காதலன்


ஏதோப் பெருசுங்க அந்தக் காலப் படத்தை ரசிச்சு சொல்றீங்க. நான் எங்க காலப் பட பெருமையை சிலாகிக்கப் போகிறேன்.

இன்று மதியம் சன் டிவியில் என்ன படம் என்று சும்மா திருப்பிப் பார்க்க, ‘காதலன்’ வந்தார். இன்றும் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள், பாலகுமாரனின் வசனம் என்று கில்லி வேகத்தில் தூள் கிளப்பியிருக்கிறார் சங்கர். அங்கு ஆரம்பித்த காதலியின் ஹூக்கு சேகரிப்பது, ‘ஜீன்ஸ்’-இல் பபுள்-கம் உறை வரை வளர்ந்திருக்கிறது.

சின்ன வயது நக்மா, ‘சங்கமம்’ விந்தியா போல் சாணி மிதிக்காமல் நடனம் ஆடுகிறார். ரெஹ்மானின் ஜோரான பிண்ணனியில், பிரபுதேவாவின் எகிறித் தள்ளும் பரதமும், அந்தக் காலால் கோலம் பாடும் காட்சியமைப்பும், மதிய சியஸ்டாவை கெடுத்து விட்டது. இவ்வளவு சொல்லிவிட்டு, ‘ஞாயிறு என்பது…’ பாடும் எஸ்.பி.பி.யை சொல்லாமல் விட்டாமல் அடுத்த வேளையில் ‘அப்பு’ போன்ற படம்தான் கிடைக்கும். என்ன அருமையா நடிக்கிறார்! அந்தக் கால பாகவதர் போல் பாடுவதுடன் எஸ்.பி.பி. ஹீரோவாக ஆகி இருந்தால், கமல், சிவாஜிக்கு எல்லாம் சரியான சவாலாக இருந்திருப்பார்.

பாலகுமாரன் வேறு எந்தப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கார்? ‘காதலனில்’ இருந்து ஜெம்களில், என் நினைவில் இருந்து சில….

* கோபமோ, ஆத்திரமோ, ஆசையோ, காதலோ; அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடு; அதற்கப்புறமும் அதே எண்ணமும் வேகமும் இருக்கிறதா என்று பார்.

* மல்லி ‘ரகுவரன்’, காகாலால் க்ரிஷ் கர்னாடி’டம், “இப்ப நீதான் நான் சொல்றபடி கேக்கணும். நான் சொல்றதை நம்பறதைத் தவிர உனக்கு வேற வழியில்லை… நான் உனக்குக் கடவுள் மாதிரி. எனக்கு இன்னும் பணம் கொடு”.

* எஸ்பிபி: ‘எந்தப் பொண்ணைடா காதலிக்கறே? எதிர்த்த வீடா? பக்கத்து வீடா? நம்ம காலனியா?”

பிரபுதேவா: ‘காகர்லால்’

எஸ்பிபி: ‘காகர்லால் வீட்டுலே வேலை பார்க்கிறாளா? காகர்லால் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்காளா? காகர்லால் வீட்டுலே வேலை பார்க்கறவங்க பொண்ணா? என்னடா எதைக் கேட்டாலும் இல்லேங்கேறே… காகர்லால் பொண்ணையா காதலிக்கிறே!”

* காதல் எல்லா சக்தியையும் கொடுக்கும். காதல் எதை சாதிக்கவும் வெறியைத் தரும். காதலால் முடியாதது எதுவுமே கிடையாது. காதலிக்காக எதை வேண்டுமானலும் செய்து காட்டத் தயாராக இருக்கணும்.

* இந்த மாதிரி சேஷ்டைகளில் காட்டும் புத்திசாலித்தனத்தைப் படிப்பில் காட்டினால், எங்கேயோப் போயிடுவடா நீ

* எம்.ல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதால் செலவுதான் ஜாஸ்தி. நமக்கு என்ன லாபம்? வெடி வெடிக்கக் கம்மி பணம்தான் ஆகும். அதே சமயம் செத்தவங்களுக்காகக் காசியில் போய் பிண்டம் வைக்கவும் நான் இருப்பேன்.

* என்னை உனக்கு அவ்வளவு பிடுக்குமா? ஒரு நாளில் இவ்வளவு செஞ்சு அசத்தறியே… காட முட்டை, கிழங்குக் கறி, புடைவைத் தூளி, நிலக்கடலை ரோஸ்ட் என்று கேட்கக் கேட்கக் கொண்டு வந்து கொடுக்கிறயே!

மிஸ்ஸியம்மா-வில் இந்த மாதிரி தத்துவ டயலாக் கீதா சொல்லுங்க.

-பாஸ்டன் பாலாஜி

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages

3 responses to “காதலன்

  1. * கோபமோ, ஆத்திரமோ, ஆசையோ, காதலோ; அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடு
    >>
    When angry, count to 10 before you speak; if very angry, count to 100
    —Thomas Jefferson

  2. //பாலகுமாரன் வேறு எந்தப் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கார்?//

    முகவரி, உல்லாசம், பாட்சா போன்ற படங்களின் வசனங்களிலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும் தூறல்கள் உண்டு.

  3. பிங்குபாக்: கேடி - டிவித்திரை விமர்சனம் « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.