கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பரிந்துரைப் பட்டியல்:
டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)
- ஆசிப் மீரான் ¤ ஜெயமோகன்
- வலைச்சரம் ¤ பா ரா
- பிரகாஷ் ¤ ஆபிதீன்
- பொன்ஸ் ¤ வல்லிசிம்ஹன்
- ரவி ஸ்ரீனிவாஸ் ¤ செல்வேந்திரன்
- பெட்டை ¤ தமிழ் தொழில்நுட்பம் ¤ மை ஃபிரண்ட்
- குசும்பன் ¤ வினையான தொகை ¤ டிபிசிடி
- =விடை தேடும் வினா? ¤ மிளகாய் ¤ தமிழ் 2000
- குரு ¤ லிவிங் ஸ்மைல் வித்யா ¤ நாகார்ஜுனன்
க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.
தொடர்புள்ள முந்தைய இடுகை: இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)











தொடர்ந்து உங்கள் ரசனைக்குரிய பக்கமாக இருப்பதில் மகிழ்ச்சி 🙂
கூடவே மனமார்ந்த நன்றிகளும்.
அது ஆஸகர் விருதோ, அமைந்தகரை குடியிருப்பு நல்வாழ்வு சங்கத்தினர் விருதோ… அது முக்கியமில்லை. யாரோ நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வே ‘குறுகுறு’வென்றிருக்கிறது.
எப்பவாவது பிளாக்கருக்கு தலைமுழுகிவிடலாமா என்று சலிப்பேறும் போது இம்மாதிரியான உற்சாகப்படுத்துதல்கள்தான் அதிலிருந்து மீட்டெடுக்க வைக்கிறது.
நன்றி SJ
(ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ) 🙂
சேவியர் – இரண்டு வலைப்பதிவுகள். சுவையான செய்திகளைக் கண்டால், லகுவான மொழியில் மொழிபெயர்த்து தருதல்; கவிதை, விமர்சனம் என்று எது இட்டிருந்தாலும் சிரத்தை…
தங்கள் பதிவிற்கு நன்றி
எஸ்ஜே-வா… புரியலியே கண்ணரே.
சென்னை விஷயங்களுக்கு, சாமானியனின் பார்வையில் இலக்கிய விமர்சனங்களுக்கு, தங்களைத்தான் நம்பி இருக்கிறேன்.
வாழ்க்கை அனுபவங்களை வடிகட்டாமல் கொட்டுவிடும் லாவகத்திற்காகவும்தான்!
//எஸ்ஜே-வா… புரியலியே கண்ணரே.//
SJ = Snap Judgement
புரிந்ததா, பாலாஜி என்கிற இணையத்தில் தூங்கி இணையத்திலேயே விழிக்கிற நண்பரே. 🙂
ஸ்ரீமான் பாஸ்டன் பாலா என்கிற பாலசுப்ரா என்கிற உடனடி நீதிபதிக்கு: நீங்கள் எழுதும் பதிவிற்கு கோனார் உரை போடவும்.
புரிகிற மாதிரி இருக்கிறது, ஆனால் புரியல்லை :). புரியவில்லை, தயவு செய்து விளக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்ல மாட்டோம் :).
அதை BBCD (Boston Born Confused Dravidar([s]) சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன், ஏனென்றால் நான் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்டது சவுத் டகோடாவில் :).
சுரேஷ்… நல்ல வேளை! Blind Judgment என்று நாமகரணமிடவில்லை 😉
ஐம் நட்… கோனார் உரையா?
Iam – ஐம் ==> Instant Messaging :: Snap typings
not – நட் ==> பருப்பு
god – ஒருவரைத்தான் குறிக்கும்
கடவுள் பருப்பாக IMகளிலும் ஒளிந்திருப்பார்!
//கவிதை, விமர்சனம் என்று எது இட்டிருந்தாலும் சிரத்தை//
நன்றி 🙂 எனது குரு எனக்குச் சொல்லிக் கொடுத்த அரிச்சுவடிப் பாடம் இது. எதை எழுதினாலும், எங்கே எழுதினாலும் ஒரே தரத்தில் எழுது 🙂
அடியேன், இன்னமும் உள்ளேன் ஐயா 🙂
நன்றி பாலா!
யார் அந்த ‘குரு’ சேவியர்!? சொல்ல முடியும்னா சொல்லுங்க… பதிவாகப் போட்(டிருந்தால்) டபுள் ஓகே 😀
முத்து __/\__
ரவி…
இதெல்லாம் வாசகரை வரவழைப்பதற்கான உத்தி. உங்களுக்கு அந்த மாதிரி அவசியம் ஏதும் இல்லாததால் உங்களைக் கழற்றியாச்சு 😛
//யார் அந்த ‘குரு’ சேவியர்!? சொல்ல முடியும்னா சொல்லுங்க… பதிவாகப் போட்(டிருந்தால்) டபுள் ஓகே //
குருவுக்கு அதெல்லாம் புடிக்காது 🙂 தனி மடலில் சொல்கிறேன் 🙂
பிங்குபாக்: Top Tamil Bloggers in 2008 « Snap Judgment
//அது ஆஸகர் விருதோ, அமைந்தகரை குடியிருப்பு நல்வாழ்வு சங்கத்தினர் விருதோ… அது முக்கியமில்லை. யாரோ நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வே ‘குறுகுறு’வென்றிருக்கிறது. //
சுரேஷ் கண்ணன் சொன்ன கருத்தை நானும் சொல்கிறேன். மிக்க நன்றி
கானா, நன்றி 🙂
பிங்குபாக்: Notable & Must Read Tamil Blogs: List II « 10 Hot