ராஜ் டிவியில் கருணாநிதி பேட்டி


பொதுவாக சன் டிவி தவிர மற்ற எந்த தமிழ் தொலைக்காட்சிக்கும் பேட்டி அளிக்காத திமுக தலைவர் திரு.கருணாநிதி – இப்போது ராஜ் டிவியின் தேர்தல் 2006 சிறப்பு நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

‘வணக்க்க்க்க்க்க்கம்’ புகழ் நிர்மலா பெரியசாமி செய்யும் நேர்காணல் இது. நேற்று முதல் பாதி ஒளிபரப்பானது. இன்று அடுத்த பகுதி ஒளிபரப்பாகும் என அறிவித்தார். நிர்மலா கேட்கும் கேள்விகள் தவிர பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் (ஈ மெயில்?) பேட்டி அளிப்பவர் பதில் சொல்லுமாறும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் கருணாநிதி அவர்கள் பல கேள்விகளுக்கும் தனக்கே உரிய சாதுரியத்துடன் பதில் சொன்னார். நிர்மலாவும் அவரின் டிரேட்மார்க் புன்னகையுடன் கேள்விக் கணைகளை தொடுத்தார். கடைசியில் ‘வணக்க்க்க்க்க்கம்’மும் உண்டு.

பார்க்கத்தவறாதீர்கள். இன்று 5-ஏப்ரல் இரவு 8 மணிக்கு. ராஜ் டிவி.

மேலதிக விபரங்கள் இட்லி வடை பதிவுலயும் இருக்கு.

oOo—oOo—oOo—oOo—oOo—oOo—

நேற்று முன் தினம் கம்யூனிஸ்ட் (சிபிஐ) தலைவர் தா.பாண்டியனின் பேட்டி. அவரும் நன்றாகவே பேசினார். அதிமுக அரசை மிகவும் தாக்கி பேசவில்லை. திமுகவின் கலர்டிவி வாக்குறுதிகளை மிகவும் வரிந்து கட்டி ஆதரிக்கவும் இல்லை. ஆனால் நல்ல தமிழில் பேசினார். உலகுக்கே இந்தியாவின் பொதுவுடைமை வழிகாட்டும் என பாரதியை மேற்கோள் காட்டி கம்யூனிசம் வாழும் என்று தான் நம்புவதாகவும் சொன்னார்.

oOo—oOo—oOo—oOo—oOo—oOo—

முன்பெல்லாம் தூர்தர்ஷனில் தான் 15 நிமிடம் ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கி கட்சித் தலைவர்கள் உணர்ச்சியே இல்லாமல் பேசும்படி ஒளிபரப்புவார்கள். சன் டிவியும் ஜெயாவும் இன்னும் தேர்தல் சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்காத நிலையில் (அதான் செய்தியிலேயே எல்லாத்தையும் காண்பிக்காறங்களே என நீங்கள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது) ராஜ் டிவி முந்திக்கொண்டுள்ளது. யாரின் தயாரிப்பில் இது என தெரியவில்லை. ராஜ்டிவி செய்திகள் எல்லாம் ஆரம்பித்ததைப் பார்த்தால் ஏதோ ஒரு பெரிய கை இருக்கும் போல தெரிகிறது. ஆனால் ஒளிபரப்பு துல்லியம் இல்லை. அதே கலங்கலான ஒளிபரப்புதான்.

oOo—oOo—oOo—oOo—oOo—oOo—

2 responses to “ராஜ் டிவியில் கருணாநிதி பேட்டி

  1. Unknown's avatar செந்தில்

    விரைவில் துல்லியமான ஒளிபரப்பு துவங்கிவிடும், காரணம் வருங்கால முதல்வர் ஒருவர் அதன் பங்குகளை வாங்கிவிட்டார் .

  2. அவர், ஏற்கனவே, விஜய் டிவிக்கு, இதே மாதிரி பேட்டி கொடுத்திருக்கார். பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்கு என்றுமே தயங்காதாவர் அவர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.