ஆத்திச்சூடி எழுதுவது எளிதா?


கேள்விக்கு விடை: ‘சுருட்டுக மக்கள் பணம்‘ என்னும் வெண்பா ஈற்றடி போல் எல்லா எழுத்துக்கும் எழுதுவது கஷ்டம்தான்!

கலைஞரின் ஆத்திச்சூடி

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம் உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறுபோல் வீறு கொள்!
ஐயம் கலைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!

கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

நன்றி: கலைஞரின் புதிய ஆத்திச்சூடி « கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் | கலைஞரின் ஆத்திச்சூடி – முத்தமிழ்


1. அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் ஆத்திச்சூடி

2. சிறில் அலெக்சின் தேன் » e-த்திச் சூடி

3. ஞகரம் – என். சொக்கன்: “‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்திச்சூடி'”

4. பார்வையாளனாக…: நவீன ஆத்திச்சூடி: “அகமது சுபைர்

5. Tamil | Literatue | Poem | Michael | Tamil: “இளைய ஆத்திச்சூடி! – தொ. சூசைமிக்கேல்

6. அசல்: ஒளவையார் – ஆத்திசூடி, Auvayar ‘s Athisoodi

7. கொசுறு: கொன்றைவேந்தன்


பாரதிதாசன் ஆத்திச்சூடி – Andhimazhai – Web Address of Tamils

1. அனைவரும் உறவினர்
2. ஆட்சியைப் பொதுமைசெய்
3. இசைமொழி மேலதே
4. ஈதல் இன்பம்
5. உடைமை பொதுவே
6. ஊன்றுளம் ஊறும்
7. எழுது புதிய நூல்
8. ஏடு பெருக்கு
9. ஐந்தொழிற்கு இறை நீ
10. ஒற்றுமை அமைதி
11. ஓவியம் பயில்
12. ஔவியம் பெருநோய்
13. கல்லார் நலிவர்
14. காற்றினைத் தூய்மைசெய்
15. கிழிப்பொறி பெருக்கு
16. கீழ்மகன் உயர்வெனும்
17. குள்ள நினைவுதீர்
18. கூன்நடை பயிலேல்
19. கெடு நினைவு அகற்று
20. கேட்டு விடையிறு
21. கைம்மை அகற்று
22. கொடுத்தோன் பறித்தோன்
23. கோனாட்சி வீழ்த்து
24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
25. சாதல் இறுதி
26. சிறார் நலம்தேடு
27. சீர்பெறல் செயலால்
28. சுவைஉணர் திறங்கொள்
29. சூழ்நிலை நோக்கு
30. செல்வம் நுண்ணறிவாம்
31. சேய்மை மாற்று
32. சைகையோடு ஆடல் சேர்
33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
34. சோர்வு நீக்கு
35. தளையினைக் களைந்து வாழ்
36. தாழ்வு அடிமை நிலை
37. திருஎனல் உழுபயன்
38. தீங்கனி வகைவிளை
39. துன்பம் இன்பத்தின் வேர்
40. தூய நீராடு
41. தெருவெல்லாம் மரம் வளர்
42. தேன்எனப் பாடு
43. தைக்க இனிது உரை
44. தொன்மை மாற்று
45. தோல்வி ஊக்கம்தரும்
46. நடுங்கல் அறியாமை
47. நால்வகைப் பிறவிபொய்
48. நினைவினில் தெளிவுகொள்
49. நீணிலம் உன் இல்லம்
50. நுண்ணிதின் உண்மை தேர்
51. நூலும் புளுகும்
52. நெடுவான் உலவு
53. நேர்பயில் ஆழ்கடல்
54. நைந்தார்க்கு உதவிசெய்
55. நொடிதோÚம் புதுமைசேர்
56. நோய் தீயொழுக்கம்
57. பல்கலை நிறுவு
58. பார்ப்பு பொதுப்பகை
59. பிஞ்சு பழாது
60. பீடு தன்மானம்
61. புதுச்சுவை உணவுகாண்
62. பூப்பின் மணங்கொள்
63. பெண்ணோடு ஆண்நிகர்
64. பேயிலை மதலால்
65. பைந்தமிழ் முதல்மொழி
66. பொழுதென இரவுகாண்
67. போர்த்தொழில் பழகு
68. மறைஎனல் சூழ்ச்சி
69. மாறுவது இயற்கை
70. மிதியடியோடு நட
71. மீச்செலவு தவிர்
72. முகச்சரக்காய் வாழ்
73. மூப்பினுக்கு இடம்கொடேல்
74. மெய்கழிவு அயற்கின்னா
75. மேலை உன்பெயர் பொறி
76. மையம் பாய்தல் தீர்
77. மொடுமாற்றுப் பொது இன்னா
78. மோத்தலில் கூர்மை கொள்
79. வறுமை ஏமாப்பு
80. வாழாட்கு வாழ்வு சேர்
81. விடுதலை உயிக்குயிர்
82. வீடு எனல் சாதல்
83. வெறும் பேச்சு பேசேல்
84. வேளையோடு ஆர உண்
85. வையம் வாழ வாழ்


9 responses to “ஆத்திச்சூடி எழுதுவது எளிதா?

  1. அ’ வில் துவங்கு
    ஆகா போட வை
    இணையம் தேடு
    ஈ நாடு என்றெ நாடாணு
    உமக்கு வேலையில்லையா
    ஊர்ல எல்லாரும் நலமா?
    எனக்கு வேலை இல்லை
    ஏன் இத எழுதுறேண்ணே தெரியல
    ஐ அம் சாரி
    ஒரு நிமிஷம்
    ஓ போடுங்க
    ஔ ளவுதான்

  2. சிறில் தனிப்பதிவு போடும் அளவு பேஷ் போட வைக்கிறது…

    ஆத்திச்சூடியா… சிறிலைக் கூப்பிடுங்க என்னுமளவு போட்டுத் தாக்கறீங்க! (பதிவெழுதும்போது நானும் ஒன்று எளிதாகப் போடலாம் என்று முயன்று சரியாக வராத அனுபவத்தில் சொல்கிறேன்)

  3. அலெக்ஸ்
    ஆஹா
    இந்த போட்டோவில்
    ஈ என இளித்தாலும்
    உலகம் முழுக்க ஓடும்
    ஊதாரியோ நீ
    என
    ஏனோ
    ஐயம்
    ஒன்றும்
    ஓரளவேனும் வரவேயில்லை
    ஒளைவை மேல சத்தியமா 🙂

  4. ரவி ஸ்ரீநிவாஸ்'s avatar ரவி ஸ்ரீநிவாஸ்

    தமிங்கலத்தில் ஆத்திச்சூடி எப்படி இருக்கும் 🙂

  5. உயிர்மெய் வருக்கம்

    * க – கணிமை ஒழுகு
    * ங – ஙப் போல் தமிழ்மணம்
    * ச – சற்றுமுன் திருந்தச் செய்
    * ஞ – ஞாயிறுதிரும்பி என நில்லேல்
    * ட – டமில் உரையேல்
    * ண – இணைப்புக்காக பதிவிடேல்
    * த – மந்தையாக ஃப்ளாக் மாற்றேல்
    * ந – நப்பாசைக்கு வலையகத்தில் இடங்கொடேல்
    * ப – பரபரப்பு துணிந்து செய்
    * ம – மக்னோலியா மறவேல்
    * ய – யாஹு மாற்று
    * ர – ரெடிட் மறவேல்
    * ல – லைஃப்ஹாக்கர் வினை செய்
    * வ – விழியங்க்ளை அலுவலில் நோக்கேல்
    * ழ – மொழமொழன்னு தில்லையாடி இழுக்கேல்
    * ள – ளாஸ்ட்.எப்ஃஎம் கேள்
    * ற – ரா ஃபீட் தவறேல்
    * ன – ஆன மட்டும் ஆனியன் சிரி

  6. சேவியர்… கவிதையே எழுதறீங்க!!

    ரவி… தமிங்கிலமா? மொழி இரண்டொழிய வேறொன்றுமில்லை 😉

  7. அடங்குவது ஆண்.
    ஆணீயம் பேசேல்.
    இல்லாளே தெய்வம்
    ஈ எம் ஐ உன் கடமை
    உண்மை மாதிரி பேசு
    ஊர்சுற்றும் உரிமைமற.
    எந்நாளும் நீ அடிமை
    ஏச்சுக்கு பழகு
    ஐயம் வரவிடாதே
    ஒப்புக்கு நீ தலைவன்
    ஓடாமல் அடிவாங்கு
    ஔஷதம் தேடு (அடிவாங்கிய பின்)

    எழுதியது சத்தியமா நானில்லை!

    http://penathal.blogspot.com/2007/12/6-how-to-say-no-wifeology.html

    பெனாத்தலார்தான்.

  8. கொத்ஸ்…
    ஆத்திச்சூடி 🙂
    நினைவூட்டலுக்கு 😀

சேவியர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.