Daily Archives: ஏப்ரல் 7, 2006

Intellectuals should be Elected Unopposed?

இவர்கள் சட்டப்பேரவைக்குப் போவது சாத்தியமா?

கடந்த கால ஆட்சியில் மீண்டும் செப்பனிட முடியாத அளவுக்கு தமிழகத்தில் கேடுகள் நிறைந்துவிட்டன. இந்த கேடுகளை களைய வேண்டுமானால் இப்படிப்பட்டவர்கள் தான் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். அவர்கள் எல்லாம் போட்டியிட்டு செல்வது என்பது இந்த யுகத்தில் நடக்காது. எனவே அவர்களை போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளது MS Uthayamoorthy தலைமையிலான மக்கள் சக்தி இயக்கத்தின் நாமக்கல் கிளை.

இதன்படி போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ், உந்துனர் அறக்கட்டளை அ.கி. வேங்கடசுப்ரமணியன், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், ஆனந்தகிருஷ்ணன் – இப்படி நீண்டுகொண்டே போகிறது.

சரி – அப்படி என்ன கேடு ஏற்பட்டுவிட்டது தமிழகத்துக்கு? கேடுகள் குறித்தும் நீண்ட பட்டியல் போட்டுள்ளது அந்த இயக்கம். அவற்றில் சில:

  • முல்லைப்பெரியாறு, காவிரி ஆறுகளின் தமிழக பங்கு பறிபோய்விட்டது. தமிழகத்துக்கு வரவேண்டிய பல பெரிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டன.
  • ஆறுகளில் படிந்திருந்த மணல் அள்ளப்பட்டு ஆறுகளின் பயன்பாடு மனித சமுதாயத்துக்கு கிட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.
  • பண வசதி படைத்தோருக்கு மட்டுமே உயர்கல்வி என்றாகிவிட்டது.

    அரசியல் நோக்கம் ஏதுமின்றி, பொதுவான சிந்தனை உள்ள நிபுணர்கள் சட்டப் பேரவைக்குச் சென்றால், மக்கள் நலனில் அக்கறையுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    போட்டியில்லாமல் இதுபோன்ற நிபுணர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது சாத்தியமாகுமா?

    Thanks : Thinamani

  • Freebie Politics

    Dinamani.com – Editorial Page

    சுமை யாருக்கு? – என்.ஆர். ஸத்யமூர்த்தி, பெங்களூர்.

    அரசுகள் சலுகைகளை அள்ளிவிடும்போதும் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை வழங்கும்போதும் இதற்கான செலவு, பெரும்பாலும் நடுத்தர வகுப்பினரின் மீதான சுமைதான் என்பது உணரப்படுவதில்லை.

    திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கொண்டால், நெசவாளருக்கு இலவச மின்சாரம், இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை, இறந்த விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து என்பன போன்றவை வரவேற்கத்தக்கன மட்டுமல்ல, சாத்தியமானவை. ஆனால், இருபது ரூபாய்க்கு விற்கும் அரிசியை இரண்டு ரூபாய்க்குக் கொடுப்பது, வீடுதோறும் இலவசக் கலர் டி.வி; இலவச கேஸ் இணைப்பு ஆகியவை தேவையற்றவை, நியாயமற்றவை. இருக்கின்ற கேஸ் இணைப்புகளுக்கே, அடிக்கடி கேஸ் தட்டுப்பாடு! இதற்கான மிக அதீதமான செலவுகளை நடுத்தர வர்க்கத்தினர்தான், பல வரிகள் மூலமாகச் செலுத்த வேண்டும்.

    இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கரிசனம், தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ஏழாண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காத விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை?

    இலவசக் கலர் டி.வி போன்ற சலுகைகளைவிட, தமிழ்நாட்டின் கிராமப்புறத்துப் பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் அமர்த்துவோம், கட்டடம் தருவோம், மருத்துவமனைகளில் லஞ்சமற்ற சேவைகளை உறுதி செய்வோம், ஒரு வன்னியரோ மற்றவரோ அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற எளிய சான்றளிக்க ரூ. 500 முதல் ரூ. 700 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் கொடுமையைக் கொளுத்துவோம், தமிழ்வழிக் கல்வியே பெறுவோம் என்ற உறுதிகள் தேர்தல் அறிக்கையில் இல்லாதது வேதனைக்குரியது.

    எனவேதான், இக்கூட்டணிகளின் பதவிப்போட்டிகளுக்கு இரையாகாமல், மற்ற கட்சிகளின், சுயேச்சைகளின் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது தேவையாகிறது.

    Pagirvu Meet Details

    நவீன கலை இலக்கிய பரிமாற்றம் – பகிர்வு

    நீங்கள் அனுபவித்து உணர்கின்ற எதுவுமே வேறு யாரோ ஒருவரால் ஏற்கனவே அனுபவித்து உணரப்பட்டு விட்டது. ‘ஆகா, நான் ஒரு பேரின்ப நிலையிலே இருக்கிறேன்’ என்று நீங்கள் சொல்லிக் கொள்வதன் பொருள், உங்களுக்கு முன்னதாக வேறு ஒருவர் அதை அனுபவித்து அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறாரென்பதுதான். நீங்கள் அதை எந்த ஊடகத்தின் வழியாக அனுபவித்தபோதிலும், அது இரண்டாவது முறையாக, மூன்றாவது முறையாக மற்றும் இறுதியாக ஏற்படும் ஒரு அனுபவம் மட்டுமே. அது உங்களுடையது அல்ல. உங்கள் சொந்த அனுபவம் என்று எதுவுமே கிடையாது. அத்தகைய அனுபவங்கள், எத்துணை அசாதாரணமைவையாக இருப்பினும், அவை ஒரு மதிப்பும் அற்றவை.
    யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி

    இலக்கிய சந்திப்புகள் என்றால் இணையத்தில் அறிமுகமான நண்பர்களை சந்திப்பதுதான் என்னுடைய பழக்கம். பாஸ்டன் பக்கம் வருகை தருபவர்களை வீட்டீல் வைத்து உரையாடுவது; ட்ரைவ்-இன் வுட்லண்ட்ஸில் காபி சாப்பிட்டுக் கொண்டே நண்பர்களுடன் பேசுவது என்ற மட்டில் சென்னை விஸிட்கள் முடிவடைந்து விடும்.

    யாஹூ தூதுவனில் திலகபாமாவுடன் தட்டச்சும்போது அரட்டைவாக்கில் ‘வாரயிறுதியில் சென்னை வருகிறேன்; தங்களையும் நண்பரகளையும் சந்திக்க இயலுமா?’ என்று கேள்வி எழுப்பியவுடன் பன்முக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, அழைப்பிதழ் கொடுத்து, வலையெங்கும் அறிவித்து நிறைய பிரமிப்பையும் கொஞ்சம் நாணத்தையும் ஏற்படுத்திவிட்டார்.

    Kavinjar Vijayan chatting with Kalvettu Pesugirathu Sornabharathy
    கடைசியாக எழும்பூர் பக்கம் உலாவியது ‘தளபதி’க்காக. தீபாவளிக்கு வந்திருந்த திரைப்படத்தை முன்பதிவு செய்ய ஆல்பட் திரையரங்கு பக்கம் சென்றிருந்தது மலரும் வைபவம். ‘ராக்கம்மா கையைத் தட்டிய’ பரவசங்கள் நிறைந்த நினைவுகளுடன் மூன்று மணியளவில் அபிராமி ஹோட்டலை நானும் என்னுடைய அண்ணன் ஹரிஹரனும் சென்றடைந்தோம். கூட ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்ளுவது நல்லதாகப் பட்டது. இலக்கிய சந்திப்பில் இணையத்தரமாய் ஏதாவது விவகாரம் கிளப்பி கைகலப்பானால் தர்ம அடியில் இருந்து காப்பாற்ற சகோதரனை பக்கபலமாக வைத்துக் கொண்டு வரவேற்பரையில் காத்திருக்க ஆரம்பித்தோம்.

    Pagirvu Ilakkiya Santhippu with Sivakasi Bharathy Ilakkiya Sangam & Vaikarai Ilakkiya Vaasalஎங்களுக்கு முன்பே இதழியலில் பணிபுரியும் சோமசுந்தரம் ஆஜர். அவருடைய கவிதையார்வத்தை தெரிந்து கொண்டிருக்கும்போதே, ‘அபிராமி’ உணவகம் மற்றும் குடிலகத்தின் உரிமையாளர் எஸ். விஜயன் எங்களுடன் இணைகிறார். தன்னுடைய ‘மௌனம் பேசும்’ துளிப்பா தொகுப்பைக் கையெழுத்திட்டு தந்தார்.

    புரட்ட ஆரம்பித்ததில் எனைக் கவர்ந்த இரண்டு ஹைக்கூ:

    1. ஓடிய நதிகள்
    தவழ்ந்து செல்கின்றன
    கோடைக்காலம்

    2. அணிந்த ஆடையை
    மாற்றுவதேயில்லை
    வண்ணத்துப்பூச்சி

    நல்ல முறையில் அச்சிடப்பட்டு, குறிப்பிடத்தக்க துளிப்பாக்களைக் கொண்ட தொகுப்பு.

    With Mariya Therasaஅடுத்து வந்தவர் மரிய தெரஸா. பனிரெண்டு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டவர். நிர்மலா சுரேஷின் படைப்புகளில் எம்.·பில். ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். தமிழகத்துச் சூழ்நிலையில் குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு, ஹிந்தி ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டு, படைப்பிலக்கியத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருவதை அறிய முடிகிறது. கவிதை, குறும்பா, திறனாய்வு, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில் பங்காற்றுகிறார்.

    நவீன நாடக நடிகர் விஜயேந்திரனுடன் சிறிது உரையாட வாய்ப்பு கிடைக்கிறது. ந. முத்துசாமி வழியில் எவ்வாறு சிவகாமி பெத்தச்சி அரங்கம் நிரம்பும் அளவு With Vijayendran & Amirtham Sooryaசென்னையில் நவீன நாடகங்கள் வேர் கொண்டிருக்கிறது என்பதை உள்ளார்ந்த ஆர்வத்துடன் விவரிக்கிறார்.

    மூன்றரை மணிக்குத் ‘சூழ்வெளிக் கவிஞர்’ வைகைச் செல்வி, திலகபாமா, வில் விஜயன், தமிழ்மணவாளன், ‘அமிர்தம்’ சூர்யா என அனைவரும் வந்து சேர ‘கல்வெட்டு பேசுகிறது’ சொர்ணபாரதி வரவேற்கிறார்.

    தமிழ் மணவாளனுக்கு சிரமமான பொறுப்பு. என்னை அறிமுகப்படுத்தும் வேலை. என்னுடைய திண்ணை, தமிழோவியம், வலைப்பதிவு எழுத்துக்களைப் படித்துவிட்டு அதன்மூலமாக தான் Thamizh Manavalan Welcomesபெற்ற உருவகத்தைக் கொண்டு பேசினார். நியுயார்க் வேலைநிறுத்தம் தொடர்பான கட்டுரை, அமெரிக்கத் தேர்தல் என்று அவர் விரிவாக அலசலை முன்வைக்கிறார். பிட் நோட்டிஸ் போன்ற அறிமுகம்தானே கிடைக்கும் என்று நான் எண்ணியதை உடைத்து, வருகையாளர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியும் விட்டுவிட்டார்.

    எனக்குத் தரப்பட்ட, நானே விரும்பி எடுத்துக்கொண்ட தலைப்பு ‘எனது வாசிப்பனுபவம்’. வந்திருந்த சிற்றிதழ் படைப்பாளிகளையும், நவீன நாடக கர்த்தாக்காளையும், இலக்கிய அமைப்பு ஆர்வலர்களையும் கருத்தில் கொண்டு என்னுடைய இராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் தலைப்பு Kalvettu Pesugirathu Sitrithazh Editor Sornabharathy Introducesஅனுபவங்களையும், ராஜேந்திரகுமார் பனியன் வாசக ரசனைகளையும் சொற்பொழியாமல் தவிர்த்துவிடுகிறேன்.

    போதிய அளவு ரெ·ப்ரன்ஸ் எடுக்காதது முதல் காரணம். ‘சுந்தர ராமசாமி நடிகர் விஜய்யை முன்னிறுத்துவதை ஜெயமோகன் வெளிக்கொணருவதும் – இளங்கோவடிகள் மாதவியை முன்னிறுத்துவதை கலைஞர் ரசிப்பதும்’ போன்ற இலக்கியத்தரமான சிந்தனைகள் பாயாத ‘ஜெட்-லாக்’ கலையாத மயக்கத்தில் இருந்தது இரண்டாவது காரணம்.

    என்னுடைய புத்தக வாசிப்பு குறித்த பதிவுகளை சுருக்கிக் கொண்டு இணையம் குறித்து பேச விரும்புவதையும் கேள்வி பதிலாக உரையாடுவதை விரும்புவதையும் சொன்னேன். வலையின் With partial list of Participantsமூலம் ‘கல்வெட்டு பேசுகிறது’, ‘அமிர்தம்’ போன்ற சிற்றிதழ்கள் பரவலான கவனிப்பைப் பெறக்கூடிய சாத்தியக்கூறுகள்; துளிப்பா, கவிதைகளுக்குக் கிடைக்கும் உடனடி விமர்சனங்கள்; ஒத்த சிந்தனையுள்ளவர்களை எளிதாக சென்றடையக் கூடிய வாய்ப்புகள்; உங்களுக்கு அறிமுகமான வழக்கமான விஷயங்கள்தான்.

    தலைப்பை ரசமாக வைப்பதன் முக்கியத்துவத்தை சொல்லத் தவரவில்லை. ‘வைகோவைக் குறித்து த்ரிஷா என்ன சொன்னார்?’ என்று தலைப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே, நீங்கள் எழுதிய கவிதை, கட்டுரை எல்லாம் கொடுங்கள். கடைசியாக ‘பின் குறிப்பாக: ஒன்றுமே சொல்லவில்லை’ என்று முடித்துக் கொள்ளுமாறு எனக்குத் தெரிந்த டிப்ஸ் கொடுக்கிறேன்.

    புத்தகம் அச்சடிக்க ஆகும் செலவு, அன்றாட நிகழ்வுகளுக்கு உடனடி எதிர்வினை கருத்தாக்கம், The Talkersசக படைப்பாளிகளுடன் எளிதாக ஊடாடுதல் ஆகியவற்றை மீண்டும் வலியுறுத்தி முடித்துக் கொண்டேன்.

    நான் வலைப்பதிவதை போலவே அலைபாயும் பேச்சு. சென்ற முறை பிரபஞ்சனின் அமெரிக்க வருகைக்குப் பின்பு ‘பகிர்வு’ தன் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறது. மார்ச் 25 அன்று அடுத்த சந்திப்பு. பிரபஞ்சனின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது போலவே என்னுடைய பேச்சிலும் ஏதாவது விவகாரம் கிளப்பலாம் என்று ஒன்றிரண்டு axiom-களை முன்வைக்கிறேன்:

  • தமிழக மக்களிடையே திண்ணை.காமும், இலங்கைத் தமிழரிடையே பதிவுகள்,காமும் பெரும்பாலான வலைஞர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், எண்ணிக்கையில் அதிகமான Amirtham Soorya Talksகவிதைகளும் கதைகளும் பதியப்படுவதால், அங்கு உங்களின் படைப்புகள் கவனிப்பில்லாமல் காணாமல் போகலாம்.
  • நான் ஆசிரியர் குழுவில் பங்கு வகிக்கும் தமிழோவியம்.காம் தளத்தில் சீரான தேர்வில் கதைகளும் கவிதைகளும் இடம்பெறுவதால், அதிகமான வாசகர்களால் படிக்கப்பெறும் வாய்ப்பு நிறையவே உண்டு.

    தேன்கூடு, தமிழ்மணம் போன்ற முக்கிய தளங்களின் முகவரிகளையும் (எழுத்துரு மற்றும் வலைப்பதிவு அமைக்க) என் மின்னஞ்சலையும் பகிர்ந்து கொண்டேன்.

    தொடர்ந்து திலகபாமாவின் மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் பேச்சு. கவின் கவி Thilagabama Speechபோன்றோரின் ஆழமான மாற்றுக் கருத்துக்களுடன் விவாதம் தொடர்ந்தது. சூரியாளின் கட்டுரை முழுதும் அவரின் வலைப்பதிவில் படிக்க கிடைக்கிறது.

    ‘மரவண்டு’ கணேஷ் கரெக்டாக டிபன் வருவதற்கு சில மணித்துளிகள் இருக்கும்போது நுழைகிறார். ஜிலேபி, இட்லி, வடை, விதவிதமான சட்னி என்று உள்ளே தள்ளினோம்.

    வைகறை இலக்கிய வாசல் நிகழ்வை ‘வில்’ விஜயன் தன்னுடைய மிமிக்ரி மூலம் தொகுத்து வழங்கியது ஹைலைட். ‘பாஸ்டன் பாலாஜி சென்னையை விட்டு பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் சென்னைத் தமிழை மறக்காமல் இருக்கிறாரே’ என்று ஜனகராஜாக Vil Vijayan Speechமாறுகிறார். பெண்ணியத்தின் ரியாலிடியை கிருபானந்த வாரியாரைத் துணைக்கழைத்து சுட்டுகிறார். சிரித்து சிரித்து திலகபாமாவுக்கு விக்கலே எடுத்து விடுகிறது. இறுக்கமாகத் தொடர்ந்த களத்தை சுருக்கமாக நாலே வார்த்தையில் பல குரல் மன்னராக சொல்லி முடிக்கிறார். முழு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனித்ததும், அவற்றில் கண்ட நுணுக்கமான அவதானிப்புகளை நகைச்சுவையாக பகிடி செய்ததும் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

    ‘பகிர்வு’ என்னும் கூட்டத்தின் நோக்கத்திற்கேற்ப விழாவுக்கு வந்திருந்த படைப்பாளிகளையும், குறுகிய காலத்தில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ‘கல்வெட்டு பேசுகிறது’ ஆசிரியர் சொர்ணபாரதியையும், எனக்கும் ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்த தமிழ் மணவாளனையும் ஆர்வத்துடன் அனைவரையும் வரவழைத்த திலகபாமாவுக்கும் ‘அமிர்தம்’ ஆசிரியர் சூர்யா நன்று நவில்கிறார்.

    http://www.flickr.com/photos/86707200@N00/tags/pagirvu/ஜெயமோகனின் முன்னுரையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு, எம்.யுவனின் அணிந்துரை கொண்ட கவிதைத் தொகுப்பு, வெங்கட் சாமிநாதனின் மதிப்புரை தாங்கிய கலை விமர்சன கட்டுரைத் தொகுப்பு என்று தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும் படு எளிமையாகக் காணப்படும் அமிர்தம் சூர்யாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ‘அதற்குத் தக’ கவிதைத் தொகுப்பை தமிழ் மணவாளன் கையெழுத்துடன் பெற்றுக் கொள்கிறேன். ‘கங்கா கௌரி’ இதழ்கள் கிடைக்கிறது. சொர்ணபாரதியின் கவிதைகள் தாங்கிய ‘மனவெளியளவு’ கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

    அமெரிக்காவில் நண்பர்களுடன் பேசும்போது ‘டாக்ஸ் ·பைல் பண்ணியாச்சா?’ (இன்னும் இல்லை), ‘நல்ல ப்ளம்பர் யாரு?’ (வியட்நாமில் இருந்து வந்தவர்கள்) போன்ற உரையாடல்களே பகிரப்படும். சிவகாசி ‘பாரதி இலக்கிய சங்க‘மும் வைகறை இலக்கிய வாசலும் என் நெஞ்சாங்கூட்டில் என்றும் விலகாத தரமான சிந்தனையைக் கிளறும் பகிர்வை ஏற்படுத்திக் கொடுத்தது.

    மற்ற மற்றும் பெரிய உரு புகைப்படங்கள்


    | |

  • Vijayaganth Calculations in Viruthachalam

    எஸ். கலைவாணன் :: சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று சந்திப்பதைப் போல, பா.ம.க.வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து, ராமதாஸ§க்கே சவால் விட்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். துடிப்புமிக்க ரசிகர் பட்டாளம் மற்றும் பண்ருட்டியாரின் பக்கபலத்தோடு, நகரப்பகுதியில் வசிக்கும் வன்னியர் அல்லாத பிற சாதியினர் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக வாங்கி, பா.ம.க.வைப் பழிதீர்க்கும் கணக்கோடுதான் மிகத் துணிச்சலோடு இந்தத் தொகுதியை கேப்டன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

    விருத்தாசலம் அவரது சொந்த ஊர் கூட கிடையாது. அவரது ஜாதியைச் சேர்ந்தவர்களோ, உறவினர்களோ கூட அங்கு இல்லை. அப்படியிருக்கும்போது, அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் கேப்டன், இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்பதுதான் எல்லோரது கேள்வியுமே!

    வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இங்கு, பா.ம.க.வுக்குச் செல்வாக்கு அதிகம். பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் கோவிந்தசாமி தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் விருத்தாசலம் வருகிறது. இதன் எம்.பி. பொன்னுசாமியும் பா.ம.க.வைச் சேர்ந்தவர்தான். விருத்தாசலம் நகராட்சி கூட, பா.ம.க. வசம்தான் இருக்கிறது. கடந்த எம்.பி. தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்தான் பா.ம.க. அதிக ஓட்டு வாங்கியது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட சமயத்திலும் இங்கு கணிசமாக ஓட்டு வாங்கியிருக்கிறது. கடந்த கால வரலாறு, தற்போதைய கூட்டணி பலம் என எல்லாமே பா.ம.க.வுக்குச் சாதகமான சூழ்நிலையோடுதான் உள்ளன. ஆனாலும் இந்தத் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்த ரகசியத்தின் சூட்சுமம் தெரியாமல் விழிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

    விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, அவரைச் சீண்டிப் பார்த்தவர்கள் பா.ம.க.வினர்தான் . கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜயகாந்த், மத்திய அமைச்சர் அன்புமணியை விமர்சித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பல இடங்களில் மோதிக்கொண்டனர். இதனால் ‘கஜேந்திரா’ படத்தை வெளியிட விடாமல் பா.ம.க.வினர் தகராறு செய்தனர். கடும் நெருக்கடிக்கு உள்ளான விஜயகாந்த், தேர்தல் மூலம் பா.ம.க.வினருக்குப் பாடம் புகட்ட முடிவு செய்தார். மதுரையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கிய போதே, இப்படியரு எண்ணம், அவரது ஆழ்மனதில் இருந்திருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை விட, தங்களை அதிகம் சீண்டிப்பார்த்த பா.ம.க.வினர் மீதான அவரது கோபம், இன்னமும் தணியவில்லை. எந்த ஜாதியை பின்னணியாக வைத்துக்கொண்டு பா.ம.க. ஆட்டம் போடுகிறதோ, அதே ஜாதியினரின் வாக்கு வங்கி அதிகமாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு, பா.ம.க.வுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதால்தான் அவர் பா.ம.க. வின் கோட்டையான விருத்தாசலத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது.

    ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டதாகத் தான் பலரும் விஜயகாந்த்தைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால், அவர் எல்லா விதத்திலும் கணக்குப் போட்டுத் தான் களத்தில் குதித்திருக்கிறார். விருத்தாசலம் தொகுதியில் கிராமப்புறங்களில்தான் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அடர்த்தியாக உள்ளனர். ஆனால், மொத்தமுள்ள இரண்டு லட்சம் வாக்காளர்களில், நான்கில் ஒரு பங்கான ஐம்பதாயிரம் பேர், விருத்தாசலம் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இந்த ஐம்பதாயிரத்தில் வன்னியர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் குறைவுதான். மீதமுள்ள வன்னியரல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்களைத்தான் விஜயகாந்த் குறிவைத்திருக்கிறார். குறிப்பாக, பெண்களின் வாக்குகளைக் கவர, அவரது மனைவி பிரேமலதாவை முழு வீச்சில் பிரசாரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறாராம். பிரேமலதா தங்குவதற்காக இப்போதே வீடு பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர் கேப்டனின் விசுவாசிகள். அவரது டார்கெட் பெண்கள் ஓட்டுதான். பெண்களைக் கவர, வீடு வீடாகப் படியேறி ஓட்டு கேட்கப் போகிறார் அவர். அவருக்கு உதவியாக அவரது தம்பி சுதீஷும் களத்தில் குதிக்க உள்ளார்.

    நகரத்துக்கு பிரேமலதா என்றால், கிராமப் பகுதிக்கு வன்னியர் இனத்தைச் சேர்ந்த பண்ருட்டியார் தான் இன்சார்ஜ். விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளதால், விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியைக் கவனித்து கொள்ளும் முழு பொறுப்பும் பண்ருட்டியார் கையில் தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முன்பு ரசிகர் மன்றத்தில் இருந்த இளைஞர்கள்தான் இப்போது கட்சிப் பொறுப்புகளில் உள்ளனர். முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் வேகத்தோடு உள்ள அவர்களை, அரசியல் கட்சிக்கே உரிய பக்குவத்துக்குக் கொண்டு வந்து, தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதும் அவரது வேலைகளில் ஒன்று. இதனால் தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் சங்கரை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளரான வன்னியர் இனத்தைச் சேர்ந்த பாலகுமாரை நகரச் செயலாளராகப் போட்டுள்ளார் அவர். பா.ம.க. மீது அதிருப்தியில் இருக்கும் வன்னியர்களை மூளைச் சலவை செய்து தே.மு.தி.க.வுக்குக் கொண்டுவரும் பணியில் அவர் ஜரூராக களமிறங்கிவிட்டார். அவர் போட்டியிடும் பண்ருட்டி தொகுதி, விருத்தாசலத்துக்குப் பக்கத்தில் தான் உள்ளது. இதனால் தனது தொகுதியில் வேலை நேரம் போக, அடிக்கடி விருத்தாசலத்துக்கு வந்து கூடுதலாக கேப்டன் தொகுதி பணியிலும் ஈடுபட உள்ளார்.

    எம்.பி., எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் எனத் தொடர்ந்து எல்லாப் பதவிகளையும் பா.ம.க.வே தட்டிப்பறித்துக் கொள்வதால் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. வினரை, தங்கள் பக்கம் திருப்பும் வேலையையும் தே.மு.தி.க.வினர் ரகசியமாகச் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தொகுதியில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் உள்ளூர் பிரச்னையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வாக்கு சேகரிக்க உள்ளனர்.

    2004_ம் ஆண்டு பெய்த கன மழையில், 125 ஆண்டு பழைமை வாய்ந்த மணிமுத்தாறு பாலம் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் திருச்சி, பெண்ணாடம் போன்ற பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், எட்டு கிலோ மீட்டர் சுற்றித்தான் விருத்தாசலம் நகரத்துக்கு வரமுடிந்தது. சில நாட்களில் நாச்சியார்பேட்டை பாலமும் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் 36 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு வாகனங்கள் நகருக்குள் வந்தன. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதுப்பாலம் கட்டப்படவில்லை. தற்போதுதான் ஐந்தரைக் கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வேலை நடந்து வருகிறது. ‘பாலம் கட்ட இவ்வளவு தாமதத்துக்குக் காரணமே, அ.தி.மு.க., பா.ம.க.வின் மெத்தனம்தான்’ எனச் சுட்டிக்காட்டி விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாகக் கிசுகிசுக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

    விருத்தாசலத்தில் எங்கு திரும்பினாலும் இப்போது விஜயகாந்த் போட்டியிடப்போவதைப் பற்றித்தான் பரபரப்பாகப் பேசுகின்றனர். கேப்டன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று அவரது கட்சிக்காரர்களே கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, ரசிகர்கள் சென்னைக்குக் கிளம்பிவிட்டனர். அங்கு கேப்டனைச் சந்தித்து, தங்கள் தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிடுவதற்கு சென்டிமெண்டாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    “விஜயகாந்துக்கு ராசி நெம்பர் 5. விருத்தாசலத்தில் உள்ளது புகழ்பெற்ற சிவன் கோயிலான விருத்தகிரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஐந்து கோபுரங்கள் உள்ளன. அதேபோல், இங்குள்ள கொடிமரத்தின் எண்ணிக்கையும் ஐந்து தான். ஐந்து பிராகாரம், ஐந்து நந்தி, ஐந்துதீர்த்தம், ஐந்து தேர் என எல்லாமே இங்கு ஐந்து தான். அதனால்தான் ஐந்தை ராசியாகக் கொண்ட கேப்டன் இங்கு போட்டியிடுகிறார்”

    என்று கூறுகிறார்கள்.
    …….
    “விருத்தாசலம் தொகுதியில் கம்மாபுரம் ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 156 கிராமங்களில் எங்க மன்றத்துக்குக் கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கிளையிலும் 100 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல், விருத்தாசலம் ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 126 ஊர்களில் எங்களுக்குக் கிளைகள் உள்ளன. இங்கும் ஒரு கிளைக்கு சராசரியாக 200 முதல் 300 உறுப்பினர்கள் உள்ளனர். இப்படிக் குக்கிராமங்களில் கூட எங்களுக்கு கிளைகள் இருக்கின்றன. எங்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், முழு வீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டு, கேப்டனை வெற்றிபெற வைத்து விடுவார்கள்.

    கள்ளக்குறிச்சி கூட்டத்துக்குச் செல்லும் போதும், கடலூரில் சுனாமி சேதத்தைப் பார்வையிட்டுச் சென்றபோதும் கேப்டன் எங்கள் ஊர் வழியாகத் தான் சென்றார். அப்போது, எங்கள் ஊரில் நிற்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நிற்காமல் சென்றுவிட்டார். விருத்தாசலத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி ஐந்து ஆண்டுகள் சேவை செய்யப்போகிறோம் என்பதற்காகத்தான், அவர் அப்போது நிற்காமல் சென்றிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிகிறது. பா.ம.க.வின் பலவீனமே அவர்களின் எம்.பி., எம்.எல்.ஏ., சேர்மன் ஆகியோர்தான். இவர்கள் இந்தத் தொகுதிக்கு உருப்படியாக எதையுமே செய்யவில்லை. இதனால் மக்கள் இவர்கள் மீது வெறுப்பில் உள்ளனர். இந்த முறை விருத்தாசலம் மக்கள் கேப்டனைத் தான் எம்.எல்.ஏ., ஆக்குவார்கள்” என்று விஜயகாந்த் போலவே, புள்ளி விவரத்தோடு பேசினார் தே.மு.தி.க.வின் நகரத் தலைவர் பாலகுமார்.

    முழு கட்டுரை: Kumudam Reporter

    CPI Candidates & Contesters

    Tamil nadu Commounist Party candidate selction

    நன்றி: தமிழ் முரசு

    Imiayam Tamil TV Channel

    இளமையில் வறுமை என்பது கொடுமை. அதனினும், உடையில் வறுமையைப் பார்க்க முடியாதது இன்னும் கொடுமை.

    முதல் கொடுமை தீர்க்க திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டும். இரண்டாம் கொடுமை தீர சன் டிவி தொடுப்பு கொடுக்க வேண்டும்.

    வறுமையை பொழுதுபோக்காக ஆக்க;
    பொழுதுபோக்காக வறுமையைக் கழிக்க…

    DMK Free Offer on Colour TVs in Election Maifesto - Nakeeran via Dinakaran

    சொல்லாம ஃப்ரீயாக் கொடுக்கறது ஜெஜெ பாலிசி!
    சொன்னதை ஃப்ரீயாக் கொடுக்கறது திமுக பாலிசி?

    நன்றி: தினகரன்


    புதிதாக ‘இமையம் தொலைக்காட்சி‘ ஆரம்பிக்கிறார்களா? யாரு பின்னாடி இருக்கிறார்கள்… இணையத்தளம், அறிவிப்பு எங்கே கிடைக்கிறது… (பதிலுக்கு முன்கூட்டிய நன்றிகள்.)
    Imiayam Tamil TV Channel


    | |