புஷ் விட்டுப் போன எச்சங்களை சரி செய்யவே எட்டாண்டுகள் போதாது:
- உலகெங்கும் படிந்துள்ள அமெரிக்க வெறுப்பு
- கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற நீண்ட கால சகாக்களே, அமெரிக்காவுடன் பிணக்கு பாராட்டும் காலம்
- அணு ஆயுத நாடாக ஈரான் மாறும் தருணம்; இரான் மேல் போர் தொடுக்கக்கூடிய நிர்ப்பந்தம்
- இரான் எவ்வழி… வட கொரியா அவ்வழி செல்லும் அபாயம் (அமெரிக்காவுக்கும் அலாஸ்காவுக்கும்)
- இராக் உள்நாட்டுக் குழப்பம்
- ஆஃப்கானிஸ்தானில் தலிபானின் வளரும் செல்வாக்கு + ஆதிக்கம்
க்ளிண்டனுக்குப் பிறகு வர விரும்பினார். தற்போதைய சூழலில்
- ஹாலிவுட் செல்வாக்கு
- சுற்றுச்சூழல் தேவதூதன்
- ‘சுதந்திரக் கட்சி’யின் நட்சத்திர நாயகன்
- பணந்திரட்டும் கொடைவள்ளல்
என்று நல்ல பெயரை காத்து, ‘முன்னாள் ஜனாதிபதி’ போன்ற கெத்துடன் பட்டும் படாமல் சூப்பர்ஸ்டார் (ரஜினிதான் 😉 வாழ்வே மேல்!










