Tag Archives: புற்றுநோய்

PS1 ஏன் எடுத்தார்கள்? No Shave November

நோ ஷேவ் நவம்பர் மாதத்தை நினைவூட்டவே பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. – இது என்னுடைய ஆறாவது காரணம்.

படத்தில் வரும் நல்லவர்கள் – அதாவது சோழர்கள் எல்லோரும் தாடியும் மீசையும் வைத்திருக்கிறார்கள். கக்கத்தை மட்டும் சுத்தமாக மழித்திருக்கிறார்கள்
படத்தில் வரும் வீரபாண்டியன் மட்டும் – மொழுமொழு கன்னத்தோடு கழுத்தை இழக்கிறார்.

சின்ன வயது ஆதித்த கரிகாலனுக்கு கூட அரும்பு தாடி கொடுத்திருக்கிறார்களோ என சந்தேகம் இப்பொழுது வருகிறது.

படம் மயிருக்குக் கூட பிரயோசனம் இல்ல – என்று எவராலும் சொல்ல முடியாது. படம் முழுக்க கொண்டைகளும் குடுமிகளும் கோடாலி முடிச்சுகளும் அவிழ்ந்த நீண்ட சௌரி முடி கூந்தல்களும் உதிரவிட்டு, சடாதரனை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

மூலக் காரணத்தை ஆராய்வோம்: ஏன் இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கேசத்தின் மீது பாசம்?

  1. புற்றுநோய் ஆரய்ச்சிக்கான நிதி திரட்டுவது
  2. ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது – ஆடவர் இறப்பதற்கான முக்கிய காரணத்தைத் துவக்கத்திலேயே பரிசோதனை மூலம் கண்டுபிடிப்பது
  3. விரைப் புற்றுக்கட்டி பற்றிய அக்கறையை ஆண்களிடம் பரவலாக்குவது
  4. இது குளிர்காலத்தின் துவக்கம் – வீட்டிலேயே சோம்பித் திரியாமல் உடற்பயிற்சி செய்வது

இந்த மாதிரி அனைத்து சோழகுல இளவரசர்களையும் சிற்றரசர்களையும் தாத்தாக்களையும் முகமுடி கொண்டு ரொப்பி, மயிர்கழியா நவம்பர் மாதத்தில், அமேசான் ப்ரைம் கொண்டு வெளியிடுவது – 6த் ரீஸன்.

வாயைக் கொப்புளித்தால் புற்றுநோய் வரும்

iblisterine-ads

செய்தி: Mouthwash 'can cause oral cancer' – Telegraph: “Some mouthwashes can contribute to oral cancer and should only be available on prescription, researchers have claimed.”

  • சுவாசத்தைப் புத்துணர்ச்சியாக்க லிஸ்டெரின் போன்ற மவுத் வாஷ் உபயோகித்தால் வாயில் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறு ஒன்பது தடவையாக அதிகரிக்கிறது.
  • பல மதுபானங்களில் இருக்கும் போதையை விட மவுத்வாஷ்ஷில் அதிக சாராயம் உள்ளது. – 26%
  • மதுவை அதிக நேரம் வாயில் வைத்திருப்பதில்லை. உடனே குடித்து விடுவோம். ஆனால், வாயை துப்புரவு செய்யும் திரவத்தை பல நிமிடங்கள் வாயிலேயே வைத்திருப்பதால், கேன்சருக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

mouthwash-dangers-listerine-alcohol-liquor-cancer