அருள்தரும் ஐயப்பன் திருத்தலங்கள்: மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.
1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் — குழத்துப்புழா.
பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டு துண்டாக உடைபட்ட அந்தக் கற்சிலையும் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது.
2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யௌவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் — ஆரியங்காவு.
ஐயப்பன் மணம் புரிந்த புஷ்கலாதேவி, சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.மதம் பிடித்த யானையை அடக்கி அதன்மீது வேடன் ரூபத்தில் மாப்பிள்ளை மாதிரி காட்சி தருகிறார்.
3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை ‘கிரஹஸ்த பருவம்’ — இதுதான் அச்சன்கோவில்.
பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோயில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கப்பட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டுப் படிகள் உண்டு. பூர்ண, புஷ்கலாவுடன் ஐயப்பன் காட்சியளிக்கிறார்.
4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ — சபரிமலை.
குழந்தை திருமாலின் கையிலிருந்து பிறந்தது. அதனால் கைஅப்பன் என்று அந்தக் குழந்தையை அழைத்தனர்.
5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை — காந்தமலை.
தேவர்களால் பூஜிக்கப்பட்ட சாஸ்தா கோயில் ஒன்றும் இங்குள்ளது. சபரிமலைக்கும் மேலே சில கி.மீ தொலைவில் உள்ளது.
நன்றி: சக்தி விகடன்










