DNC – Day 1 Outtakes


Send Me

CNN.com – Clinton calls on voters to choose Kerry – Jul 26, 2004: “Clinton said when the United States went to war, when it needed to recover from the effects of war, when America needed to learn technology, Kerry always said, ‘send me.'”

இதே போல் கெர்ரி எப்பொழுது எல்லாம் ‘என்னை அனுப்பு’ என்று கூக்கூரலிட்டார் என்று க்ளிண்டன் முழுவதுமாக சொல்லவில்லை. அவற்றில் சில:

* சூப்பர் பௌலில் நடந்த ஜானட் ஜாக்ஸனின் புகழ்பெற்ற ஆடை கிழிப்பு போல், அடுத்த வருடம் ப்ரிட்னி ஸ்பியர்ஸுடன் ஆடிப்பாட ஆள் தேர்ந்தெடுக்கும்போது கெர்ரி சொன்னார்: ‘என்னை அனுப்பு’.

* ஜார்ஜ் மைக்கேல் திருமணம் செய்து கொள்ள ஆள் தேடியபோது கெர்ரி தூது விட்டார்: ‘என்னை அனுப்பு’.

* ஆன்னா நிக்கோல் ஸ்மித் தன்னுடைய செல்வத்துக்கு உரிய கணவனுக்கான சுயம்வரத்திற்கு கெர்ரி விண்ணப்பித்து சொன்னது: ‘என்னை அனுப்பு’.

* டென்னிஸ் மில்லர் தன்னுடைய சிரிப்பு வராத ஜோக்குகளுக்குப் பல்லை காட்ட ஆள் தேடியபோது, ஆபத்பாந்தவன் கெர்ரி: ‘என்னை அனுப்பு’.

* தமிழகப் பட்டிமன்றங்களில் எந்தப் பக்கம் நடுவர் முடிவு என்று பார்ப்போர் அறியாவண்ணம் தீர்ப்பு சொல்ல ‘யுவர் ஹானரை’த் தேடியபோது கெர்ரி ஆஜராகிறார்: ‘என்னை அனுப்பு’.

* டாட்டா, அம்பானிகளுக்குப் ‘மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி’ என்று வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர் அம்புடாதபோது, கெர்ரி விண்ணப்பிக்கிறார்: ‘என்னை அனுப்பு’.

* ட்ராக்டர் ஸ்டார்ட் செய்யக் கூடத் தெரியாமல் வாரம் தவறாமல் தன் வயல்வெளிக்கு செல்லும் புஷ்ஷிற்கு, ஆடு மாடு வளர்ப்பு முதல் அறுவடை அறுப்பு வரை கற்றுக் கொடுக்க வாத்தியார் வேலைக்குக் கெர்ரி மனுப் போடுகிறார்: ‘என்னை அனுப்பு’.

ரெண்டு வரி நோட்: ஹில்லாரி க்ளிண்டனின் ஆரவாரமான அறிமுகத்துக்கு நன்றி சொல்லும் விதமாக, பில் க்ளிண்டன் காதோடு ரகசியமாக ‘தாங்க் யூ’ சொல்லிச் சென்றார். நாளைய ஜே லீனோ முதல் ஜான் ஸ்டுவர்ட் இந்தக் காட்சியை(யும்) வைத்துக் கொண்டு படாத பாடு படுத்தப் போகிறார்கள். அவர்களுடைய டிபிகல் பன்ச்கள் இவ்வாறு இருக்கலாம்:

–> மோனிகாவின் காதலர், முன்னாள் ஜனாதிபதி, என் கணவர் — என்று அறிமுகப்படுத்தாதற்கு நன்றி கண்ணே!

–> நான்கு வருடம் கழித்து, அமெரிக்காவின் ‘ஃபர்ஸ்ட் ஜெண்ட்ல்மேன்’ என்று விளிக்கப் படப் போகும் க்ளிண்டன் — என்று கெர்ரியை மிரள வைக்காததற்கு நன்றி கண்ணே!

–> சின்னப் பையன் எட்வர்ட்ஸ் எனக்குக் கீழேயும் துணை ஜனாதிபதிக்குப் போட்டியிடுவார் என்று நம்புகிறேன் — என்று சொல்லாததற்கு நன்றி கண்ணே!

–> என்னை விட அதிகப் புத்தகங்கள் விற்றுப் பென்ஷன் வாங்கும் டைரிப் பதிவாளர் — என்று ‘என் வாழ்க்கை’யைக் குறிப்பிடாததற்கு நன்றி கண்ணே!

-பாஸ்டன் பாலாஜி

3 responses to “DNC – Day 1 Outtakes

  1. நானும் அந்த லைவ் டெலகாஸ்டை பார்த்தேன். எல்லா ஊர்லையும் அரசியல்வாதிங்க ஒரேமாறித்தான் இருக்காங்க !!!

  2. ஆனா.. நம்மூரு மாதிரி இல்லாம கொஞ்சம் டீஸண்டா இருந்துச்சு… அதனால நல்லாவே இல்லை :))

  3. கருத்தாழம் மிக்க, கொள்கைப் பிடிப்புகளை விளக்கும், செயல் திட்டங்கள் நிறைந்த பேச்சுக்களாக இருக்கும் என்று பார்த்த எனக்கு நல்ல ஏமாற்றம்.

    ஆனால், ஜனரஞ்சகமாகப் பாட்டு பாடி வோட்டு கேட்கும் ஜெ.ஜெ., கேள்வி பட்டியலிடும் சுவாமி, அன்று என்ன செய்தாய் என்று பத்தாண்டு முன்பு செய்த குதர்க்கங்களை நினைவு கூறும் கலைஞர் போன்றே, இந்த ஊர் அரசியல்வாதிகளும் மேடைப்பேசுகின்றனர்.

Santhosh Guru -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.