நடித்து வந்தவர்.
ஆழ்ந்த வருத்தங்கள்.
செய்தி: Sindhu













