சுட்டிசாரி


நடைபாதையில் செல்பவர் பாதசாரி.

கம்யூனிசம் பேசினால் இடதுசாரி.

விஜய்காந்த் வலதுசாரி.

என்பது போல் சுட்டி கொடுக்கும் வலைஞர்கள் சுட்டிசாரிகள். 

வலப்பக்க உரல்கள் என்றவுடன் நினைவிலாடுபவர் பத்ரி. இவர் இப்போது ரொம்ப சிக்கனமாகி விட்டார். இன்ட்ரெஸ்டிங்காக எதுவுமில்லை.

இன்றைய அளவில் அசுரன் பதிவுதான் ‘வலைப்பதிவில் சுட்டிகள்’ என்று தோன்றியவுடன் பயன் தருமாறு அமைந்திருக்கிறது. மார்க்ஸியம், கூகிள் ரீடர், தத்துவம், வரலாறு, தோழமை தளங்கள் என்று முழுமையான வீச்சு.

அதே மாதிரி மென் நூல்கள், பல்கலை சுட்டிகள் இன்ன பிற என்று பயனுள்ள தோரணம் கட்டுகிறார் கேயாரெஸ்.

இந்தப் பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் கோவி கண்ணன். ‘அடிக்கடி நுழைவது‘ என்று அடைமொழியுடன் விளிப்பது கவனத்தை ஈர்த்தது.

அதே போல் நாமகரணங்களுடன் உண்மைத்தமிழனும் அறிமுகம் தருகிறார்.

முபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்.வலைவீச்சு என்கிறார் சன்னாசி.

நண்பர்கள் என்று ப்ளாக்மெயிலில் இறங்கிவிடுகிறார் செல்வன்.

சிந்தனையாளர்கள் என்று பட்டம் தருபவர் தமிழ்மணி.

இடது, வலது பாகுபாடில்லாமல் மோகந்தாஸும், ‘முதுகு சொறிதல்‘ என்று துதியுடன் தாதாக்களுக்கு மாமூல் வைக்கிறார்.

என்னுடைய தாத்தா கால பதிவில் வைத்திருக்கும் வகைப்படுத்தல் தலைப்புக்காக விளக்கங்கள் கொடுத்து கண்டிப்புகள் பெற்று, உவகை அடைய வத்திருக்கின்றன.

பூக்கிரியை மட்டும் இனிஷியல் போட்டு மற்றவர்களை தனிமையில் தொடுக்கிறார் அய்யனார்.

இந்த மாதிரி காரணப்பெயர் இட்டிருந்த பிரகாஷ் சுருக்கெழுத்துக்கு மாறிவிட்டார். இன்னும் மாறாதவர் மூக்கு சுந்தர்.

தான் எழுதியதை ஒழுங்கமைத்து தொகுத்துத் தருகிறார் எம்.எஸ்வி  முத்து. அதே போல் முழுநேர சந்தைப்படுத்தலில் இறங்கிய இன்னொருவர் வெட்டிப்பயல்.

தேடுபவர்கள் விரும்புவதை கூகிலே அசருமாறு வைத்திருக்கிறார் பிகேபி.

எல்லோரும் பிரதியுபகாரம் செய்வது போல் திரட்டிகளை கை காட்டுகிறார் பெட்டை.

இணைப்புகளில் வித்தியாசமானவற்றை வைத்திருப்பதன் மூலம் கவர்கிறார் கல்வெட்டு.

வோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.

தான் எழுதிய நுட்பங்களை முன்னிறுத்துகிறார் ஜெகத்.

பட்டறையை இன்றும் மறக்காதவர் விக்கி. சற்றுமுன் போட்டியை அகலாமல் வைத்திருப்பவர் ஆசிப்.

விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.

கிட்டத்தட்ட ‘சைடுபார் முன்னேற்ற கழகம்‘ தொடங்க ஐ.எஸ்.ஓ சான்றிதழ் தரப்பட்டியல்களுடன் கூடியதாக ஹரன்பிரசன்னாவயும் இட்லி-வடையையும் சொல்லலாம்.

மின்மடல் வேண்டுபவர்கள், அஞ்சலில் பிரதியெடுக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு ஏதுவாக நோ நான்சென்ஸ் சுட்டி சாரி ஜமாலன்.

கடைசியாக, எட்டப்பனாக எட்டாத சுட்டிகளை தட்ட வைக்கும் நோக்கில் இயங்கும் வலைச்சரம்எனது பதிவு இடம்பெற்றிருக்கிறதா‘ என்று ஆர்வத்துடன் நோக்கவைக்கிறது.

என்ன வேணா பட்டை போடுங்க…

பாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க! என்று சரணமடைவதுதான் என் பல்லவி.

9 responses to “சுட்டிசாரி

  1. //பாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க! என்று சரணமடைவதுதான் என் பல்லவி.//

    பாட்டு போட்டுக்கட்டும்.. ஆனால், விரும்புகிறவங்க மட்டும் ‘ஆன்’ பண்ணிக்கிற வசதியோட போட்டுகிட்டா நல்லா இருக்கும்..

    இந்திய டயல்-அப்/அகலப்பாட்டைக்கு ஒத்து வராத தமிழ் வலைப்பதிவுகள்னு நாப்பது அம்பது பதிவுகள் பட்டியல் போட்டு, பிரசுரம் பண்ணலாம்னு வெச்சிருந்தேன்.. ஆனால், போடலை… என்ன செய்யறது முக்காவாசி பேர் நம்ம தோஸ்துங்களா போய்ட்டாங்க 🙂

  2. //வோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.//

    காலை வாருகிறீகளா, கை கொடுக்கிறீர்களா என்று தெரியவில்லை. எனினும் நினைவு வைத்திருந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙂

  3. //விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.//

    சுத்தி சுத்தி அடிக்கறீங்க 🙂

  4. பிரகாஷ்,
    —விரும்புகிறவங்க மட்டும் ‘ஆன்’ பண்ணிக்கிற வசதியோட போட்டுகிட்டா—

    அதே… அதே அவசரத்தில் விட்டுப்போச்

    —அகலப்பாட்டைக்கு ஒத்து வராத தமிழ் வலைப்பதிவுகள்னு —

    என்னோட ஈ-தமிழ் மிக மிக மெதுவாக வந்து சேர்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்வைத்த காலை பின் வாங்காத மாதிரி, போட்ட ஜாவாஸ்க்ரிப்டை கழற்றிவிடும் சோம்பேறித்தனம்தான் 🙂

  5. சேவியர்,

    நேர்த்தியாக தொகுத்திருந்தீர்கள். கொடுத்த விதம் எனக்குப் பிடித்திருந்தது

  6. சர்வேசன்,
    திரும்ப திரும்ப உங்களையே சுற்றி வந்த்ததால், எனக்கு வேற எதுவும் கிடைக்கலை போல 😀

    மற்றவர்களைப் போல் அல்லாமல் உங்க பதிவு unique- ஆக இருக்கே!

  7. //முபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்//

    நன்றி பாபா

    உங்கள் கண்ணிலிருந்து எதுவுமே தப்ப முடியாது போலிருக்கு 😉

    இலம்பகம் என்று எனக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

    இலம்பகம் என்றால் என்ன?

    அத்தியாயம் என்கிறது அகராதி, நீங்கள் என்னபொருளில் பயன்படுத்தியிருக்கிறீர்கள் அறியத்தாருங்கள்

    நன்றியுடன்
    முபாரக்

  8. பிங்குபாக்: தொடுப்புகள் - 8 பெப்ரவரி 2008

Surveysan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.