Monthly Archives: ஒக்ரோபர் 2004

Neighbour Padikkattu 

Neighbour Padikkattu Posted by Hello

With Kids – Neighbour Navarathri 

With Kids – Neighbour Navarathri Posted by Hello

Pakkathu Veettu Golu 

Pakkathu Veettu Golu Posted by Hello

Kumari Anandan Visit to Boston 

Kumari Anandan Visit to Boston Posted by Hello

சாப விமோசனம் – பேஸ்பால்

Red Sox Celebration (c) New York Timesநியு இங்கிலாந்து ரெட் சாக்ஸ் நியு யார்க்/நியு ஜெர்ஸி யான்கீஸை வென்றிருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்து சில நாட்களே ஆன போது பார்க்க ஆரம்பித்த விளையாட்டு. அதிகம் ரசிக்கவில்லை. ஆனால், உள்ளூர் அணி வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்ததாலும் அலுவலகத்தில் காபி போடும் சில விநாடி அலசல்களில் பேந்த பேந்த விழித்ததாலும் பார்க்க ஆரம்பித்தேன். ஆட்டம் நடக்கும் ப்ரான்க்ஸில் (Bronx – நியு யார்க்) இருந்து பலகாத தூரம் தள்ளி இருக்கும் எடிஸனில் வசித்தாலும் ‘நம்ம டீம்’ என்னும் அடைமொழி கொடுத்து, விதிகளை நண்பர்கள் விளக்க, விளையாட்டில் ஆர்வம் பிறந்தது.

பாஸ்டன் பெயர்ந்த பிறகு ரெட் சாக்ஸும் சோபிக்கவில்லை. ஆட்டமும் ரசிக்கவில்லை. அதற்கேற்ப அமெரிக்கக் கால்பந்து போன்ற பிற விளையாட்டு அணிகள் கலக்க ஆரம்பிக்க, பேஸ்பந்தை மறந்தே போனேன்.

Boston's Johnny Damon (c) New York Times

வருடா வருடம் நடக்கும் உலகக்கோப்பை (அமெரிக்காவும் தொட்டுக்கக் கொஞ்சமே கொஞ்சம் கனடாவும்) போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதியாவது; பிறகு நியு யார்க் ‘எலி – ஜெர்ரி’ யான்கீஸிடம், ‘டாம் – பூனை’யாக அடிபடுவது; எனத் தொடர்ந்தது.

இதற்கெல்லாம் அடுத்த படியாக போன வருடப் போட்டிகளில் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு. பாஸ்டன் ஆடுகளத்தில் சிப்பந்தி ஒருவர் யான்கீஸ் தோற்கும் நிலையில் இருந்ததனால் கெக்கலித்திருக்கிறார். பொறுக்காத ‘நியு யார்க்’தனமையுடன் யான்கீ ஒருவர் கையை ஓங்கியிருக்கிறார். ஏற்கனவே, ஜென்ம விரோதி போல் முறைத்துக் கொண்டவர்கள், பாரதப் போருக்கே இறங்கினார்கள். எனினும், வழக்கமான பாஸ்டன் தோல்வியே முடிவாக இருந்தது.

இந்த எண்பத்தியாறு வருட தோல்விமுகத்துக்குக் காரணமாக சொல்லப்படுவது ‘பேப் ரூத்’ என்னும் ஆட்டக்காரரின் சாபம் என்று சொல்லப்பட்டு வந்தது. அற்புதமாக விளையாடி பேஸ்பால் உலகையே புரட்டிப் போடப் போகும் அவரின் அருமை தெரியாமல், பணத்துக்கு லொத்துப்பிடித்த பாஸ்டனின் ரெட் சாக்ஸ், பேரம் பேசி நியு யார்க்கிற்குத் தள்ளிவிட்டுவிட்டார்கள். அப்பொழுது, மனம் நொந்து அவர் கொடுத்த சாபம் இன்று வரை தொடர்ந்திருக்கிறது.

இந்த வருடமும் வெற்றி எளிதாக விழவில்லை. இப்பொழுது நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா ஐந்துநாள் போட்டிகளில் இரண்டு டெஸ்ட்களைக் கைப்பற்றினால், தொடரில் வெற்றி. அதே போன்று, பேஸ்பாலில் நான்கு ஆட்டங்களை வென்று விட்டால், தொடர் முடிந்து விடும். முதல் மூன்று ஆட்டங்களில் மண்ணைக் கவ்வி, மீதம் இருக்கும் நான்கையும் வென்றாலே, அமெரிக்கன் லீக் தொடரை வெல்ல முடியும்.

Boston's Curt Schilling (c) Boston Globe

ஆடிய முதல் ஆட்டத்திலேயே, நட்சத்திர பந்து வீச்சாளர் ஷில்லிங் அடிபட்டுக் கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் காலுறையில் ரத்தம் கசிய பந்து வீசி ரெட் சாக்ஸின் மூன்றாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, தொடரை சமன்படுத்தினார்.

இந்தத் தொடரின் ஒவ்வொரு ஆட்டமுமே பல இன்னிங்ஸ்கள் நீண்டு, இரவுத் தூக்கங்களை குறைத்தும், இருதயத் துடிப்பை அதிகரித்தும், சோபாவை அதிகம் தேய்க்காமல் சீட் நுனிக்குத் தள்ளிவிட்டிருந்தது. பேஸ்பாலும் (பழைய) டேவிஸ் கோப்பையும் ஒரே போல. அந்தக் கால டேவிஸ் பந்தயங்களில் கடைசி செட்டுக்கு ‘டை-ப்ரேக்கர்’ கிடையாது. எந்த வீரராவது, எதிராளி பந்து வீசும் ஆட்டத்தை மொத்தமாக முறிக்கும் வரை நீண்டு கொண்டே போகும். அதே போல், எந்த அணியாவது ‘ஹோம் ரன்’ என்று விளிக்கப்படும் கிரிக்கெட்டின் சிக்ஸரை அடிக்காவிட்டால், இரு அணிகளும் ஆட்டத்தை முடிக்காமல் தொடரும்.

நேற்றைய ஆட்டம் முடிந்தபோது நடுநிசி. முந்தாநாள் பின்னிரவு இரண்டு மணி. நியு யார்க்கை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அடுத்து யாரோ… ஹூஸ்டனா, செயிண்ட் லூயிஸா? எவராக இருந்தால் என்ன 😉

கொலு பொம்மைகள்

மிகவும் ரசித்த பொம்மைகள்



1. ராமர் கட்டும் ராமேஸ்வரம் பாலம்

2. திருவண்ணாமலை கிரிவலம்

3. பாரதப் போரில் கண்ணனின் விஸ்வரூபம்

4. டைனோசார்கள் உலவும் ஜுராஸிக் பார்க்

5. ஆர்க்கெஸ்ட்ரா/கர்னாடக இசை கச்சேரி

6. உலக அதிசயங்கள்

7. திரைப்படபிடிப்பு தளம்

8. அரசியல் தலைவர்கள் செட்

9. தேர்த் திருவிழா கூட்டம்



அலுத்துப்போன பொம்மைகள்



1. கோபிகா வஸ்திராபரணம் (“அப்பா… ஏன் பப்பி ஷேமா இருப்பது விளையாட்டு?”)

2. கிரிக்கெட் செட் (“என்னய்யா இது… ஆளுக்கொரு பக்கம் நிக்கறாங்க?”)

3. ஊஞ்சல் கல்யாணம் (“சுத்தி எதுக்கு இவ்வளவு பேர்?”)

4. மனுநீதிச் சோழன்

5. சங்ககால அரசசபை

6. அஷ்டலஷ்மி

7. கொங்கை பிடிக்கும் ராதாகிருஷ்ணர்

8. அறுபடை வீடு

9. தசாவதாரம்




வரவேண்டிய பொம்மைகள்



1. கணினி நிறுவன இயங்குபாடு

2. புத்தக அலமாரியுடன் நவீன எழுத்தாளர்களின் மீட்டிங்

3. விதவிதமான மருத்துவ நிபுணர்கள்

4. ஜுலை நான்கு வாணவேடிக்கைக்குக் காத்திருக்கும் நதியோரத்து அமெரிக்க நகரம்

5. நியு யார்க் சுற்றுலா செட்

6. தமிழ் ஹீரோயின்கள் – அன்றும் இன்றும் செட்

7. தியேட்டரில் சந்திரமுகி வெளியீடு

8. நதிநீர் இணைந்த இந்தியா

9. ஜி.டி. நிற்கும் நாக்பூர் ஜங்ஷன்

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – ஜெயமோகன்

பகுதி 1 | பகுதி 2

  • எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக ‘விஷ்ணுபுரம்’ ‘பின்தொடரும்நிழலின் குரல்’ என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்னும் சற்று வயதாகும்போது அப்பிடிப்பும் என்னிடமிருந்து போய் நான் மேலும் சுதந்திரம் அடையலாம். அது ஒரு நம்பிக்கை.
  • புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல , சிந்திக்கும்படி அறைகூவினவர்.
  • பைபிளையோ ,குர் ஆனையோ, தம்ம பதத்தையோ , கிரந்த் சாகிப்பையோ ஆழமான மனநெகிழ்வும் கனிவும் இன்றி என்னால் வாசிக்க இயன்றதில்லை. ஆனால் ஞானத்தேடல் கொண்ட ஒருவனை ஒருபோதும் ஒரு மூல நூலும் திருப்தி செய்யாது. அவனது ஞானம் அவனே அறிந்துகொண்ட ஒன்றாகவே இருக்கும். நூல்கள் அவனது பாதை ஒளிகளே ஒழிய அவன் சென்று சேரும் இறுதி வெளிச்சம் அல்ல. ஒரு நூல் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குமளவு பிரபஞ்சம் சிறியதோ எளியதோ அல்ல. ஒரு மனிதனுக்கு தன் ரகசியத்தை முற்றாகச் சொல்லிவிடுமளவுக்கு அப்பிரபஞ்சத்தின் மனம் சிறுமைகொண்டதுமல்ல. ஒரு நூலை இறைவனின் சொற்களாகக் காண்பதும், அதை எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உரியதாக நம்புவதும்தான் மூடநம்பிக்கைகளில் தலையாயது என ஒரு ஞானத்தேடல்கொண்ட மனிதன் ஆழமாக அறிவான் என்றே நான் நினைக்கிறேன்.
  • ஒரு நம்பிக்கையாளனிடம் ஞானத்தேடல்கொண்டவன் விவாதிக்க இயலாது. அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு. அவர்கள் உரையாட எதுவுமே இல்லை. அதிகபட்சம் ஒரு புன்னகையுடன் தேடல் கொண்டவன் நம்பிக்கையாளனிடமிருந்து விலகி நகர்ந்துவிடவேண்டும் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
  • ”நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ] என்று வகுத்துரைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக இச்சூத்திரத்தின் முதல் வரி மட்டுமே இங்கு மேடைமேடையாக முழங்கப்பட்டு கீதையில் கிருஷ்ணன் சாதிகளை அவரே உருவாக்கியதாகச் சொல்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை’ என்று ஈ.வே.ரா சொன்னாரே என்று கேட்டால் அவர் சொன்ன நோக்கம், தருணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதைப் பார்க்கவேண்டும்.
  • மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை’ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே.
  • இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும் , பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும், ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும், உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம்.
  • மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் சௌனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.
  • ஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய ‘சொல்நிலக்காட்சி’ யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.
  • ”நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது? அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா?”.
  • நான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை, அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.
  • கீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் ”செயலாற்றுக! செயலாற்றுக! ” என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.
  • ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது. மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது.

    நன்றி: திண்ணை.காம்

  • வீரப்பன் வீரமரணம்

    -) Nothing relevant1. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?

    2. அமெரிக்கத்தேர்தல் சமயத்தில் ஒஸாமா பிடிபட்டால், கெர்ரிக்கு பாதகம். ஆனால், தற்போதைக்கு அவன் மாட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. சதாம் போல், வீரப்பன் போல் திடீர் என்று நவ. 2-க்கு முன் காட்சியளிக்கலாம்.

    3. சேத்துக்குளி உட்பட பலரும் ‘என்கௌண்டர்’ ஆகியிருக்கிறார்கள்.

    4. சுட்டுக் கொல்லப்படாமல், உயிரோடு பிடித்திருந்தால், நிறைய பின்புலம் தெரிய வந்திருக்கும். வீரப்பனின் ஸ்விஸ் வங்கியெண் என்ன?

    Is Jaya Durga Mata5. நீதிமன்றங்களில் ஆஜர் செய்வித்திருந்தால் — பூலான் தேவி போல் வீரப்பனை சென்னை கோட்டையருகே சுட்டிருப்பார்கள். ஆனால், அதற்குமுன்பு வீரப்பனின் infrastructure, பணப்பட்டுவாடாத்தடங்கள், போன்றவை தெரிய வந்திருக்கும்.

    6. ‘ஆவி அமுதா’ வீரப்பனோடு பேசுவாரா?

    7. சத்தியமங்கலத்தில் இருந்து வேறு எதுவும் ‘நிஜ’ வீரப்பனோ, ‘புதுசு கண்ணா புதுசு’ வீரப்பர்களோ வராமல் இருக்க வேண்டும்.

    8. முன்னாள் சென்னை கமிஷனர் விஜயகுமார்(தானே) இப்பொழுது வீரப்பனைப் பிடித்திருக்கிறார். மீண்டும் சென்னை கமிஷனர் ஆகிவிடுவாரா?

    9. ‘தமிழர் விடுதலைப் படை’ எப்படி இருக்கிறது? தலைமறைவா அல்லது அவர்களும் இறந்திருக்கிறார்களா?

    10. ஜெயலட்சுமி போனார்… வீரப்பனார் வந்தார்.

    ARUN VIEWS | Forest brigand Veerapan shot dead – Sify.com | Rediff

    Begging to God 

    Begging to God Posted by Hello

    Niagara Falls in NIte – 5 

    Niagara Falls in NIte – 5 Posted by Hello