-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Monthly Archives: செப்ரெம்பர் 2004
செல்லாத வோட்டு

இந்தியாவில் வாக்காளர்கள் எம்.எல்.ஏ.க்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுப்போம். அவர்கள் முதலமைச்சரையும், பிரதம மந்திரியையும் அரியணையில் அமர்த்துவார்கள்.
அமெரிக்காவில் எம்.பி.க்கள் (ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & செனேட்), எம்.எல்.ஏ. (உள்ளூர் ஹவுஸ் ஆ·ப் ரெப்ரசேண்டேடிவ்ஸ் & உள்ளூர் செனேட்), கவர்னர் (முதலமைச்சர்), ஜனாதிபதி (பிரதம மந்திரி) என எல்லாப் பதவிகளும் வாக்காளர்கள் கையில் இருக்கிறது.
இவற்றில் எம்.எல்.ஏ, எம்.பி., கவர்னர் — ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், பிரச்சினை எதுவும் இல்லை. அனைத்து வோட்டுகளையும் ஒழுங்காக எண்ணி முடிப்பதில் வேண்டுமானால் ஆங்காங்கே சலசலப்புகள் எழலாம்.
அமெரிக்க ஜனாதிபதியைத் தீர்மானிக்க ‘எலெக்டோரல் காலேஜ்’ என்னும் உத்தியை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 545 எம்.பிக்கள் சேர்ந்து பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பது போல், அமெரிக்காவில் 538 ‘மாகாண வோட்டுகள்’ ஜனாதிபதியை தேர்வு செய்கிறது.
எந்த மாநிலத்துக்கு ஜனத்தொகை அதிகமோ, அந்த மாநிலத்துக்கு அதிக வோட்டுகள் கிடைக்கும். இந்தியாவின் டெல்லி போன்ற — வாஷிங்டன் டி.சி.க்கு ஒரு வோட்டு. உத்தர பிரதேசம் போன்ற கலி·போர்னியாவுக்கு 55. முழுப் பட்டியல்.
ஆனால், தற்போதையத் தேர்தல்களில், இந்த முறை மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. போன 2000 தேர்தலில், பெரும்பான்மையான வாக்குகளை ‘ஆல் கோர்’ வாங்கி இருந்தும், தேவையான ‘எலெக்டோரல் வோட்டுகளை’ப் பெறாததால் ஜார்ஜ் புஷ்ஷிடம் தோற்றுப் போனார். இதே மாதிரி, இம்முறை, கெர்ரி செய்து பழிக்குப் பழி தீர்க்கக் கூடும் என்று வல்லுனர்கள் சொல்லி வருகின்றனர்.
(அதாவது 90 உலகக் கோப்பையில் மாரடோனாவின் அர்ஜெண்டைனா பெனால்டி கிக் போட்டே வென்று வந்தது. கால்-இறுதியில் யூகோஸ்லேவியாவை (இவங்க எத்தனை நாடாகப் பிரிந்தார்கள் என்று இன்னொரு அடைப்புக் குறிப் பொடலாம் 😉 3-2 என்றும், அரையிறுதியில் இத்தாலியை 4-3 என்றும் வென்று கால்பந்து போட்டியின் இறுதியை அடைந்தார்கள். கடைசியில் ‘வி.வி.வி.அறுப்பான்’ கதையாக, மேற்கு ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கிக் கை அம்பையர்கள் போட்டுக் கொடுக்க, அவர்கள் கால்பந்து கோப்பையை வென்றார்கள்.)
‘எலெக்டோரல் வோட்டுக’ளினால் வாக்காளருக்கு வோட்டளிக்கும் ஆர்வமும் குறைகிறது என்பது அடுத்த குற்றச்சாட்டு. நியு யார்க் (31 வோட்டுகள்), டெக்ஸாஸ் (34 வோட்டுகள்), இரண்டும் முறையே சுதந்திரக் கட்சியின் ஜான் கெர்ரிக்கும், குடியரசுக் கட்சியின் புஷ்ஷ¤க்கும் நிச்சயம் கிடைக்கும். இதனால், இங்கு வாழும் எதிர்கட்சி விசுவாசி வோட்டுப் போடுவதும் ஒன்றுதான், போடாமல் விட்டுவிடுவதும் ஒன்றுதான்!
ஆனால், இந்தியாவில் இந்த நிலை தற்போது இல்லை. ஒவ்வொரு வோட்டும் எம்.எல்.ஏ.வை தீர்மானிப்பதில் உதவுகிறது. அதற்கு பதில் ‘எலெக்டோரல் காலேஜ்’ முறையைக் கொண்டு வந்தால் நன்மையா, தீமையா?
இவ்வாறு ‘மாவட்ட வோட்டுகள்’, ‘144-வது வட்ட ஓட்டுகள்’ என்று மாற்றுவதன் மூலம், முஸ்லீம் வோட்டு அதிகரிக்கிறதா, வடக்கு மக்கள் அதிகமாகி விட்டார்களா என்று கவலை கொள்ள வேண்டாம்.
மேலும் இதன் மூலம் ‘பார்டர்லைனில்’ இருக்கும் மக்களுக்கு மதிப்பு கூடும். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் 15/16 மாகாணங்களில் மட்டுமே நடக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் 35/34 மாநிலங்கல் கண்டுகொள்ளப் படுவதேயில்லை. அதே போல் லாலுவின் பிஹாரும், மோடியின் குஜராத்தும் கைவிடப்பட்டு, முடிவு செய்யாத வடகிழக்கு, கேரளம், ஜம்மு-காஷ்மீர் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். அங்கு நடக்கும் சராசரி விஷயங்களும் அரசின் தீவிர கவனிப்பையும், விசாரிப்பையும் அடையும்.
இந்தமுறை வந்தபிறகும், அவ்வப்பொழுது நடைபெறும் சென்ஸஸ் அடிப்படையில், ‘எலெக்டோரல் வாக்குகள்’ மாறிக் கொண்டே வந்தால், இந்த முறையால் எந்தப் பயனுமில்லை.
-பாஸ்டன் பாலாஜி

படங்களுக்கு நன்றி : பிஸினஸ் வீக்
ரெண்டு வரி நோட்:
அமெரிக்காவில் இவ்வாறு செய்யப்படுவது வேறு சில விவகாரங்களுக்கு வழிகோலியுள்ளது. அட்லாண்டாவை மாற்றுகிறேன் என்று சுதந்திரக் கட்சியும், டெக்சாஸை மறுபடி பிரிக்கிறோம் என்று குடியரசுக் கட்சியும், தங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்குமாறு மாற்றியமைத்துக் கொண்டுள்ளார்கள்.
Posted in Uncategorized
புவியிலோரிடம் – ச.திருமலை
நான் போன வாரம்தான் படித்து முடித்தேன். என்னுடைய விமர்சனம் அடுத்த வாரத்திற்குள் கொடுக்க முயல்வேன்.
நேற்று இரவு கையில் எடுத்த ஒரு நாவல், கீழே வைக்க விடாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்தது பா.ரா எழுதிய புவியிலோரிடம். இது நாவல் என்று சொன்னால் சற்று மிகையே, கண்முன்னே வாழும் ஒரு குடும்பத்தின் நிஜமான ஒரு வாழ்க்கைக் குறிப்பு. படித்து முடித்த பின், கதையின் பாரம் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அழுத்தின. மிகவும் சிக்கலான ஒரு கருவை, அழகான ஒரு குடும்பத்தின் மீது ஏற்றி அளித்திருக்கிறார் பா.ரா.
ஒன்பது குழந்தைகள் உள்ள ஒரு ஏழை பிராமணக் குடும்பம்.. கொடிது, கொடிது, வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை, வறுமையின் பாரம் ஒருவரைக் கூட பள்ளிப் படிப்பு முடிக்க விடவில்லை. தலைமுறை, தலைமுறையாக வறுமையிலும், அதன் காரணமாக கல்வியின்மையிலும் வாடும் ஒரு குடும்பம். குடும்பத் தலைவருக்கோ ஒரு பையனையாவது கல்லுரிக்கு அனுப்பி விட வேண்டும் என்று ஒரு வெறி, லட்சியம், குடும்பத்தின் கடைசிப் பையன் மட்டும், தட்டுத் தடுமாறி பார்டர் மார்க்கில் பாஸ் செய்ய, கல்லூரிக்கு அனுப்பப்படாத பாடு படுகிறார்கள். குடும்பமே முயற்சிக்கிறது. பாழாய்ப் போன சாதி குறுக்கே நிற்கிறது. பொய் சர்ட்டிபி·கேட் வாங்கி, கல்லூரியில் சேருகிறான், குற்ற உணர்வு மெள்ள, மெள்ளக் கவிய, மனப் பாரம் தாங்காமல் ஊரை, குடும்பத்தை விட்டே ஓடுகிறான். தான் என்ன பாவம் செய்தேன், பரம்பரை, பரம்பரையாக, வறுமையையும், கல்வியறிவும் இல்லாமல், சமையல் வேலையே கதியான தன் குடும்பம் எந்த விதத்தில் முன்னேறிய வகுப்பு? ஏன் இந்த அரசாங்கமும், சமுதாயமும், தங்களுக்கு எதிராக இருக்கிறது? கேள்விகள் விரக்தியாக மாற, சமுதாயத்தின் மேல் வெறுப்பு சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியாக மாற, அரசும், சமுதாயமும், நீதிமன்றமும், ஒன்று சேர்ந்து துரத்துகின்றன, அரசாங்கமே நேரடியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. இவர்களுக்கு ஒட்டுப் பலம் இல்லை எனும் ஒரு காரணத்துக்காகவே தலைகீழ் தீண்டாமை அரசாங்கத்தாலேயே, நீதி மன்றத்தின் முத்திரையுடன் அமுல் படுத்தப் படுகிறது. அநீதியின் வெப்பம் தாங்காமல் நாட்டை விட்டே, ஜாதியின் அடிப்படையில் தகுதி நிர்ணயிக்கப்படாத இடத்தைத் தேடி வெளியேறுகிறான்.
கதையில் பா.ரா பல முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். பிராமணர்களிலும், ஏழைகள் உண்டு, மக்குகள் உண்டு, ஆண்டாடுகால அடிமைகள் உண்டு, இந்தியாவின் வேறு எந்த வகுப்பைச் சேர்ந்த எழைகள் போல, இங்கும் அவலங்கள் உண்டு, அவமானங்கள் உண்டு, வறுமை என்று வந்தபின் இதில் உயர்சாதி என்ன, மேல் சாதி என்ன? கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் நான் அன்றாடம், வாழ்வில் கண்ட பாத்திரங்கள் என்பதாலும், இதை கதையல்ல நிஜம் என்பதை அனுபவபூர்வமாக அறிந்தவன் என்பதாலும் புவியிலோரிடம் என்னிடம் மிகுந்த ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. கதையில் வரும் வாசுவின் வேதனைகளை, அர்த்தமுள்ள கேள்விகளை, என்னால் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ள முடிந்தது, பல தருணஙளில் என் எண்ணங்களைப் பதிவு செய்திருப்பதாகவே நினைக்க வைத்தது, உணர்வுபூர்வமாக ஒன்ற வைத்தது. கதையின் நாயகனை துரத்தும் கேள்விகளை புரிந்து கொள்ள முடிகிறது. தாத்தா நீதிபதி, அப்பா கலெக்ட்டர், இருந்தாலும் பையன் மட்டும் இன்னும் பின் தங்கிய வகுப்பு, ஆனால் கொள்ளுத்தாத்தாவும், தாத்தாவும் சமையல்காரர்கள், அப்பாவும் சமையல்காரர், படிப்பறிவில்லாத சமையல்காரப் பரம்பரையின் வாரிசு மட்டும் முன்னேறிய வகுப்பு, இதுதான் இந்த இந்தியாவின் சமூக (அ)நீதி, அவன் எழுப்பும் கேள்விகளுக்கு இன்றும், இனி என்றும் ஆள்வோரும் அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் பதில் அளிக்கப் போவதில்லை. முன்னேறிய வகுப்பினர் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், அவர்களில் சிலர் பரம்பரை, பரம்பரையாக அடிமைகளாக வாழ்ந்திருந்தாலும், வறுமையின்காரணமாக கல்வியறிவற்றவர்களாகவே வளர்ந்திருந்தாலும், அவர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப் படக்கூடாது என்பதே மண்டல் வழக்கை விசாரித்த நீதிபதிகளின் தீர்ப்பு, அதே நீதிபதிகளின் பிள்ளைகளும், பேரன்களும் அமெரிக்கவில் படித்த போதிலும் மிகவும் பின் தங்கியவர்களாக கருதப்பட்டதுதான், நீதியின் அவலம். முன்னோர் செய்த பாவமென, ஆற்றாமையிலும், கழிவிரக்கத்திலும் இவர்கள் கழிக்க வேண்டியதுதான், அப்படித்தான் இவர்கள் பழிவாங்கப் பட வேண்டும் என்பதுதான் இன்றைய அரசியவாதிகளின் கீழ்த்தரமான சட்டங்களாக இருக்கின்றன என்பதை நாவல் உணர்த்துகிறது.
கதையில் பின்வரும் இடங்கள் பிரச்சினையின் யதார்த்தத்தை மிக அருமையாக படம் பிடிக்கிறது.
கதையின் கரு சர்ச்சைக்குரியது. துணிந்து நாவலாக கொண்டு வந்துள்ள ராகவனது துணிவையும், கதைக்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சியும், உழைப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இட ஒதுக்கீட்டின் முரண்பாடுகள், அநீதிகள் என்ற கருவை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும், கதை நடக்கும் களத்தினை விவரிக்கும் முறையிலும், வெகு நேர்த்தியான, கச்சிதமான நாவலைக் காண்கிறேன். சோகமான கதையோட்டத்திலும், பாராவின் மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கிறது. பையனுக்குப் பெண்பார்க்கப் போகும் இடமும், ஜீயரை தரிசிக்கப் போகும் இடமும் குறிப்பிடத் தக்கவை. முன் தீர்மானம் எதுவுமில்லாமல், சமுதாயத்தில், முக்கியமாக கிராமங்களில் உள்ள பிராமணர்களின் அவல நிலையை அறிந்தவர்கள் இந்தக் கதையில் பா ரா சொல்லியிருக்கும் உண்மையின் வெப்பத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். சமுதாயத்தால் பழிவாங்கப் பட்டவர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் மட்டும் இல்லை, அதை விட கீழான நிலையில் பல பிராமணக் குடும்பங்களும் உள்ளன எனும் இந்தக் கதையின் கருவிற்கு பலரும் கடுமையான எதிர்வினையை வைக்கலாம், ஆனால் அவைகள் யாவும் ஊண்மையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத விதண்டாவாதங்களாக மட்டுமே இருக்க முடியும். பிரச்சினைக்கு ஆசிரியர் கூறும் தீர்வுகள் ஓட்டுப் பொறுக்கி அரசியவாதிகளாலும், நீதி பிறழும் மன்றங்களாலும் என்றுமே இந்த இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை. காலத்தின் ஓட்டத்தில், சமூக அநீதியெனும் தேர்ச் சக்கரத்தில், சம்பந்தப் படாத அப்பாவிகளும் நசுக்கிக் கொல்லப் படுகிறார்கள், அவர்களுக்கு நீதியோ, விடிவோ என்றும் ஏற்படப் போவதில்லை, விதியின் கொடுமை என, செய்யாத பாவத்திற்க்காக புழுவினும் கீழாய் நசுங்கி அழிய வேண்டும் அல்லது இந்த நாட்டில் தங்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்து வெளியேற வேண்டும் எனும் இரண்டே வழிகளை நாவலில் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இட ஒதுக்கீட்டுத்தீர்வில் உள்ள அநீதிகளையும், பங்கு பெற்ற அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களையும், இரட்டை வேடங்களையும், பிரச்சினைக்குரிய உண்மையான தீர்வுகளையும், இன்னும் தெளிவாக ஆசிரியர் அலசியிருக்கலாம். அதற்குரிய அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் அலசியபின்னும் ஏதோ ஒரு தயக்கம் அவரை கருவின் ஆழத்துக்கு அவரைச் செல்ல விடாமல் கட்டிப் போட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எந்த பத்திரிகைக்கும் இந்த அருமையான படைப்பை வெளியிடத் தைரியம் இருந்திருக்காது. அப்படியே வெளியிட்டிருந்தாலும் அர்த்தமற்ற, உண்மை நிலையை அறிந்தும் ஜாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாலும் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்.
கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல். கதையின் அடிநாதத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட, கதை சொல்லப் பட்ட நேர்த்திக்காகவும், பாத்திரப் படைப்புகளுக்காகவும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஏற்கனவே படித்தவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
நன்றி : ராயர் காபி க்ளப்
Posted in Uncategorized
பொற்கை பாண்டியர்
எனக்கு பாட்டி சொன்ன கதைகளில் பொற்கை பாண்டியர் என்று ஒருவரை சொல்வார்கள். இவரை குறித்து பத்தாவது வரை படித்த ஸ்டேட் போர்ட் சரித்திரப் புத்தகங்களில் எதுவும் காணோம். இயற்பெயர் என்ன, எந்தக் காலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
தமிழகத்து மந்திரிகள் தேர்தல் முடிந்து பதவி ஏற்றவுடன், தடாலடியாக இரயில்வே ஸ்டேஷன், பேருந்துப் பயணம், தாசில்தார் ஆபீஸ், ஆர்.டி.ஓ., என்று வருகை புரிந்து மக்களை நெருங்கி வேலை செய்வதை கண்காணிப்பார்கள். இந்தப் பாண்டியர் இன்னும் கொஞ்சம் கை சுத்தமானவர். தான் அரசனாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட இரவில் இருந்து, மாறுவேடத்தில், இரவுக்காவல் புரிகிறார். சென்னையில் முன்பெல்லாம் நள்ளிரவில் ‘பாரா… பாரா’ என்று கத்திக் கொண்டு லத்தியை தட்டிக் கொண்டே, திருடர்களை அமைதியாக கன்னம்போடச் சொல்லிச் செல்லும், ஏட்டுக்கள் போல் இல்லாமல், கோ-ஆப்டெக்ஸ் கருப்புப் போர்வை போர்த்திக் கொண்டு, பூனை போல் ஓசையெழுப்பாமல் நகர்வலம் சென்று குடிமக்களை காக்கிறார்.
பின்னிரவில் அப்படி ஒரு நாள் செல்லும்போது, புதிதாய் மணமுடித்தத் தம்பதியரின் வீட்டில் அழுகை சத்தம் கேட்கிறது. மாமியார் கொடுமையா, கணவனிடம் திருப்தியின்மையா என்று ஆர்வம் எழ, அடுத்த ஜென்மத்தில் பல்லியாய் பிறப்பதற்காக ஒட்டு கேட்கிறார். பொருள் ஈட்டுவதற்காக கணவன், ஒரு மாதம் வெளியூர் செல்வதாகவும், அதுவரை மனைவியை தனிமையில் விட்டுச் செல்வதாகவும் பேசிக் கொள்வதை கேட்க நேரிடுகிறது. இந்தக் காலம் போல ‘ஜெயலஷ்மி’ ஆக்காமல், ஒழுங்காக கவனித்துக் கொண்ட காலம் என்று சொல்லப்பட்ட காலம் ஆகையால், அந்த வீட்டுக்கு ‘ழ’ பிரிவு அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று ஓலை குறித்து கிளம்பிப் போகிறார் பாண்டியன்.
இரவுவலம் வரும் பாண்டியனின் செவிகளில் ஒரு வாரத்திலேயே அந்த வீட்டில் இருந்து சந்தோஷச் சிணுங்கல் கேட்கிறது. சவுதி மாதிரி எங்கேயோ விமானத்தில் செல்லாமல், நடராஜாவாக சென்றவன், அதற்குள் திரும்பியிருக்க மாட்டான். நம்மைப் போலவே, வழிப்பறிக்காரனும் குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாததைத் தெரிந்து கொண்டு, பேதையை அட்டாக் செய்ய வந்திருக்கிறான் என்று முடிவெடுக்கிறார் பாண்டியர். வழக்கம் போல், என்ன பேசுகிறார்கள், என்று நிதானமாக செவியை தீட்டாமல், அவசரமாக கதவைத் தட்டி விடுகிறார். ‘யாரது’ என்னும் தீர்க்கமான ஒலி, கணவனின் குரலைக் காட்டிவிடுகிறது. ‘என்னே தவறு செய்தோம்’ என்று ஆட்சி போன மந்திரியாக மாரடைப்பில் ஆஸ்பத்திரிக்குப் போகாமல், கணவனின் ‘கள்ளக்காதலன் கதவைத் தட்டுகிறானோ’ சந்தேகத்தைத் தீர்க்க, தெருவில் இருக்கும் எல்லார் கதவையும் ‘Knock Knock: Who’s there?’ என்று தட்டிவிட்டு அந்தப்புரம் சென்று தூங்கியும் விடுகிறார்.
அடுத்த நாள் அரசவையில் பெருங்கூட்டம். சாதாரணமாக ஓரிரு பரிசில் புலவர்களும், வண்ணானும், பால் பாக்கெட் போடுபவனும் மட்டுமே வந்து செல்லும் சபையில், பொது மக்கள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். ‘புதிய முகமூடி யார்’ என்று பலரும் பலவிதமாக ஐ.பி. முகவரி கிடைக்காத புனைப்பதிவாளரை வினவுவது போல் மந்திரியோரை கேட்கிறார்கள். எந்த நேரம் எந்த மந்திரி எந்த பதவியில் இருப்பார் என்பதை அறிந்த ஜூ.வி. கழுகுத்தனமாய் ‘அவனை நான் இங்கு கொண்டு வந்து நிறுத்தினால் என்ன தண்டனை தருவீர்கள்’ என்று வினவுகிறார் ராஜா. ‘முதலில் யார் என்று தெரியட்டும்; அதன் பிறகு தண்டனை தருவதை யோசிக்கலாம்’ என்கிறார் மந்திரிப் பெருமக்கள். தண்டனையைத் தெரியப்படுத்தும்படி வலியுறுத்துகிறார் பாண்டியர்.
‘பலரின் தூக்கத்தை கெடுத்துத் தட்டிய கையை வெட்ட வேண்டியதுதான்’ என்கின்றனர் மந்திரி. துருப்பிடிக்காத வாளை உறையில் இருந்து எடுத்து, ‘Delete All’ தட்டி நீக்குவது போல், கையை வெட்டிக் கொள்கிறார் பாண்டியர். அதன் பிறகு பொன்னாலான பொய்க்கையை வைத்துக்கொண்டு, தொடர்ந்து கதவுகளை பல்லாண்டு காலம் தட்டி, ராஜ்ய் பரிபாலனம் செய்ததாக செவிவழிச் செய்தி சொல்கிறது.
எனது கேள்விகள் (சிந்தனைகள்):
1. இதி நிஜக் கதையா? இதற்கு உரிய ஆதாரப் பாடல்/கல்வெட்டு இருக்கிறதா? நான் கேட்ட கதை எவ்வளவு தூரம் உண்மை?
2. ராஜா இடதுகை பழக்கம் உள்ளவரா? வலதுகையா? எந்தக் கையை வெட்டிக் கொண்டார்?
3. முதலில் கணவன் வெளியூர் செல்வதை காதில் போட்டுக் கொண்ட அன்றே, அவர்களின் கதவைத் தட்டி, தான் வீட்டை கண்காணிக்க ஸ்பெஷல் ஃபோர்சஸை நிறுத்துவதாக சொல்லாதது ஏன்?
4. கணவனின் குரலைக் கேட்டதும் ஓடி ஒளிந்தது ஏன்? அங்கேயே நின்று, ‘நான் அரசன். ரோந்து சுற்றுகிறேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கலாமே? (அப்படியும் கள்ளக்காதலனோ என்று புருஷன் நினைத்தால், எதற்கு எடுத்தாலும் சந்தேகிக்கும் பிராணியாகத்தானே இருப்பான்.)
5. தான் செய்த தர்மசங்கடமான காரியத்துக்கு, ராஜா கையை வெட்டிக் கொண்டு அனுதாப அலையை வீசச் செய்தது சரியா? அதற்குப்பின் பொன்னாலான கையை செய்து மாட்டி அழகு பார்த்துக் கொண்டதும் சரியா?
-பாஸ்டன் பாலாஜி
Posted in Uncategorized
சுட்ட படங்கள்
ஓரு வார ப்ரேக்
ரஷாபந்தன் வாழ்த்துக்கள்
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
இந்தியா ஜெயிக்குமா
எங்கே இருந்து ஆரம்பிப்பது என்பதுதான் கேள்வி
நரசிம்மராவ் கோட்பாடு
நவீன ராவணன்
மூலிகை பெட்ரோல் எப்பங்க வருது
விட்டால் பிடிக்க முடியாதது
நிலை இல்லாதது
மாபெரும் சபைகளில் நடக்கத் தேவை
மறக்கக் கூடாதது
தொலைக் கூடாதது
அழிக்கக் கூடியது
முகமூடி அன்பர்களின் சந்திப்பு
கெர்ரியின் எதிரிப்படகுக்காரர்கள்
Cat and Chicks
எங்கே செல்லும் இந்த பாதை
காதரினா கய்ஃப்
சல்மான் கானின் புதிய தோழி
நதியின் மேலே ஒரு நதி – நிஜமா
விவகாரமான நிழல் விவகாரம்
இந்திய கால்பந்து அணியின் புதிய கோச்கள்
ஒளி ஓவியர்
புத்திசாலி கணினி
பறக்கும் தட்டு
எதிர்பாராததை எதிர்பார்க்கவேண்டும்
எக்ஸ்.எம்.எல். புஷ்
சென்னை விளம்பரம்
லல்லு எக்ஸ்பிரஸ்
ரயில்வே அமைச்சரகத்தின் புது திட்டங்கள்
கொன்கன் ரயில்வேஸ்
பற்றற்றவரின் பற்றுகள்
லேடீஸ் ஸ்பெஷல் ஒழிக
பீலி பெய்
புகைபிடித்தல் ஒழிக
சிவில் எஞ்சினியர்களின் தேவை
மிண்ணனுப் பொறியாளர்களின் தேவை
கவிதைக்கேற்ற டக்கர் ஜிங் ஓவியம் – கூந்தல் அருவி
கவிதைக்கேற்ற டக்கர் ஜிங் ஓவியம் – மேகக் குதிரை
கவிதைக்கேற்ற டக்கர் ஜிங் ஓவியம் – மீன் விமானம்
கவிதைக்கேற்ற டக்கர் ஜிங் ஓவியம் – கற்பனைச் சிறகு
கவிதைக்கேற்ற டக்கர் ஜிங் ஓவியம் – தெளிந்த முகம்
பூச்சி அடிக்கறாங்க
தரையில் வாழும் கடல்சிங்கம்
நடைபாதை ஓவியம்
பூப்பந்து விளையாடலாமா
அனாதை கணினி
தவறு செய்பவர்களுக்கு புது தண்டனை
சிலந்தி மனிதனுக்கு பேகான் மருந்து
Posted in Uncategorized
















