கருணாநிதியின் சொத்து ரூ.26 கோடி
வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புத் தொகைகள் ரூ.5 கோடியே 13 லட்சத்து 54303.
தயாளு அம்மாள் பெயரில் ரூ.12 கோடியே 89 லட்சத்து 64,000.
ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 20,645.
வாகனங்கள்- தயாளு அம்மாள் பெயரில் ஹோண்டா அகார்டு கார். ராஜாத்தி அம்மாள் பெயரில் டாடா இண்டிகா கார்.
நகைகள்- தயாளு அம்மாள்- பழைய நகைகள் 716.34 கிராம் (மதிப்பு ரூ.5 லட்சம்). விலை மதிப்புள்ள கற்கள் ரூ.87 ஆயிரம். ராஜாத்தி அம்மாள்- பழைய நகைகள்- 800 கிராம் (ரூ.5.58 லட்சம்).
சென்னை கோபாலபுரத்தில் 6,162 சதுர அடி மனை மற்றும் அதிலுள்ள கட்டடம்.
தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 14.30 ஏக்கர் நிலம்.
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் தயாளு குடும்ப நல அறக்கட்டளையின் அறங்காவலர் தயாளு அம்மாள் பெயரில் 21 சென்ட் நிலம் உள்ளது.
அஞ்சுகம் குடும்ப கட்டளையின் அறங்காவலர் தயாளு அம்மாள். இது பழைய திரைப்படங்களின் விநியோகஸ்தராக செயல்படுகிறது.
ராஜாத்தி அம்மாள் உரிமையாளராக உள்ள தமிழ்க்கனி பதிப்பகம் சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.20.76 லட்சம். ஆழ்வார்பேட்டை ராயல் பர்னீச்சர்ஸ் உரிமையாளர். முதலீடு- ரூ.5.41 லட்சம்.
சென்னை சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளுக்குச் சொந்தமாக 3 கிரவுண்ட் மற்றும் 2294 சதுர அடி மனையும் கட்டடமும் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3.02 கோடி.
ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.1.50 கோடி: சொந்தமாக கார் இல்லை; கடன் ரூ. 6.8 லட்சம்
திமுக துணைப் பொதுசெயலாளர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ. 1.50 கோடி என்று தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இதில் வேளச்சேரி வீட்டு மதிப்பு ரூ. 64 லட்சம், கோபாலபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தனது பங்கு ரூ. 50 லட்சம் உள்ளிட்ட சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மனைவிக்கு சொந்தமாக 720 கிராம் பழைய நகைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம். திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சொந்தமாக 6.6 ஏக்கர் நிலம் உள்ளது. சொந்தமாக வாகனங்கள் எதுவும் கிடையாது. கடனாக ரூ. 6.88 லட்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மீதுள்ள வழக்குகள்:











ஜெ.வுக்கு சொத்தே இல்லையா?
அதைப் பத்தி தினமணி ஒண்ணும் சொல்லலையா?
JJ has also declared around the same amount , may be 2 Crs less than MK.
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். மற்ற அரசியல்வாதிகளுக்கு சொத்து இல்லை என்கிறீர்களா?. உங்கள் பதிவைப் பார்த்தால் கேலி செய்வது போல இருக்கிறது. ( ஒரு வேளை அ தி மு க வா?.)
ஜெயா உட்கார்ந்திருக்கும் வேனின் டயரை தொட்டுக்கும்பிடும் பன்னீர்ச்செல்வம்(களில்) நீங்களும் ஒருவராக் வேண்டுமென்று சபிக்கிறேன்.
//JJ has also declared around the same amount , may be 2 Crs less than MK.
//
இல்லை. ஜெ.தான் தமிழக வேட்பாளர்களிலேயே அதிகமாகச் சொத்துக் கணக்குக் காட்டியவர். கலைஞரை விட 2 கோடி ரூபாய் அதிகம். அதிலும் சில (?!) நகைகள் வழக்கில் இருப்பதால் அதன் மதிப்பு தெரியவில்லையாம். இதைத்தான் சிதம்பரம் மேடை தோறும் நாறடித்து வருகிறார்.
இதையெல்லாம் வெகு சுலபமாக தினமணி மறைத்து விட்டது. கலைஞரின் சொத்துப் பட்டியலை முதல் பக்கத்தில் வெளியிட்ட தினமலர் ஒரு மூலையில் ஜெ. – கலைஞர் சொத்து ஒப்பீட்டைச் செய்தது. ஜெ.யின் சொத்துப் பட்டியல் தினமலரிலோ தினமணியிலோ எங்கும் வரவில்லை.
என்ன பத்திரிகை ஜனநாயகமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்