Tag Archives: வாசிப்பு

The Perfect Insult for Every Occasion: Lady Snark’s Guide to Common Discourtesy

…the only way you can “crush annoying persons” is by being a model of anti-etiquette.
:::
Kemp culled weird words and phrases (e.g., omphaloskepsis, crangle, pupaphobia, joot balls, feculent) from books…
Find your vituperative voice

Her Perfect Insult offers step-by-step instructions for doling out sophisticatedly and obscurely worded wounding slights to everyone from “Persons Who Erroneously Believe Themselves to Be Better Than You” to your own family.

புத்தகம் குறித்து அறிய: Official Website of Lady Arabella Snark

க்விஸ் இன்ன பிற: Slang City


தொடர்பில்லாத இடுகை:
வேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர்.
:::
வசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிரமிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே.

How to be picky with blog posts? – Primer for selective reading

Surfing the Internet makes about as much sense as for, say, a biologist to read all the biology journals. You will never learn anything that way. No serious scientist does that .The literature is massive. You get flooded by it. A good scientist is one who knows what to look for, so you disregard tons of stuff and you see a little thing somewhere else. The same is true for a good newspaper reader. Whether it’s in print or on the Internet, you have to know what to look for. This requires knowledge of history, an understanding of the backgrounds, a conception of the way the media functions as filters and interpreters of the world. Then you know what to look for. And the same is true on the Internet.

What We Say Goes by Noam Chomsky

சற்றுமுன்னுக்கு எழுதியதின் தொடர்ச்சியாக இதை வைத்துக் கொள்ளலாம். கில்லிக்கு எவ்வாறு பதிவுகளை இடுகிறேன் என்னும் சொந்தக் கதையாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒரு வருட இறுதியில் எழுதியதன் அந்தாதியாகவும் தொடரலாம்.

1. In-depth ஆக எழுதுபவர்கள் மிக மிக முக்கியம். பங்கு வணிகத்துக்கு இன்னார்(கள்), விஞ்ஞானம்/அறிவியல், காபி குடித்தல், சிக்கனமாக வாழ்தல் என்று எடுத்துக் கொண்டதை ஆழமாக சூப்பர் ரின் போடுபவர்களைப் புத்தகக் குறியிடுங்கள். குறிச்சொற்களாக, ‘அன்றாடம்’, வாராந்தரி என்று உங்களுக்கு விருப்பமான அடையாளங்களைக் கொடுங்கள். அவ்வப்போது இந்த வலையகங்களில் இருந்து தொடுப்பு கொடுத்து வரவும்.

2. தமிழ்ப்பதிவுகளை அறிய தமிழ்மணம்/தேன்கூடு, ஆங்கிலப் பதிவுகளுக்கு இன்னொரு செய்தியோடை சேவை என்று வைத்துக் கொள்ளவும். தினசரி ஒரு முறை முழுமையாக மேய்ந்துவிடவும். தமிழ்மணத்தில் கடந்த 24 மணிநேரங்களில் எழுதியவை இருக்கின்றது. தேன்கூட்டிலும் தனிப்பட்ட விருப்பங்கள் மூலம் ஒரே பார்வையில் 50 தலைப்புகளை கவனிக்க முடியும்.

3. ஒவ்வொரு விதமான விஷயங்களுக்கு, ஒவ்வொரு கணக்கு தொடங்கவும். ப்ளாக்லைன்ஸ் என்றால் நண்பர்களின் பதிவுகள்; கிஞ்சா என்றால் விடுபட்டுப் போகும் சிலர்; கூகிள் ரீடரில் புகழ்பெற்ற பதிவர்கள்; ஃபீட் ரீடர் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்துவமாக பயன்படுத்தினால் குழப்பம் இன்றி கோர்வையாக வாசிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்யலாம்.

4. Blogroll என்பது முக்கியமான விஷயம். குறிப்பாக ஆங்கிலப் பதிவுலகத்தில் மேய இது இன்றியமையாதது. ஒருவரின் குறிப்பிட்ட இடுகை பிடித்திருந்தால், வித்தியாசமாக இருந்தால், பக்கவாட்டில் நோக்குங்கள். அவர் விரும்பிப் படிக்கும், கவனித்து நோக்கும் பதிவர் பட்டியல் கிடைக்கும். ஒவ்வொன்றாக உள்ளே சென்று மேலோட்டமாகவாவது வாசிக்கவும். சிலது கவராமல் போகலாம். ஓரளவு பிடித்ததை தாற்காலிகமாக செய்தியோடை வாசிக்கும் நிரலில் ‘அண்மையில் சேர்க்கப்பட்டவை’ போன்ற குறிச்சொல்லுடன் சேர்த்து, கவனித்து வரவும். (நான் இதற்கு ப்ளாக்பிரிட்ஜ் உபயோகிக்கிறேன்).

5. ஆங்கிலப் பதிவுலகுக்குள் நுழைவது எவ்வாறு? அமித் அகர்வால் கொடுக்கும் பட்டியலை துணைக்கு அழைக்கலாம். இன்டிப்ளாக் பரிந்துரைகளில் இடம்பெற்றவர்களில் துவங்கலாம்.

6. சென்ற #4 & #5 – ஆகிய இரண்டுமே புகழ்பெற்றவர்களையும் பெத்த பேர் பெற்றவர்களை மட்டுமே சுட்டும். புதியவர்களை அறிய உபயோகம் ஆகாது. இதற்கு பிரகாஷ் சொன்ன கருத்து பயன்படும்:

தமிழ்மணத்திலே இணைச்சுக்காம, சுமார் ஆயிரத்து ஐனூறு பதிவுகள் (அத்தனையும் ஆக்டிவ்) இருக்கிறது.. நான் மானிட்டர் செஞ்சபடி, ஒரு நாளைக்கு ஒரு புதுப் பதிவு துவங்கப்படுகிறது. ரெண்டுல ஒண்ணுக்குத்தான் தமிழ்மணம், தேன்கூடு இருக்க்றதே தெரியும். இது பின்னாலே திரட்டிகளில் இணைச்சுக்கலாம் இல்லாமப் போகலாம். இது எல்லாத்தையும் பார்த்து, கண்காணிச்சு, சேர்த்து திரட்டி ஒண்ணு ஆரம்பிங்க.

புதுசா வரக்கூடிய பதிவுகளை மானிட்டர் பண்ண ஒரு வழி. நுட்ப அறிவு இருந்தா, crawler எழுதிக்கலாம். இல்லாட்டா ஒரு எளிய வழிமுறை.

1. ஏதோ ஒரு feedreader கணக்கு.

2. blogsearch.google.com க்குப்ப் போய், ‘ நான்’, ‘எனது’, ‘என்’, ‘வணக்கம்’ என்று நான் வார்த்தைகளுக்கு தனித்தனியா blogsearch alert செட் செய்து கொள்ளவும் ( sort bydate). இந்த நான்கு வார்த்தைகள் இல்லாமல் யாரும் பதிவு ஆரம்பித்து எழுதமாட்டார்கள் என்பது லாஜிக். இந்த வார்த்தைகள் இல்லாமல் எழுதுகிற பரப்பிரம்மங்கள், பதிவர் என்கிற கேட்டகரியிலேயே வர மாட்டார்கள் 🙂

3. தினம் ராத்திரி, வர பதிவுகளைப் படிக்காமலேயே, add to reader வசதி மூலமாக feedreader இலே சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே சேர்ந்திருந்தால்,. லொள்ளென்று குலைக்கிற மாதிரி ரீடரை configure செய்து கொள்ளவும். that way you can avoid redundancy.

4. மாசத்துக்கு ஒரு முறை ஒபிஎம் எல்லாக எக்ஸ்போர்ட் செய்து கொள்ளவும்.

இது கில்லியின் டிரேட்சீக்ரட் :-). ஒரே மாசத்தில் மொத்த பதிவுகளும் உள்ள வந்துடும்/

7. தமிழில் எழுதும் அத்தனை பதிவுகளையும் கூகிளின் வலைப்பதிவு தேடலில் கண்டுகொள்ளலாம். இதே மாதிரி டெக்னோரட்டியும் பயனுள்ளது. அது பதிவர்களை தரம் பிரித்தும் காட்டுவதால், தேடல் முடிவுகளில் சுவாரசியமான இடுகைகளை அடையாளம் காண்பது எளிதாகும்.

7. (அ) இன்னொன்று ஃபர்ல், டெலிசியஸ், க்ளிப்மார்க்ஸ் போன்ற இடங்களில் யார் அதிகம் படிக்கப் பெறுகிறார்கள், எவ்வாறு குறிச்சொல்லாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தரம்/குணம்/மணம்/சுவை காட்டும்.

7. (ஆ) தமிழில் ரோல்யோ, யூரெக்ஸ்டர் போன்றவை இன்னும் பரவலாக பயன்படுத்த ஆரம்பிக்கப்படாததால், பொருத்தமில்லாத முடிவுகள் மாத்திரமே வருகின்றன. பிப்பல் நான் உபயோகித்ததில்லை.

7. (இ) வீடியோக்களை கண்டுகொள்வதற்கு யூட்யூப் தலை பத்து பட்டியல் அல்லாமல் வேறு வழிகளிலும் செல்லவும்.

8. எதைத் தேடுவது? – அன்றாடம் செய்தி படிக்கிறீர்கள்; சில பிரச்சினைகளை சொந்த அனுபவமாக உணர்கிறீர்கள். சினிமா வெளியாகியுள்ளதா… தேடலாம். நியூ யார்க்கில் சத்யாகிரஹா என்னும் தியேட்டர் அரங்கேறுகிறதா… தேடுங்க.

9. எது ‘புதுசு கண்ணா புதுசு’? – டிக், ரெடிட், நியூஸ்வைன், ஸ்டம்பிள் அபான் போன்றவை கொஞ்சம் சத்தத்துக்கும் சத்துக்கும் இடையே உள்ளதை பிரித்து அன்னப்பறவை ஆக்கும்.

10. தமிழில் தற்போதைக்கு மாற்று மட்டுமே ஓரளவு இதை நிரப்புகிறது. ஆங்கலத்திற்கு தேசிபண்டிட், ப்ளாக்பாரதி போன்ற பரிந்துரைத் தளங்களை நம்பியிருக்கிறேன்.

11. மீண்டும் #1-ஐ பார்க்கவும். மற்றவருக்கு தேவை ஆழம்; இந்த மாதிரி தெரிவுகள் தளத்திற்கு தேவை அகலம். ஒரே மாதிரியான விஷயங்களே தொடர்ச்சியாக காணக்கிடைத்தால்; கிட்டத்தட்ட சம்பந்தமுள்ள தலைப்புகளை அடுத்தடுத்து பார்த்தால் அலுத்துப் போகும். 256 தொலைக்காட்சி கன்னல் இருப்பது போல் பல்வண்ணக்கோர்வை தேவை.

12. க்ரீமி லேயர், பிரதிபா பட்டீல், ஃபிட்னா என்று விவகாரமான விஷயங்களில் பன்முகம் என்ற பெயரில் மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனைக்கு எதிர் சிந்தனை என்று மிக்சர் கொடுக்க வேண்டும்.

13. விடாது கருப்பு, டோண்டு, என்று எல்லாவிதமான பதிவர்களும் இடம்பிடிக்க வேண்டும்.

14. ஒரே பதிவரின் இடுகைகளே மீண்டும் மீண்டும் இடம்பிடிக்கக் கூடாது. ஒரே பரிந்துரையாளரே தொடர்ந்து பதிவுகளை பரிமாறக் கூடாது. இரண்டும் #11-க்கு வழிவகுக்கும்.

15. கொடுக்கும் இரண்டு வரி காமென்ட்களில் துள்ளல் வேண்டும். ‘செத்தவன் கையில் தூர்தர்ஷன் ஷெனாய’ தந்தது மாதிரி அருஞ்சொற்பொருள் கூடாது.

16. எட்டேகால் கிலோபைட்டுக்கு மேல் எழுத்தைக் கண்டால், பொறுமையாக படிக்கவும்; அதற்கான பொருத்தமான பத்தியை கண்டுபிடிக்கும் அவகாசமும் — கொடுக்கும் வேலையில் அமர்ந்திருக்க வேண்டும்.

பிற்சேர்க்கை:

17. சமீபத்தில் சேர்க்கப்பட்ட பதிவுகளை தமிழ்மணமும் தேன்கூடும் பட்டியலிடும். அண்மையில் நுழைந்தவர்களைப் படித்து அறிமுகம் தருவது ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்; வெரைட்டியும் கொடுக்கும்; புதியவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் பரந்துபட்ட வாசகர் வருகைக்கு வித்தாகவும் அமையும்.

என்ன படிப்பது, எப்படியெல்லாம் வாசிப்பது, எங்கே வைத்துக்கொள்வது, எவரைப் பிடிப்பது, எப்பொழுது என்று நேரங்காலம் பார்ப்பது என்றெல்லாம் ஓரளவு சொல்லிவிட்டேன்.

எதற்காக படிக்கணும்? எதைத் தேர்ந்தெடுக்கணும்??

இரன்டுக்குமான விடை தெரிந்தால், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… அந்த பிரும்ம இரகசியத்தை சொல்லிக் கொடுங்க.

இரண்டுக்குமான விடை தெரியாதவர்கள், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… கில்லிக்கான பரிந்துரையாளர் ஆக அழைப்பு இடுகிறேன். கோஷ்டியில் சேர சரியான நபர் நீங்கதான்!

எங்கேயோ படித்த ஜோக்

ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார்.

‘சார் நீங்க கேஜிபியா?’

‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.

“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.

“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்

“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”

“இல்லைய்யா”

“உங்க உற்றார் உறவினர் …”

“இல்லைய்யா இல்லை”

இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”

Bolshevescent by Peter Gizzi

You stand far from the crowd, adjacent to power.
You consider the edge as well as the frame.
You consider beauty, depth of field, lighting
to understand the field, the crowd.
Late into the day, the atmosphere explodes
and revolution, well, revolution is everything.
You begin to see for the first time
everything is just like the last thing
only its opposite and only for a moment.
When a revolution completes its orbit
the objects return only different
for having stayed the same throughout.
To continue is not what you imagined.
But what you imagined was to change
and so you have and so has the crowd.

from The Outernationale, © 2007 by Peter Gizzi, published by Wesleyan University Press.

நன்றி: Poets.org – Poetry, Poems, Bios & More – Bolshevescent

வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

  • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
  • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
  • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

  1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
  2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
  3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
  4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்’ நாவலிலிருந்து (கதிர்)

ஆரம்ப காலத்தில் இப்படித்தான் கடல் கொந்தளித்ததாம். எல்லோரும் உயிர் பிழைக்க எதிலெல்லாமோ புகுந்து கொண்டார்களாம். ஓர் ஆணும் பெண்ணும் மட்டும் தங்களுடைய வீட்டிலிருந்த சுரைக் குடுக்கைக்குள் புகுந்து கொண்டார்களாம்.

உலகத்திலுள்ள மரம் செடி கொடி உயிரினங்கள் மற்ற பொருட்கள் எல்லாம் அழிந்துவிட்டதாம். ஆனால் சுரைக்குடுக்கைக்கு மட்டும் எந்தச் சேதமும் ஏற்படவில்லையாம். வெள்ளம் வடியும் வரை தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்ததாம். சுரைக்குடைக்குள்ளிருந்த ஆணும் பெண்ணும் பலநாள் பட்டினியால் குடுக்கைக்குள்ளேயே மயங்கிக் கிடந்தார்களாம்.

வெள்ளம் வடிந்தபோது சுரைக்குடுக்கை ஏதோ இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதாம். நன்றாக வெயில் எரித்த போது, அந்த வெயிலின் சூட்டால் சுரைக்குடுக்கை வெடித்து அந்த ஆணும் பெண்ணும் வெளியே வந்தார்களாம்.

பாறைகளுக்கு நடுவில் கையில் வேல் வைத்துக் கொண்டு நின்ற ஒரு சாமியின் சிலை மட்டும்தான் இருந்ததாம். உலகத்தில் வேறு எதுவுமே இல்லையாம். அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து அவர்கள் மூலமாகப் பெருகியவர்கள்தாம் மனிதர்கள் என்பது இந்த சனங்கள் அடிக்கடி சொல்லும் கதை.


தொட்டுக்க நகைச்சுவை: ஷாலினி, சென்னை.

‘தாத்தா…தாத்தா… நான் ஒண்ணு கேப்பேனாம்…நீ கரெக்ட்டா சொல்லிடுவியாம்…’

‘என்ன சொல்லு?’

‘ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதிச்சாம். ஆமை 80 % எடுத்துச்சாம். முயல் 81 % எடுத்துச்சாம். ஆனா ஆமைக்குத்தான் ‘காடு‘ பொறியியல் கல்லூரில அட்மிஷன் கிடைச்சுச்சாம்….ஏன்?…சொல்லு’

‘ஆங்….தெரியலையே’

‘நீ ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்ப வந்த லெசன்ல முயலுக்கும் ஆமைக்கும் நடந்த போட்டில யார் ஜெயிச்சது?’

‘ஆமை’

‘அதான் தாத்தா…ஆமைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில அட்மிஷன் கிடைச்சிடுச்சி…இதுகூடத் தெரியலை…சரியான மக்கா இருக்கியே?…’

கலை, நினைவு, பெண் – கவிதைகள்

தனிமையின் இசை: தூங்கும் புத்தகம் – அய்யனாரின் கவிதை படித்தவுடன் சமீபத்தில் வாசித்த இந்தக் கவிதையின் ஒத்திசைவு பகிர வைக்கிறது

மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன

She Put on Her Lipstick in the Dark
By Stuart Dischell

I really did meet a blind girl in Paris once.
It was in the garden of a museum,
Where I saw her touching the statues.
She had brown hair and an aquamarine scarf.

It was in the garden of the museum.
I told her I was a thief disguised as a guard.
She had brown hair and an aquamarine scarf.
She told me she was a student from Grenoble.

I told her I was not a thief disguised as a guard.
We had coffee at the little commissary.
She said she had time till her train to Grenoble.
We talked about our supreme belief in art.

We had coffee at the little commissary,
Then sat on a bench near the foundry.
We talked about our supreme belief in art.
She leaned her head upon my chest.

We kissed on a bench near the foundry.
I closed my eyes when no one was watching.
She leaned her head upon my chest.
The museum was closing. It was time to part.

I really did meet a blind girl in Paris once.
I never saw her again and she never saw me.
In a garden she touched the statues.
She put on her lipstick in the dark.

I close my eyes when no one is watching.
She had brown hair and an aquamarine scarf.
The museum was closing. It was time to part.
I never saw her again and she never saw me.


Walking

by Stuart Dischell

Walking, late
at night or just around dawn,
I stop for a few minutes outside
a friend’s house and wonder
about him and his wife upstairs sleeping,
not trying the weather like me.

I know they keep usual hours;
in their house down the hill from me,
I see their lights go out most midnights
and could set my watch by them.
Their sleepiness must be a marriage
I’ve never experienced. I wish their lights
would go on to invite me inside.

I watch two squirrels cross their lawn,
frisk with the cat, and leave
as the newsboy approaches.
I wouldn’t want a child to think I’m strange.
(Is it strange to be awake
while most of the community turns
for another hour of sleep?)

I wish I walked in somebody’s dream.
In somebody’s dream I could sleep.

Copyright © Stuart Dischell

Kirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்

அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

நன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.

முதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.
Host unlimited photos at slide.com for FREE!

ஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா?) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂

நம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.

இணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.


ராட்டடூயி – சிறுகதை

முதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.

வீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.
Host unlimited photos at slide.com for FREE!

லீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.

இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.

இதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.

Host unlimited photos at slide.com for FREE!

Dinamani – Tamil Books: Mini Reviews

1. சித்தர் பாடல்கள் தொகுதி 1&2 மூலமும் உரையும் – அறிவொளி (SIDDHAR PADALGAL VOL 1 & 2 MOOLAMUM URAIYUM)

சிவவாக்கியர் முதல் அகப்பேய் சித்தர் வரை உள்ள அனைத்து சித்தர்களின் பாடல்களுக்கும் மூலபாடல்களுடன் தெளிவுரை மற்றும் விளக்கவுரையுடன் அமைந்துள்ளது,
2. அன்னா கரீனினா

லியோ டால்ஸ்டாயின் படைப்புகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறத அன்னா கரீனினா எனும் நாவல், இதனை பேராசியர் நா,தர்மாராஜன் மிகவும் எளிமையாக மொழிபெயர்த்துள்ளார்,

3. குருவும் சீடனும் (ஞானத் தேடலின் கதை) Rs.100.00
நித்ய சைதன்ய யதி; தமிழில்: ப.சாந்தி

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 192

4. கள்ளர் சரித்திரம் Rs.65.00
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 128

5. விசும்பு (அறிவியல் புனைகதைகள்) Rs.85.00
ஜெயமோகன்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 150

6. கு.அழகிரி சாமி கதைகள் Rs.275.00
சாகித்திய அக்காதெமி
பதிப்பாளர்: சாகித்திய அக்காதெமி

7. மகாவம்சம் Rs.100.00
ஆர்.பி. சாரதி
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 240

8. இரா. முருகன் கதைகள் Rs.350.00
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 848
9. ஜமா இஸ்லாமியா Rs.60.00
பா. ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 140

10. அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள் Rs.60.00
பா.ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 127

11. நேநோ Rs.100.00
சாரு நிவேதிதா
பக்கங்கள்: 212

12. மஞ்சள் வெயில் Rs.65.00
யூமா.வாசுகி
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 133

13. சிறை அனுபவம் Rs.30.00
கி.சடகோபன்
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 72

14. கானல் நதி Rs.200.00
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374

15. கலகம் காதல் இசை Rs.70.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 120

16. விழித்திருப்பவனின் இரவு Rs.110.00
எஸ்.ராமகிருஷ்ணான்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 192

17. உறுபசி Rs.75.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 135

18. ஒற்றையிலையென Rs.40.00
லீனா மணிமேகலை
பதிப்பாளர்: கனவுப் பட்டறை

19. ஆதியில் சொற்கள் இருந்தன Rs.30.00
அ.வெண்ணிலா
பதிப்பாளர்: மதி நிலையம்

20. தப்புத் தாளங்கள் Rs.90.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 152

21. ராஸ லீலா Rs.400.00
சாரு நிவேதிதா

பதிப்பாளர்: உயிர்மை – பக்கங்கள்: 658

22. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் Rs.100.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: கனவுப் பட்டறை
பக்கங்கள்: 200
23. அரவான் Rs.90.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 168

24. தமிழவனின் ”வார்ஸாவில் ஒரு கடவுள்”

25. ஜீ.முருகனின் ” மரம்”

26. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ” கன்யாவனங்கள்” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

27. சி.வி. பாலகிருஷ்ணணின் ”திசை” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

28. எஸ். செந்திகுமாரின் ” ஜீ. செளந்தர ராஜனின் கதை”

29. வா.மு.கோமுவின் ”கள்ளி”

30 எஸ். ராமகிருஷ்ணனின் ” யாமம்”


நிழல்கள்: புத்தகக் காட்சி – என் க�கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு


1. நான்,வித்யா – வித்யா – கிழக்கு பதிப்பகம்
2.எஸ்.புல்லட் – அய்யப்ப மாதவன் – தமிழினி
3.குட்டிக்கதைகள் – கண்ணதாசன் – வானதி
4.60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை
5. ஹைக்கூ ஒரு புதிய அனுபவம் – சுஜாதா – உயிர்மை
6.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டிச்சித்தன் – அன்னம்
7.சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளர் மரக்கன்று – யுமா.வாசுகி – அகல்
பதிப்பகம்
8.ரத்த உறவு – யுமா.வாசுகி -தமிழினி பதிப்பகம்
9.ஒரு இரவில் 21 சென் டிமீட்டர் மழை பெய்த்தது – முகுந்த் நாகராஜன் – உயிர்மை
10.விடிந்தும் விடியா பொழுது – தேவதேவன் – தமிழினி
11.கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் – மீரா -அகரம் வெளியீடு (பத்தாவது முறையாக
வாங்குகிறேன்!!!!!)
12.மேகதூதம் – காளிதாசன் – சாந்தி பிரசுரம்
13.உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி -வ.வு.சி நூலகம்
14.வனப்பேச்சி – தமிழச்சி தங்கபாண்டியன் – உயிர்மை
15.ஒளியறியாக் காட்டுக்குள் – தேன்மொழி தாஸ் – காலச்சுவடு
16.மஞ்சள் வெயில் – யுமா.வாசுகி – அகல்
17.வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யுமா.வாசுகி -தமிழினி*குறும்படம்:
*
யாதும் ஊரே யாவரும் கேளீர் – கவிஞர். தேவதேவன் பற்றி பிரான்ஸிஸ் கிருபா இயக்கிய
குறும்படம்.*


கடகம்: சென்னை புத்தக கண்காட்சி 2008:
கட்டுரைத் தொகுப்பு

1. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
– நாஞ்சில் நாடன் ; தமிழினி பதிப்பகம் 2.கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
(பல்வேறு இலக்கியவாதிகள் தங்களைக் கவர்ந்த நூல் பற்றி எழுதிய கட்டுரைகள் )
-அ முத்துலிங்கம்; உயிர்மை பதிப்பகம்3. டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் சென்னை-90; ஜெயராம் அச்சகம் கவிதை தொகுப்பு
1. ஒரு இரவில் 21 செண்ட்டி மீட்டர் மழை பெய்தது
முகுந்த் நாகராஜன்; உயிர்மை பதிப்பகம்2. ஒரு கிராமத்து நதி
சிற்பி; விஜயா பதிப்பகம்3. பாம்புக்காட்டில் ஒரு தாழை
லதா; காலச்சுவடு பதிப்பகம்

நாடகம்

1. என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
செழியன்; உயிர்மை பதிப்பகம்

நாவல் /புதினம்

1.பாலிதீன் பைகள்
இரா நடராசன்

2. லங்காட் நதிக்கரை
அ. ரெங்கசாமி; தமிழினி

3. வாசந்தியின் சிறை
பம்பாய் கலவரங்களின் பின்னணியில் எழுதப்பட்டது

4. தகப்பன் கொடி
அழகிய பெரியவன்

5. பாழி
கோணங்கி

6. கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்; காலச்சுவடு பதிப்பகம்

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ஆட்டுக்குட்டிகள் அளித்த தண்டனை
(சிறுகதை தொகுப்பு)

வாழ்க்கை சரிதம்

1.என் சரித்திரம்
டாக்டர் உ.வே.சா

2. நளினி ஜமீலா
காலச்சுவடு பதிப்பகம்

சிறுகதை தொகுப்பு

1. பின் சீட்
ஜெயந்தி சங்கர்
மதி நிலையம்

2. ஒரு கப் காப்பி
இந்திரா பார்த்தசாரதி

3. மெளனியின் ‘அழியாச்சுடர்’

பயணம்

1. கடலோடி
நரசய்யா


1. நதியின் கரையில் – பாவண்ணன் -எனிஇந்தியன்
2. உள்ளுணர்வின் தடத்தில் – ஜெயமோகன் – தமிழினி
3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
4. மகாவம்சம் – ஆர்.பி. சாரதி – கிழக்கு
5. தமிழ் மொழி வரலாறு – தெ.பொ.மீ.களஞ்சியம் ச.செயப்பிரகாசம் – காவ்யா
6. நள்ளிரவில் சுதந்திரம் – Dominique Lapierre and Larry Collins , தமிழில் : வி.என்.ராகவன் – மயிலை பாலு’ – அலைகள் வெளியீட்டகம்
7. இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) – சுபாஷ் சந்திரபோஸ் – அலைகள் வெளியீட்டகம்
8. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் – சு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்


தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal1.வெள்ளிப் பாதசரம்
எழுத்தாளர் : இலங்கையர்கோன்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
2.வேடந்தாங்கல் – கவிதைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர3.சூரியப் பொருளாதாரம் – கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர4.உனையே மயல் கொண்டு
எழுத்தாளர் : டாக்டர் என்.எஸ்.நடேசன்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
5.காவேரி கதைகள் – 1
எழுத்தாளர் : காவேரி
பக்கம் : 312
விலை : 250.00 In Rs
வெளியீடு : மித்ர6.காவேரி கதைகள் – 2
7.பெருவெளிப் பெண்
எழுத்தாளர் : ச.விசயலட்சுமி
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
8.பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
9.உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
தொகுப்பாசிரியர் : ஜெ.கங்காதரன்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
10.எண்ணக் கோலங்கள்
எழுத்தாளர் : எஸ்.சந்திரபோஸ்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
11.பின்னிரவுப் பெருமழைஉணர்ச்சிக்குவியலான கவிதைகளின் தொகுப்பு.எழுத்தாளர் : மு.ரிலுவான்கான்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ரதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal: “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 150
எழுத்தாளர் : பா.ஜீவசுந்தரி
பதிப்பகம் : மாற்று

* * * * *
கிறுக்கி
விலை : 75.00
பக்கங்கள் : 160
பதிப்பாசிரியர் : கோ.பழனி
பதிப்பகம் : மாற்று

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:”1084 ன் அம்மா”
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
விலை : 75.00
பக்கங்கள் : 152
பதிப்பகம் : பரிசல்

கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்பிரமணியன்
விலை : 50.00
பக்கங்கள் : 104
பதிப்பகம் : பரிசல்

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:
“முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள்”
விலை : 80.00 In Rs
பக்கங்கள் : 168
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் : தோழமைஅரவாணிகள்
விலை : 175.00 In Rs
பக்கங்கள் : 368
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை

பாரதி – ஒரு சமூகவியல் பார்வை
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர்கள் : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்
பதிப்பகம் : தோழமை

மரணம் – என் தேசத்தின் உயிர்

விலை : 45.00 In Rs
பக்கங்கள் : 72
எழுத்தாளர் : இனியன்
பதிப்பகம் : தோழமை

காற்றின் பக்கங்கள்
விலை : 120.00 In Rs
பக்கங்கள் : 224
கட்டுரையாளர் : மணா
பதிப்பகம் : தோழமை

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பழ.நெடுமாறன் நேர்காணல்
விலை : 50.00 In Rs
பக்கங்கள் : 96
நேர்காணல் : மணா
பதிப்பகம் : தோழமை

வசந்த காலத்திலே….. ஜார்ஜி குலியா
(Georgij Dmitrijevič Gulia)
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 120
தமிழில் : தி.க.சி
பதிப்பகம் : தோழமை
* * * * *

ஒரு கோப்பை தண்ணீர் த்துதவமும் காதலற்ற முத்தங்களும்
பெண் விடுதலை குறித்த மார்க்சியப் பார்வைகள்
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை


Book Selections by Boston Globe – 2007 « Snap JudgmentHost unlimited photos at slide.com for FREE!


Tamil Books – Reviews, Listing from Dinamalar « Tamil Newsdinamani_books_intro_reviews_tamil_publishers.jpgdinamani_books_new_literature_tamil_authors_quick_reviews.JPGDinamani Books List Publishers Quick Reviews Tamil Ilakkiyamnew_tamil_books_dinamani_thursday_issue_quick_reviews.jpgDinamani Books Thursday Critic Tamil Literature LibraryDinamani Books Reviews Tamil Literature Readersdinamani books review Listing Tamil Literaturedinamani_books_reviews_critiques_quick_library.jpgdinamani_books2.jpgdinamani_books_listing1.jpgHost unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Books – 1

Dinamani Book reviews 2