உதிர்ந்த முத்துக்கள்


1. “இரண்டு கோடி, மூன்று கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து நூறு பேருக்கு இஸ்திரி பெட்டி, நான்கு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுப்பது சமூகப்பணி அல்ல.”

தொல். திருமாவளவன் (ஜூ.வி.)

2. “என்னைப் பிரித்துப் பார்க்காதீர்கள். நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்”.

தமிழக கம்யூ. தலைவர்களை நோக்கி கலைஞர் (தினகரன்)

3. “நடிகர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியும். எம்ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் ஆண்டபோதுதான் நாடு சுத்தமாக இருந்தது”.

விஜயகாந்த் (ரிப்போர்ட்டர்)

4. “நான் ஒட்டகத்தினுடைய முதுகை நிமிர்த்தலாம் என்று போனேன். ஒட்டகத்தினுடைய முதுகு நிமிரவில்லை. அவர் ஒரு கொக்கினுடைய கழுத்தைச் சரி செய்யலாம் என்று போனார். அதுவும் சரி செய்யப்படவில்லை.”

பெரியார் திடல் விழாவில் தன்னையும், கி.வீரமணியையும் பற்றி கலைஞர் (முரசொலி).

5. “பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோ ர் வீட்டுக்குச் சென்று கஞ்சி குடித்தால் வேறுபாடுகள் எல்லாம் சரியாகிவிடும்”

ராமதாஸ் (தினமணி)

6. “சிலர் என்னை உற்சாகமான பேர்வழி என்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சோர்வு, எரிச்சல் எல்லாம் வரும்”.

ப்ரீத்தி ஜிந்த்தா

7. “ஒரு டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அரசியல்வாதிக்கு பதவியும் அவசியம்”.

‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி (தமிழன் எக்ஸ்பிரஸ்)

8. “எனக்குத் துணை பிரதமர் பதவி கொடுத்தாலும் கூட மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்”.

ராம்தாஸ் (தினத்தந்தி)

9. “நான் அதிகம் சினிமா பார்க்கிறதில்லை”

மணி ரத்னம் (குமுதம்)

10. “திராவிடக் கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரானால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்”

தொல். திருமாவளவன் (மாலைமலர்)

நன்றி: இந்தியா டுடே – தமிழ்

5 responses to “உதிர்ந்த முத்துக்கள்

  1. விஜயகாந்த,ராமதாஸ் போன்றவர்களின் வரிகளில் ஏதும் கருத்த்ருப்பதாக தெரியவில்லை. சுயநலம் பல்லை இளிக்கிறது. தொல்.திருமாவளவனைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது.

  2. ராமதாஸ் குறித்த ஐகாரஸின் ‘துக்கடா’க்கள் படித்தீர்களா? திருமாவளவன் பேச்சில் ‘பொடி’ இல்லை; காரம் இருக்கிறது.

  3. இல்லையே பாபா, எங்கே? ராயரிலா? வலைப்பதிவிலா? ஐகாரஸின் சுட்டி இருக்கா?

  4. பாபா படித்தேன். உண்மைதான் :)))

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.