இரண்டு சுந்தர்


கடந்த வாரம் இரண்டு பதிவுகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.

சுந்தரவடிவேல்: நாடக விமர்சனத்தை விட அவர் கிளம்பிய விதமும், விழாவில் நடந்த கூத்துக்களும் அனுபவித்த ஒன்று. ஒரு இடத்துக்கு செல்வதற்கு ஒன்பது மேப் எடுத்துக் கொள்வது; கடைசி நேரத்தில் மனைவியிடம் வரைபடத்தை சரி பார்க்க சொல்வது; அவர்கள் சரியாக சொன்னாலும் நான் தவறான வழியை எடுப்பது; எங்கு சென்றாலும் குழந்தைக்கு ஸ்பெஷல் சாப்பாடு எடுத்து செல்வது; கார் நூறைத் தொடுமா என்று வேகமாக ஓட்டி பார்ப்பது; மாமாவை (போலீஸின் செல்லப் பெயர்) பார்த்தவுடன் பம்முவது; என்று எனக்கு மட்டும் உரித்தான குணாதிசயங்களை சுவாரசியமாக விவரித்திருந்தார்.

சுந்தர்ராஜன்:’குழலூதி மனமெல்லாம்’ மற்றுமொரு நினைவுகளை அசை போட வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாச்சா, பொன். முத்துராமலிங்கத்தின் மகன்களுடன் படித்த ஸ்கூல் காலங்கள் நினைவுக்கு வந்தது. மாண்புமிகு மகன்களோடு ஊரை வலம் வருவதின் பலமே தனி. அப்போது முயற்சி செய்த கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்; கொஞ்ச காலம் கழித்து பிலானி மாணவிகளே தம் அடிக்கும் peer pressure-இனால் முயற்சி செய்த மென்தால்-More; ரம்மோடு சேர்ந்த ராத்மேனின் அனுபவமே தனி என்னும் பெங்களூர் சகாக்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தது எல்லாம் நிழலாடியது. ஏனோ, எதுவுமே வெற்றியடையாததால் வளையமும் விடத் தெரியாது; Patch அணிந்து கொள்ளும் பாக்கியமும் கிடையாது. ‘ஆட்டோகிராஃபில்’ போகிற போக்கில் பட்டியல் போட்டு சென்ற சேரனின் பாடலுக்கு சுந்தரை விட அழகாக யாராலும் பொழிப்புரை எழுத முடியாது!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.