மின்னி வாக்கு எந்திரங்கள் (Electronic voting machines) குறித்த இராம.கி.யின் தமிழ்-உலகம் பதிவு:
தமிழ்நாட்டில் 234 தொகுதிகள். பொதுவாக ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் பல வாக்கு நிலையங்கள் (polling stations) இருக்கும். ஒவ்வொரு வாக்கு நிலையமும் இரண்டு அல்லது 3 வட்டுகளைக் (wards) கொண்டிருக்கும். ஒரு வாக்கு அறை (polling booths) என்பது கிட்டத் தட்ட 1200 பேருக்கு ஒன்றாக இருக்கும். ஒரு வாக்கு நிலையத்தில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 3, 4 வாக்கு அறைகள் கொண்டதாக இருக்கும். (5 வாக்கு அறைகள் வரைக்கும் கூட பெரிய வாக்கு நிலையங்களில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.) ஒவ்வொரு வாக்கு அறைக்கும் ஒரு தலைமை வாக்கு அதிகாரி இருப்பார்.
தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை கிட்டத் தட்ட 62 மில்லியன்கள்.(சரியான எண்ணிக்கையைத் தேடினால் கண்டுபிடிக்க முடியும்; நான் நேரம் கருதி அதைத் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.) இதை 1200ல் வகுத்தால் மொத்தம் 51700 வாக்கு எந்திரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படும் என்று கணக்கிட முடியும். (புதுச்சேரி 0.65 மில்லியன்கள்.)
தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 160 பெண்கள் போட்டி: தினமணி
கையேந்தி பவனும் அமுதசுரபியும் – எஸ். முரளி
கட்சி 1: “”… எனவே நாங்கள் விவசாயத்துக்குப் பிரதான முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறோம். அமெரிக்காவில் விளையும் சோயா பீன்சுக்கு மானியத்தை அள்ளி விடுகிறதே அமெரிக்க அரசு! ஆனால் நம் நாட்டில் மட்டும் உரத்துக்கு மானிய வெட்டு. இது ஏன்? மிகப் பெரிய முதலீட்டின் தொழில் தொடங்கினால் அதற்குத் தரும் பல்வேறு சலுகைகளுக்கு சுங்கத் தீர்வை விலக்கில் இருந்து மின் கட்டணச் சலுகை வரை – நீங்கள் வைத்துள்ள பெயர் ஊக்கத்தொகை. ஆனால் விவசாயி போடும் உரத்துக்குத் தந்தால் அதன் பெயர் “மானியம்’. நீங்கள் என்ன பிச்சையா போடுகிறீர்கள்?”
கட்சி 2: “”விவசாயம் பிரதானம் என்பதை நாங்கள் மறுக்கவில்லை – தொழில் வளர்ச்சியும் நவீன மயமும் காலத்தின் தேவை என்கிறோம். எல்லாம் பெரு முதலீட்டுக்கும் நிதி திரட்டுதல் என்பது அரசுக்குச் சாத்தியமில்லை. எனவேதான் தனியார் மூலதனப் பங்களிப்பை வரவேற்கிறோம்…”
கட்சி 1: “”இப்படிச் சொல்லித்தான் கல்வித்துறையையே வியாபாரமாக்கி விட்டீர்கள். மருத்துவம் என்பதை, அதன் மனிதநேய முகத்தையே இழக்க வைத்து, வெறும் பண உற்பத்தி மையமாக ஆக்கிவிட்டீர்கள்.”
கட்சி 2: “”எந்தத் தனியார் கல்வி நிறுவனம் அல்லது மருத்துவமனை தவறு செய்தாலும், தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதற்கேற்ற வகையில் சட்டங்களும், கண்காணிப்பு அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் “போட்டி’ என்று “தாராளமயம்’ வந்தவுடன் மக்களுக்கு எவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்பதைப் பாருங்கள். இன்று வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, ஒரே ஒரு சம்பளச் சான்றிதழையும், இன்கம் டாக்ஸ் ரசீதையும் வைத்துக் கொண்டு கடன்களை அள்ளி வீசுகிறார்கள் – இது பொருளாதார வளர்ச்சி இல்லையா?
கட்சி 1: “”ஆனால் வயிற்றுக்கு இல்லையே சுவாமி! திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் மார்க்கெட் முழுவதும் சம்மர் காட்டன் சர்ட்டுகளும் ஜீன்சும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் பருத்தி விவசாயி தற்கொலை செய்து கொள்கிறானே, ஏன் இந்த முரண்பாடு…?”










