Daily Archives: ஏப்ரல் 13, 2006

Attention Grabbed News

சமீபத்தில் என் சிந்தனையை உசுப்பேற்றிய அல்லது அடர்த்தியான விஷயகனம் நிரம்பிய அல்லது ‘டக்கரா யோசிக்கறியே கண்ணு’ என்று ‘அட’ போடவைத்த சில ஆங்கில செய்திக் கோர்வைகள்:

  • நியு யார்க் டைம்ஸ்: இந்தியாவில் நடைபெறும் மாவோப் போராட்டங்கள் குறித்த பதிவு.
  • நியு யார்க் டைம்ஸ்: www.zunafish.com பண்டமாற்றுக்கு குக்கூரல் இடுகிறது.
  • ஹெரால்ட் ட்ரிப்யூன்: வலைப்பதிவு மூலமாக நாலு காசு சம்பாதிக்க வழி காட்டுறாங்க.
  • கார்டியன் புத்தக அறிமுகம்: Are Women Human? எழுதிய Catharine MacKinnon உடன் பேட்டி.
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அக்னி நட்சத்திரத்துக்கும் சுற்றுச்சூழல் வெப்பமாவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னால் அறிவியலாளர்களுக்கு ஆப்படிக்கப்படுகிறது.
  • அராபிய செய்திகள்: சவூதியில் உள்ளாடைகளை விற்பதற்கு இனி பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிறார்கள்.
  • நியு யார்க் டைம்ஸ்: நான் விரும்பிப் பார்க்கும் ‘வெஸ்ட் விங்’ முடிவுக்கு வருகிறது.
  • சூழலியல் தூய்மை: மகிழுந்தில் இருந்தும் நச்சுப்பொருட்கள் என்னவென்று தெரியுமா?
  • ஆன்லைன் வாய்ஸ்: எழுத்தாளர் சுஜாதாவுடன் செவ்வி.
  • எம்.ஐ.டி. vs கலிஃபோர்னியா பல்கலை: திருட்டு படவா என்று சொல்லலாமா? (கல்லூரிகள் பெண்களைக் கவர்வதில்தான் சண்டை வரும்; இவர்கள் கவர்ச்சியில்லாத பீரங்கியை அல்லவா கடத்துகிறார்கள்.)

    | |

  • Pudupettai Banner Causes Traffic Woes

    முன்னுமொரு காலத்தில் லேஸி கீக் இப்படியெல்லாம் அருமையான புகைப்படங்களை தன் வலைப்பதிவில் இடுவார். சென்னையில் வசித்தாலும், எப்படி இவரால் மட்டும் பல்லவன் விரையும் சென்னை சாலைகளில் படம் எடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவேன்.

    இப்பொழுதுதானே புரிகிறது…

    இப்படி டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்தால், வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டுக் கூட நிழற்பட ஓவியராகலாம்!

    Traffic Congestion in Madras with Pudupettai movie banner as Backdrop

    வெளியான தினசரி: தினமலர்


    | |

    Me, Myself, Balaji

    சமீபத்தில் நண்பர்களுக்கு அறிமுகமாக நான் எழுதிகொண்டது:

    நான் பாலாஜி. அமெரிக்காவில் பாஸ்டன் பக்கம் வசிப்பதாலும் இணையத்தில் நிறைய பாலாஜிகள் இருந்ததாலும் புனைப்பெயர் வைக்க கற்பனைப் பஞ்சத்தினாலும் ‘பாஸ்டன்’ பாலாஜி என்று அழைக்கப் படுகிறேன்.

    பள்ளிக் கூட பருவத்தில் வீடு நிறைய புத்தகங்களாக இருக்கும். அம்மா ஆர். பொன்னம்மாள் ஓர் எழுத்தாளர். ஆன்மிகம், குழந்தை இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். என்னுடைய அம்மாவைக் குறித்து விரிவான அறிமுகம் தொகுக்க ஆரம்பித்து, பாதியில் தொக்கி நிற்கிறது. தற்போதும் காமகோடி, கோகுலம், ஞான ஆலயம் போன்ற பத்திரிகைகளிலும் வானதி, திருமகள் போன்ற பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

    அவர்கள் உந்துதலில் +2 வரை கண்டதும் படிக்க முடிந்தது. சில சமயம் அமுதசுரபி; கணையாழி; மஞ்சரி; பல சமயம் விகடன்; குமுதம்; திசைகள்; தவறவிடாமல் புஷ்பா தங்கதுரை; சுஜாதா; ப.கோ.பி.; ராஜேஷ்குமார். எப்பொழுதாவது லஷ்மி; சிவசங்கரி; கல்கி.

    கல்லூரியில் படிப்பும் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே வாசிக்க கிடைத்த வடக்கு இந்தியா. என்றாலும் படைப்பார்வத்தில் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதினேன். அவற்றில் சில தமிழோவியம் வெளியிட்டது:
    கங்கை இல்லாத காசி | சுய சாசனம்

    ஐந்து வருடம் முன்பு இரா. முருகனால் நடத்தப்படும் ராயர் காபி கிளப் சேர்ந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுதப் பழகினேன். அதன்பின் திண்ணை, வலைப்பதிவு, மரத்தடி, தமிழோவியம் போன்ற வலையகங்களில் தொடர்ந்து (பெரும்பாலும்) கட்டுரைகள், சில சமயம் புனைகதைகள் எழுதி வருகிறேன்.


    சமீபத்தில் தினமொரு வலைப்பதிவாக அறிமுகம் செய்யும் தேன்கூடு கொடுத்த அறிமுகம்:

    பாஸ்டன் பாலாஜி [பாபா] (என்கிற) பாலாஜி சுப்ரா, ஒரே சமயத்தில் பல குதிரைகளில் பயணம் செய்பவர்! தனது வலைப்பதிவில் தினம் ஏதாவது ஒன்று புதிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் நபர்களில் ஒருவர். தமிழ் இணையத்தில் எங்காவது ஏதாவது தீப்பொறி கிளம்பினால், அதைக் குறித்து மறைமுகமான நையாண்டிக் கட்டுரையோ அல்லது கணிப்போ இவரது வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கும்.

    இவரது வலைப்பதிவில் குமுதம் ரேஞ்ச் பதிவுகளும் இடம் பெறும்; இலக்கிய சர்சைகளும் இடம் பெறும். ஏகப்பட்ட தகவல்கள், தொடுப்புகள் என்று கொடுத்திருப்பார். இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டுகிறார் என்பதில் பலருக்கு பிரம்மிப்பு. இணையம் மற்றும் வலைப்பதிவுகள் குறித்து பாஸ்டன் பாலாஜியால் எழுதப்படும் கட்டுரைகள், கவனத்தினை ஈர்ப்பவை.

    இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலைப்பதிந்து வரும் பாஸ்டன் பாலாஜி, குழுமங்களிலும், தமிழோவியம், திசைகள் போன்ற பல இணைய இதழ்களிலும் பரவலாக எழுதி வருபவர். இலக்கிய ஆர்வலர். வலைப்பதிவாளர்களை உற்சாகப்படுத்தும் சகா. படித்தில் பிடித்ததை சொல்லத் தயங்காதவர். கில்லி – யில் ஒரு ஆட்டக்காரர்.தமிழோவியம் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    விளம்பரம் இத்துடன் முடிகிறது; வழக்கமான ஜல்லிகள் தொடரும்.

    | |