கடலுடல் – மேகவண்ணன்
அலைகள்
ஒருபோதும் ஓயாத அலைகள்
அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகள்
பாய்மரம் செலுத்துகின்றன
கட்டுமரங்களில் புரள்கின்றன
வேறு வழியின்றி
விசைக்கலங்களின்
வழியகன்று நிற்கின்றன
வெளி வந்த இதழ்: புதிய விருட்சம் ஏப். 2001
கடலுடல் – மேகவண்ணன்
அலைகள்
ஒருபோதும் ஓயாத அலைகள்
அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகள்
பாய்மரம் செலுத்துகின்றன
கட்டுமரங்களில் புரள்கின்றன
வேறு வழியின்றி
விசைக்கலங்களின்
வழியகன்று நிற்கின்றன
வெளி வந்த இதழ்: புதிய விருட்சம் ஏப். 2001
Posted in Uncategorized
என்.டி.ராஜ்குமார் – ஒடக்கு
ஆடுகிற சாமியை இடுப்பினைப் பிடித்திழுத்து
என் பிள்ளைகளுக்கும் எனக்குமொரு
நல்ல கெதியைச் சொல்லிப்போ
இல்லேன்னா ஒனக்கு இனிமே
சோறு தண்ணிபூச ஒண்ணும் கிடையாது
உள்ள போட்டு கோவில் நடைய
இழுத்தடைச்சுப் போடுவேன் என்று
அதிகாரத்தோடு சொல்ல
என்ன நம்பு உனக்கு நானுண்டு
எனச்சொல்லி
திருநீர் இட்டுக் கொடுப்பான் சுடலை
எனது பாட்டிக்கு.
இப்படியாகத்தான் எங்கள் காட்டு தெய்வங்களோடு
சண்டையிட்டுக் கொள்வோம்
அன்யோன்யமாய்
வெளி வந்த இதழ்: கவிதாசரண் ஆக.-செப்., 2002
Posted in Uncategorized
பார்வை – பொன். குமார்
கதவு எடுத்து வைக்க
சுமங்கலி
கல் எடுத்துக் கொடுக்க
கைம்பெண்
கல்லிலேயே நிற்கிறது
கட்டடம்
என்றைக்கும்
அதிர்வூட்டுகிற குழப்பமாக
இதுதான் இருக்கிறது –
ஒவ்வொருவரிடமும்
பிறிதொருவர் பற்றிய
வேறுவிதமான கருத்துகள்
பதுங்கிக் கிடக்கின்றன.
Posted in Uncategorized