- Never Outshine the Master
- Never put too Much Trust in Friends, Learn how to use Enemies
- Conceal your Intentions
- Always Say Less than Necessary
- So Much Depends on Reputation – Guard it with your Life
தலைவனின் தோள் மட்டுமே வளர்
உங்களுக்கு மேல் இருப்பவர் அந்த இடத்திலேயே வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கவரும் நோக்கத்தோடு அதீதமாக செயல்பட்டால், ‘பெரியவர்’களுக்கு வயிற்றைக் கலக்கும். மேலதிகாரிகளை புத்திசாலியாகக் காட்டி வைத்திருப்பதுதான் சாமர்த்தியம்.
நண்பர்களை நம்பாதே. எதிரிகளை உபயோகிக்க அறி
தோழர்கள் பொறாமை பிடித்தவர்கள். முதுகில் குத்திவிடும் ஆபத்தும் உண்டு. கொஞ்ச நாள் முன்னாடி பகைத்துக் கொண்டவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள். பழைய பகையை ஆற்றுப்படுத்தும் பயம் கொண்ட கடமை உணர்ச்சியுடன் செயல்படுவான். உனக்கு எதிரியே இல்லை என்றால், எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து யோசி.
நோக்கங்களை புதை
ஆழ் எண்ணங்களை மறை. செயல்களின் பின்னிருக்கும் காரணங்களை வெளிக்காட்டாதே. நீ என்ன செய்யப் போகிறாய் என்று அவர்களுக்கு விளங்காவிட்டால், எப்படி உன்னுடன் சண்டைக்கு வரமுடியும்? முடிந்தவரை தவறான பாதையில் இட்டுச் சென்று, புகை மண்டலத்தில் இருத்தி வைத்திருந்தால், அவர்களுக்கு தெளிவு பிறப்பதற்குள், உன் காரியம் கடையேறியிருக்கும்.
சுருங்க சொல்
புரியாத சொற்றொடர்களை கையாள். எல்லா இடத்திலும், ஏதாவது கருத்து சொல்லிக் கொண்டிருந்தால், உனக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். வெட்டு ஒன்று; துண்டு இரண்டாக போட்டு உடைக்காமல், கழுவுகிற மீனில் நழுவும் பாணியில் எழுது. ஆதிக்கவாதிகள் வாயைத் திறந்தால், முத்து உதிர்வது போல் குறைவாகப் பேசுபவர்கள்.
கீர்த்தியை கா
ஆளுமையின் முக்கிய அங்கம் சமூகத்தில் நற்பெயர். நல்ல பெயர் எடுத்திருப்பதனாலேயே, பிறரை மிரட்டி அடக்கலாம். துளி கீறல் விழுந்தாலும், காற்றில் பறக்கும் பஞ்சு கூட பேப்பர் வெயிட்டாக கல்லெறிந்து ஏளனம் செய்துவிடும். சேறு அடிக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கவனித்து, அதற்கேற்ப காய்களை நகர்த்து. எதிரிகளுக்கு அபகீர்த்தி வருமாறு சேறு அடி. அடித்தபிறகு அவர்களின் மதிப்பு சந்தி சிரிப்பதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்.
மற்றவற்றையும் அறிய: The 48 Laws of Power | The 48 Laws of Power – Wikipedia











ellaame negative sense la irukura maathiri irukuthu ;))
Best Kanna Best
bala thankx kanna
@ஜி
—எல்லாமே -ve sense-இல் இருக்கிற மாதிரி இருக்குது—
குன்றமேற 48 குறுக்குவழிகள் ; )
இதே புத்தகத்தைத் தமிழில் ரா.கி.ர. சுயமுன்னேற்ற புத்தகமாக எழுதியிருப்பதாக நண்பர் சொன்னார். அவருக்கு, இந்த புத்தகம் +வ்வாக தெரிய, எனக்கு துரியோதனனாக எல்லாம் எதிர்மறையாகி இருக்கிறது : P
@விளிப்பிலி
வழி #4-ஐ பின்பற்றி சுருங்க சொல்லியிருக்கீங்க : D
பாலா,
புதிய ப்ளாக்கரையும் அழகுற அமைத்திருக்கிறீர்கள். தகவல்கள் சுட்டிகள் நிறைந்திருக்கின்றன.
@கோவி
—தகவல்கள் சுட்டிகள் நிறைந்திருக்கின்றன.—
சீக்கிரம் வந்து விழுகிறதா? அல்லது வழக்கம் போல் ஆமை நடைதானா : )