அட… இப்படியும் பொதுமைப்படுத்தலாமா 🙂
மனைவிக்கு ரசிக்கும் 😀
நன்றி: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe
அட… இப்படியும் பொதுமைப்படுத்தலாமா 🙂
மனைவிக்கு ரசிக்கும் 😀
நன்றி: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய கேலிச்சித்திரங்களுக்கு….
கிளிக்கித்து ரசியுங்கள்….
http://politicalhumor.about.com/od/election2008/ig/2008-Election-Cartoons/
எந்த அமெரிக்க தேர்தலிலும் இல்லாத வகையில் 2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை நவம்பர் தேர்தலுக்கு முன் 18 வயதை எட்டும் இளைஞர்களுக்கும் முன்னோட்டத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி உள்ளது.
இளைஞர்களை கவரும் விதமாகவும், இணையம் மூலம் மக்களை அடையவும் களத்தில் இயங்கும் எல்லா போட்டியாளர்களும் தங்களுக்கென வலைத்தளங்களை உருவாக்கியுள்ளனர்.
அரசியல், உலகம், பொருளாதாரம், சமூகம் என எல்லா துறைகளிலும் தங்கள் நிலைப்பாட்டை போட்டியாளர்கள் இந்தத் தளங்களில் காணத் தருகின்றார்கள்.
போட்டியாளர்களுக்கென தனி You Tube பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
பாரக் ஒபாமா – http://www.barackobama.com/index.php
ஹிலரி கிளிண்டன் – http://www.hillaryclinton.com/
ஜான் மெக்கெயின் – http://www.johnmccain.com/
மைக் ஹக்கபி – http://www.mikehuckabee.com/
You Tube பக்கங்கள்
பாரக் ஒபாமா You Tube பக்கம் – http://www.youtube.com/user/BarackObamadotcom
ஹில்லரி கிளிண்டன் You Tube பக்கம் http://www.youtube.com/user/hillaryclintondotcom
மைக் ஹக்கபியின் You Tube பக்கம் – http://www.youtube.com/profile?user=explorehuckabee
‘நான் வலைப்பதிகிறேன்’ என்றவுடன் எழும் கேள்வி: ‘என்னவெல்லாம் பதிவீர்கள்?’
அதற்கு விடையளிக்கும் முயற்சி.
Monologue – அனுபவம் சார்ந்த ஆழ்ந்த சுய சிந்தனை: புனைவு போல் ஒழுக்கமான நடை வேண்டும். அடைப்புக்குறிக்குள் சொந்த கிறுக்கல் எல்லாம் எட்டிப் பார்க்காது. சுவாரசியம் குன்றாமல் பறக்கும். தன்மையில் வந்திருக்கும். நிஜம் போல் காட்சியளிக்கும். திடீர் திருப்பம் தரும் முடிவு இல்லாவிட்டாலும் பளிச்சென்று இறுதிப்பாகம் இருக்கும்.
இவற்றைக் காண்பது வாரிசாக இல்லாத அரசியல்வாதியாக இருந்தும் வெற்றியடைவதைப் போல கொஞ்சம் அரிய வகை.
இந்த நடையை பெரும்பாலும் செல்வராஜ் பதிவுகளிலும் ஜெயமோகன் எழுத்துகளிலும் கண்டிருக்கிறேன்.
Portrait – நிகழ்வுகளை கண் முன்னே நிற்க வைத்தல்: தேர்ந்த விவரிப்பு மூலம் புள்ளிவிவரம் கூட உருவம் பெறும். நம்பகத்தன்மை கோரிடும். சித்திரமாக விவரங்கள் பொதிந்திருந்தாலும் எளிதில் அணுகமுடியும் பாவம் கொண்டிருக்கும். உணர்ச்சிகளை விட சம்பவங்கள் கொண்டு ஈர்க்கும்.
எளிது போல் தோன்றினாலும் சன் நியூஸின் நேர்த்தியும் பொறுமையும் வேண்டும். பரபரப்புக்கு ஆசைப்படாத மனம் வாய்க்கும் நேரங்களில் முயற்சிப்பது உசிதம்.
பத்ரியை மனதில் வைத்து எழுதிய மாதிரி பட்டாலும் செல்வன், நாராயண் ஆகியோரை எடுத்துக்காட்டலாம்.
Phenomenology – நடந்ததை தத்துவார்த்தமாக தன்வயமாக்குதல்: சாட்சிபூதமாக இருக்கும். செய்திகளை, ஆக்கங்களை சொந்தக் கருத்துடன் முன்வைக்கும். உளவியல் சார்ந்த உலகளாவிய பார்வை கொடுக்கும். பழகிப்போகும் வரை அணுகுவதற்கு கரடுமுரடாகத் தடுக்கும்.
விகடன், குமுதம், விட்டலாச்சார்யாவை விட்டுவிட்டு காலச்சுவடு, புதிய *** என்று வாசித்தால் எழுத்துப்பயிற்சி கிடைக்கும். அகரமுதலி வைத்துக் கொண்டு எளிய வார்த்தைக்கு சப்ஸ்டியூட்டாக சங்கச்சொல் போடுவது சாலச் சிறந்தது.
டிஜே, அய்யனார், சுகுணா திவாகர் என்று நிறைய இலக்கியவாதிகளை சொல்லலாம்.
Synergy – உரையாடல், ஊக்கத்திரி: தனித்தனி கூண்டுகளாக இருக்கும் காய்களை அவியலாக்கும் ஜாம்பவான் சமர்த்தர். அனுமன்களை அடையாளம் காண வைக்கும் தூண்டில் வீசும் பதிவுகள் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் இடத்தை சுறுசுறுப்பாக்கும் திட்டம் தீட்டும். தனி மரங்கள் நெடிந்துயர விரும்பும் தோப்பில் பல மரம் கண்ட தச்சராய் வெட்டி வீழ்த்தாமல், பறவையாய் பரஸ்பரம் அறிமுகம் கொடுக்கும்.
வேதாளங்கள் நிறைந்த உலகு என்பதால் மனந்தளராத விக்கிரமாதித்த மனப்பான்மை வேண்டும். பெண்களாய் இருந்தால் இயல்பாகவே அமைந்த மானகை/மேலாண்மை குணாதிசயங்கள் கைகொடுக்கும். வேற்றுமைகளை அடுக்குவதை விட ஒற்றுமைகளைக் கண்டறிந்து ‘அட’ போடத் தெரிந்திருக்க வேண்டும்.
Mongering – வாங்க, விற்க: சொந்த விருப்பங்கள் சார்ந்து இயங்கும். சில சமயம் சிலரால் வெறுப்பை உமிழ்வதுடன் கோர்த்துவிடப்பட்டாலும், அதிகம் மாறுபடாத வாதங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். வாசகரை அச்சுறுத்தும். விதைக்க விரும்புவதை எப்பாடுபட்டேனும் விற்றே தீரும். பொருத்தமான ஒப்புமைகளுடன் சம்பந்தமில்லாத உருவகங்களும் நுழைந்திருக்கும்.
இவற்றை இலக்கியப்ப்பதிவுகளுடன் குழப்பிக்கொள்ள கூடாது. நியாய உணர்ச்சி இல்லாத லாஜிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக எக்காரணம் கொண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை உண்டு என்பதை மறக்கவேண்டும்.
எல்லாப் பதிவுகளும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேற்ப அனைவரிலும் ஓரிரு இடுகையாவது இப்படி இருக்கும்.
Proposal – வேண்டுகோள், விண்ணப்பம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு: திட்டமிடல் தென்படும். அனுபவத்தில் கிடைத்த தொலைநோக்கு பார்வை இருக்கும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அறுதியிட்டு செய்யக்கூடிய ஆலோசனை நிறைந்திருக்கும்.
இதற்கு உதாரணமாக தருமி, ரவிசங்கர் போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
Replies – பதில், பிறர் பதிவு சார்ந்து எழுச்சி பெற்ற கருத்து தொகுப்பு: புரிகிற மாதிரி நச்சென்று நாலு வார்த்தை மட்டுமே இருந்தாலும், அதிரடியாக இருக்கும். அதுவரை ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது சேணம் கட்டிய குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். மறுமொழிகள் தருவதற்கு கூச்சப்படார்.
‘வஸ்தாது தோஸ்துங்க புழங்குதே… ரப்சர் ஆயிடுமே’ என்றெல்லாம் அஞ்சாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எனினும், எப்பொழுதும் எதிர்த்தே பேசிக் கொன்டிருந்தால் வவ்வால் பதிவர் என்று நாமகரணமிடப்படும் அபாயம் இருப்பதால், தெளிவாக அறிந்த விஷயங்களில், கன்ஸிஸ்டன்ட் கொள்கையில் உறுதியாக இருக்கத் தெரியவேண்டும்.
பின்னூட்டங்கள் பதிவாக சிலர் வைத்துக் கொண்டிருந்தாலும் உடனடியாக தோன்றுபவர்கள் கல்வெட்டு பலூன் மாமா, இகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த்.
Log – பதிவு: அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவுகள்தான் என்றாலும், டைரி என்பதற்கு அணுக்கமாக இருக்கும். அயர்ச்சியுறும் அளவு விவரம் காணப்படும். கருத்துத்திணிப்பு, அறச்சீற்றம் எல்லாம் நிகழாமல் அன்றாட வாழ்வை விவரிக்கும். சுவை, லயிப்பு போன்றவற்றை விட நம்பகத்தன்மை, சொந்த விஷயம், நிஜம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.
ஸ்ரீராமதாஸ், மா சிவகுமார் என்று எண்ணி ஒரு கைக்குள் அடங்கும் அரிய சிலர் உண்டு.
இன்னும் இருக்கும். எங்கிருந்தாவது இந்த மாதிரி சுருட்டுவதற்கு, பட்டியல் அகப்பட்டவுடன் தொடரலாம்.
அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை
நன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.
முதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.

ஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா?) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂
நம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.
இணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.
முதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.
வீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.

லீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.
இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.
இதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.
முன்னுமொரு காலத்தில் பாப் – அப் நுட்பம் இருந்தது. ரீடிஃப், சிஃபி சென்றால், ‘என்னைப் பாரேன்; எங்கள் உரலை இடியுங்களேன்’ என்று குறைந்தபட்சம் இரண்டு முதல், பலான பக்கங்களில் பதினெட்டு வரை பாப் அப் உதிக்கும்.
அப்புறம் சம்மட்டி அடிப்பது போல் சில நிரலிகள் வந்து அவற்றை கவனிக்க, சாவு மணியாக கூகிள் எல்லாவற்றையும் துரத்தி அஸ்து பாடியது.
நிரலர்களும் பாப் அப் பழசு என்று விளம்பரங்களை காதோடு பேசுவது முதல் வரிகளுக்கு நடுவில் நுழைப்பது வரை எல்லாம் செய்து வருகிறார்கள்.
இந்த நவீன வெப் 2.0 முடிந்து புதிய யுகமான 3.0- விலும் விடாமல் பாப் அப் போடுவது ‘அன்னாயன்ஸ்’.
உங்களுக்கும் கடுப்பு அதிகமாகணுமா? பச்சை கலர் சிங்குச்சா துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா?? மின்னஞ்சல் கொடு என்று போகுமிடமெல்லாம் வரும் தொல்லை தேவையா?
நிலாச்சாரல் செல்லுங்கள். வரும்.
மூடி விடுங்கள்.
வேறு எங்காவது செல்லுங்கள். வரும். கீழே போனால் எகிறி குதிக்கும். மேலே போனால் வாலாட்டும்.
வலையகத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கப்பா… இப்படி பாப் அப் போட்டு படுத்தாதீங்க…
பின்குறிப்பு: மிகுந்த ஆதுரத்துடன் விற்கிறார்களே என்று விசால மனதுடன் மடல் முகவரியிட்டாலும் போய் தொலைவதில்லை. எனினும், உடனடியாக ‘போனஸ்’ போட்டு மடலனுப்பினார்கள். பிடிஎஃப்பை இறக்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் சிவசங்கர் பாபா வடிவேலுவின் கால்களை பிடித்து டான்ஸ் ஆடிய கதாகாலட்சேபம் கிடைக்கிறது.
படித்து பார்த்தாலும் சாந்தி கிடைக்கவில்லை.
Posted in Articles, Bonus, Email, Irritations, Popups, Web, Webdesign
குறிச்சொல்லிடப்பட்டது இணையம், தொழில்நுட்பம், நிலாச்சாரல், நுட்பம், புலம்பல், வலை, வலையகம், விளம்பரம்