பல்லாவரம் நகரசபை: ராணிமேரி கல்லூரி மாணவி போட்டி
சென்னை, அக். 11-
பல்லாவரம் நகரசபையில் 12-வது வார்டில் கல்லூரி மாணவி ரேவதி சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் ராணி மேரி கல்லூரியில் தமிழ் இலக்கியம் 2-வது ஆண்டு படிக்கிறார்.
கடந்த ஆண்டு கல்லூரியின் செயலாளராக இருந்த ரேவதி தற்போது நகரசபை வார்டில் போட்டியிடுகிறார். 12-வது வார்டில் மொத்தம் 6,390 ஓட்டுகள் உள்ளன. அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் அந்த வார்டில் களத்தில் உள்ளனர்.
ரேவதிக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். 12-வது வார்டில் உள்ள 8 குடியிருப்பு நல சங்கங்கள் அவருக்கு ஓட்டு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக்காக தன்னால் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று மைபாட்டில் சின்னத்தில் போட்டியிடும் ரேவதி கூறியுள்ளார். அவர் வீடு வீடாக சென்று நோட்டீசுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். கடந்த 2 தினங்களில் மட்டும் தான் அவரது ஆதரவான போஸ்டர்களை ஓட்டி இருந்தனர். ஆட்டோவிலும் சென்று பிரசாரம் செய்தனர். தனக்கு வாக்கு அளித்தால் தூய்மையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தருவதாக 22 வயதான ரேவதி கூறியுள்ளார்.











: )
ரேவதிக்கு வாழ்த்துக்கள்.
‘ஜனகனமன
ஜனங்களை நினை’
பாடல்தான் நியாபகம் வருது.
அட, இன்று தான் இது தொடர்பாக ஒரு பதிவு எழுதினேன்.
ரேவதிக்கு வாழ்த்துக்கள் – செய்திக்கு நன்றி.
இது தொடர்பான எனது பதிவு ‘நல்ல காலம் பொறக்குது’ இங்கே – http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post.html