ஞாயிறு இரவில் தூர்தர்ஷன்


பாலாஜி

தூக்குத் தூக்கிப் படம் பார்த்திருக்கிறீர்களா?

1.கொண்டு வந்தால் தந்தை

2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

3. கொலையும் செய்வாள் பத்தினி

4. உயிர்காப்பான் தோழன்

ஒரு சத்திரத்தில் இந்த விவாதம், நடக்கும் பொழுது, பொருள் தேடி நாலாபுறமும் அனுப்பப்பட இளவரசர்களில் ஒருவரான சிவாஜி, அதை ஒத்துக் கொள்ள மாட்டார். அதில் உண்மையில்லை என்று நிரூபவதாகக் கூறிச் சாவாலிட்டு, கிளம்புவதுதான் கதை. பத்மினி, ராகினி, பாலையா, என்று திறமையான நடிகர்களும், வித்தியாசமான கதையுடனும், அற்புதமான பாடல்களுடனும் வந்த படம். இதில் வரும் ‘ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே’ என்று வரும் டப்பாங்குத்துப் பாடலைக் கேட்டுக் கோபமடைந்த கோனார்கள், நெல்லையில் ஒரு தியேட்டரின் திரைச் சீலையைக் கத்தியால் குத்திக் கிழித்து விட்டனர். பார்க்கவில்லையெனில் ஒரு முறை பாருங்கள். கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.

அன்புடன்

ச.திருமலை



‘தூக்கு தூக்கி’ எனக்குப் பிடித்த படம். தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை இரவில் சிவாஜி படம் என்றாலே, well left என்று காத தூரம் ஓடிக் கொண்டிருந்தேன். அம்மாவின் வற்புறுத்தலால் பார்க்க ஆரம்பித்த இந்தப் படத்தை, மிகவும் ரசித்தேன். திடீர் என்று, டிவியில் அன்று பார்த்த படங்களில் எவை பிடித்திருந்து, நினைவிலாடுகிறது என்று பட்டியல் போட்டு பார்த்தேன்.

  • பாலு மகேந்திராவே ரசிக்கும் ‘அந்த நாள்’

  • பாகப் பிரிவினை

  • பெரும்பாலான ம.கோ.ரா. படங்கள். சட்டென்று மனதில் தோன்றுவது: மலைக் கள்ளன்; அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.

  • ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிகாமணி

  • காதலிக்க நேரமில்லை

  • நூற்றுக்கு நூறு

  • ஔவையார்

  • திரும்பிப் பார், வாழ்க்கை, மணாளனே மங்கை பாக்கியம், பராசக்தி எல்லாம் நினைவுக்கு வந்தாலும், க்ளிசரினும் கம்பலையும் நினைவுக்கு வந்து veto செய்கிறது.


ஏறாத மலைதனிலே

ஜோரான கௌதாரி ரெண்டு

தாராளமாக இங்கே வந்து

ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா

கல்லான உங்கள் மனம்

கரைந்திட ஏங்கையிலே

கண்கணட காளியம்மா

கருணை செய்வது எக்காலம்

போடு

தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே

தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே

ஆனந்தக் கோனாரே

அறிவு கெட்டுத்தான் போனாரே

செக்கச்செவேலேன செம்மறியாடுகள்

சிங்காரமாக நடை நடந்து

வக்கணையாகவே பேசிக்கொண்டு

பலிவாங்கும் பூசாரியை நம்புதம்மா

போடு

தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே

தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே

ஆனந்தக் கோனாரே

அறிவு கெட்டுத்தான் போனாரே

சோலைவனங்கள் தழைச்சிருக்க

அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க

பாலைவனத்தையே நம்பிவந்து

பலிவாங்கும் பூசாரியை நம்புதடா

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.