கருணாநிதிக்காக அர்ச்சனை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவருடைய மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, “மாவட்ட தி.மு.க. செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் மனைவியுடன் துர்காவும் செல்வியும் சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோயிலுக்கு சென்று கருணாநிதி பெயரில் விசேஷ அர்ச்சனை நடத்தி, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற சிறப்பு பூஜையும் செய்தார்கள்” என்று மாவட்டம் முழுக்கவே பரபரப்பாகியுள்ளது.
“இதுவே வேற யாராவது கட்சிக்காரன் செஞ்சிருந்தா, தலைவர் கடிதம் எழுதக் கத்தியை எடுத்திருப்பார். ஆனா, இதைச் செய்தது சொந்தங்கள் ஆச்சே!” என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
செய்தி: ஜூ.வி.











‘நெத்தியில் என்ன ரத்தம்’ என்று கிண்டல் அடித்த கதை நினைவிருக்கும் என நம்புகிறேன்!
இது போல பல வதந்திகள் வந்தவண்ணம் உள்ளது. உண்மையில், கோயில் கலைச் சிற்பங்களைத்தான் காணச்சென்றார் திருமதி. ஸ்டாலின். தவிர, சுரேஷ் ராஜனின் மனைவி அர்ச்சனை செய்யச் சொன்னது கலைஞர் கருணாநிதியின் பெயரில் அல்ல; `கருணாமூர்த்தி’ என்றுதான் சொல்லி இருக்கிறார்.
“கருணாமூர்த்தி”, ஆஹா, சூப்பர் விளக்கம். கலக்கற “பாரதீய மாடர்ன் ப்ரின்ஸ்” கலக்கற :))