Purloining


நன்றி: ஆறாம்திணை.காம்



ஹி..ஹி.. படம் வரைவது எப்படி?கார்ட்டூனிஸ்ட் சுதர்ஸன்:

“சித்திரக்கலை பயில்வது சுலபம். வித்தையை எப்படியும் கற்றே தீருவேன் என்று ஆவல் அவசியம். சித்திரம் வரைய முற்படுவோர்களுக்கு மனித உருவங்களை முதன் முதலில் வரையும் போது கூச்சம், பயம் ஏற்படும். உருவம் சரியாக அமையுமோ அமையாதோ என்ற அச்சமே அது. அச்சத்தை அகற்றிடல் வேண்டும்.

ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் பற் பலவிதமான படங்கள் வாசகர் கவனத்தைக் கவரும். கதை படங்கள் (Illustration), கேலி சித்திரம் (Cartoon) தமாஷ் படம் (Humur Joke) ஹாஸ்யத் துணுக்குகள் (Funny Picture) முதலியன இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு.

பத்திரிகைகளில் வரும் தமாஷ் துணுக்குகளைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. சிலேடை ஹாஸ்யம், 2. சீஸன் ஜோக். 3. செய்தி சிரிப்பு, 4. சிரஞ்சீவித் துணக்கு, 5. சினிமா உலகம். இப்படி எத்தனையோ.”



கவிஞர் விக்கிரமாதித்யன்சந்திப்பு: சந்திரா

  • ‘பாரதி, பாரதிதாசனை மீறிய பிரமிள்’ என்று சமீபத்தில் நீங்க எழுதியிருக்கீங்க. பிரமிள் இவர்களை விடவும் பெரிய கவிஞனா?

  • நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

  • நவீன கவிஞர்கள் அக உலகத்தைப் பற்றித்தான் அதிகமாக எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

  • ‘வானம்பாடி’ கவிதைகளினால் கவிதை உலகத்திற்கு எந்த வளர்ச்சியுமே கிடையாதா?

  • இங்கு வாழ்வியல் சார்ந்து பேசுகின்ற கவிஞர்கள் மேற்கத்திய கவிதை போன்ற ஒரு அறிவியல் சார்ந்த தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடக்கூடியவர்களாகயில்லையே ஏன்?

  • ஈழத்துக் கவிதைகளிலிருக்கும் வெவ்வேறு தளங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

  • பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லாததற்குக் காரணம், அவர்களுக்குக் கவிதை வாசிப்பு இல்லாத காரணமா?



    உடுமலை நாராயண கவிராயர்தெ.மதுசூதனன்:

    “1933 -இல் சிதம்பரம் ஜெயராமன் கதாநாயகனாக நடித்த ‘கிருஷ்ணலீலை’ என்ற படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதுவதுடன் உடுமலையாரின் பயணம் தொடங்குகிறது. பெரியார் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்தார். இதனால் தனது கடைசி நாள் வரை திராவிட இயக்கத்தின் தீவிர பிரச்சாரகராகத் திகழ்ந்தார். ‘குடியரசு’, ‘திராவிட நாடு’ பத்திரிகைகளில் இவரது தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டன. திராவிட இயக்க மாநாடுகள் உடுமலையாரின் பாடலுடன்தான் துவங்கப்பட்டன.

    அண்ணாதுரை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ (1951) படத்தில் ‘ஓரிடந்தினிலே’ கருணாநிதியின் பராசக்தி (1952) ‘கா… கா.. கா..’ முதலிய புகழ் பெற்ற பாடல்களை எழுதினார். ‘நல்லதம்பி’யில் (1949) வரும் இந்திர சபா கூத்தும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத படைப்புகள். இவரது பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கருத்தாக்கம் ஓங்கி நிற்பது ‘சொர்க்க வாசலில்’ (1954) தான்.”

    ‘காட்டையும் மேட்டையும் உழுகாமப் போனா

    கஞ்சிக்கு வருமே டேஞ்சரு

    கட்டுப் பாட்டுக்குள் அடங்காதவர்கள்

    கட்சியில் -ருப்பது டேஞ்சரு

    ஓட்டுப் போடத் தெரியாவிட்டால்

    நாட்டுக் கதனால் டேஞ்சரு

    உலகம் போற்றும் உத்தமரானால்

    உயிருக்கே ரொம்ப டேஞ்சரு

    தன்னல மற்ற தியாகிகளுக்குச்

    சர்க்கார் பதவி டேஞ்சரு

    சர்க்கார் பதவி கொண்டவனுக்கே

    தாட்சண்யத்தால் டேஞ்சரு

    அண்ணன் தம்பியைப் பகைத்தவனுக்கு

    அடுத்தவராலே டேஞ்சரு

    அறிவில்லாதவன் எவனோ அவனுக்கு

    அவனே வெரிவெரி டேஞ்சரு’

    – ‘மாதர் குல மாணிக்கம்‘ (1956)

  • 3 responses to “Purloining

    1. Ever ‘purloined’ from ambalam? Love to have a few links! 😉

      -dyno

    2. Bala, thanks for the vikramathithyan link. A sane voice amongst the ever shouting tamil ilakiyavathigal

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.