ஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்


டைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.

படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:

1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.

2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.

3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).

4.

இரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.

ஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.

5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.