படம் உதவி: விக்கிப்பீடியா
கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையேயான உறவை கணவனுக்கும் மனைவிக்கும் வேதாகமங்கள் ஒப்பிடுகிறது. கன்னித்தன்மை இழப்பது என்பது ஆன்மாவை இறைவனிடம் சமர்ப்பிப்பதற்கு சமமாக கருதப்பட்டது.
இங்கே குழந்தை யேசுவுடன் காத்தரீனுக்கு மணமுடிப்பு நடக்கிறது.
இந்தத் திருமணத்தை காரணம் காட்டி தன்னை விரும்பும் பேரரசனை மணக்க மறுக்கிறாள். அவனும் விடாக்கண்டனாக, ஐம்பது தத்துவ அறிஞர்களைக் கொண்டு தெளிவாக்க முயற்சிக்கிறான். மறுதலிக்கிறாள்.
தெய்வீகத்தை மறக்க வைக்க இயலாத உளவியல் நிபுணர்கள் அனைவரையும் அபிராமி பட்டரைப் போல் அந்தாதி எல்லாம் பாட வைத்து வேடிக்கை பார்க்காமல், எரிக்க உத்தரவிடுகிறான் மன்னாதி மன்னன்.
மோதிரம் அணிவித்த பிஞ்சுக்கைகளுக்கு முத்தம் கொடுப்பதை ரிபேரா தீட்டியிருக்கிறார்.
‘என் புருஷன் குழந்தை மாதிரி‘ என்பது இந்த ஓவியத்தின் தமிழாக்கம்.












என் புருஷன் குழந்தை …
நல்ல பஞ்ச். காத்தரின் குறித்து நான் கேள்வி பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.
எல்லா மதங்களிலும் கடவுள் ‘பைத்தியங்கள்’ இருக்கின்றனர். அப்படி இருப்பதுதான் சிறந்ததும் எனப் பலர் நம்புகிறார்கள். நம்மைப் போல சாதாரணர்களுக்கு இதெல்லாம் ரெம்ப அதிகம்.
🙂
—என் புருஷன் குழந்தை …—
நாங்க எப்பவும் சின்னப் பசங்க 😛