Tag Archives: புதுசு

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

நகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை

பாஸ்டன் நகரம் பக்கமாக இருக்கும் கிராமப்புறத்தில் வசிக்க வந்தேன். அது மெதுவாக நகர்ப்புறமாக மாறுவதைப் பார்க்கிறேன். அந்த மாற்றத்தை “Coming Soon” என்று ஸ்டீவன் மில்லவுஸர் (Steven Millhauser) சிறுகதையாக படம் பிடித்திருக்கிறார். நியு யார்க்கரில் வெளியான புனைவு. இங்கே, அந்தக் கதைக்கான புகைப்படம் உருவான கதை.

தீஸியஸின் கப்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல் கதாநாயகனின் உலகமும் மீளுருவாக்கமாகவே நீள்கிறது. நேற்று வீடு இருந்த இடத்தில், இன்று அடுக்கு மாடி கட்டிடம். சில நாள் முன்பு காபி கடை. சில நாள் கழித்து தொடர் அங்காடி வளாகம். இன்னும் சில நாள் கழித்து நவநாகரிக விற்பனை மையம். மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் இதை சகஜமாகப் பார்க்கிறேன். தொண்ணூறுகளில் இருந்த கடைகள் இப்பொழுது இல்லை. அவற்றுக்கு பதிலாக அதே இடங்களில் வேறு விஷயங்கள் முளைத்திருக்கும்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் உரித்தானதும் அல்ல. சீனப் பாம்பும் இப்படி புதுப்புது தோல் உடுத்திக் கொண்டே இருக்கிறது. பெரிய தோட்டம் கொண்ட வீடு; வீட்டில் இருந்து இரண்டு தப்படி நடந்தால் முக்கு கடையில் செய்தித்தாள். அங்கிருந்து பொடிநடையாக சென்றால் நதிக்கரை. நகரத்திற்கு எதிர்ப்பதமாக அமைதியான வாழ்க்கை. நெரிசல் இல்லாத சாலை. மீன் வாசனை இருக்கும்; ஆனால், மூத்திர வாசனை கொண்ட பேருந்து பயணம் இருக்காது. இருபது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே இருப்பதை ரசிப்பதை விட படகில் சென்று பக்கவாட்டில் தூரமாகும் வாழ்க்கையின் அழகை நீரோடையாக பார்க்கச் சொல்லும் நிதானம் கொண்டது.

வெறுமனே விவரிப்புகள் மட்டும் கதை ஆகாது என்பதில் வெகு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே போல் பழைய கதைகளை மறுபடி தூசி தட்டுவதிலும் ஆர்வம் கிடையாது. இந்த இரண்டையும் இந்தக் கதை கட்டுடைக்கிறது. “விரைவில் வரப்போகிறது” பெரும்பாலும் தன்னுடைய கவனிப்புகளை மட்டுமே முன்வைக்கிறது. அதே சமயம் நல்ல சிறுகதை விட்டுப் போகும் தாக்கங்களையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் ஆர்வம் உள்ளடக்கிய நடையும் வைத்திருக்கிறது. பள்ளிக்காலத்தில் படித்த ரிப் வான் விங்கிள் நினைவுக்கு வந்தாலும், இவர் நவீன உலகின் கொசு அசுரன்.

சமீபத்திய புது பத்திரிகைகள்: காத்திருக்கும் நேரம்

விமான நிலையத்தில் காத்திருப்பது வேலையத்த வேலை. ஆனால், காத்திருக்காமல் இருக்க முடிவதில்லை.

பிரியமானவர் வருகைக்காக சில சமயம். நாம் விரைவாக சென்றுவிட்டால், மனதுக்கு இனியவரின் விமானமும் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையில் சென்று பார்க்கிறேன்.

வீட்டில் இருப்பவர்களை துரத்துவதற்காக சில சமயம், சீக்கிரமே கிளம்பி விமான நிலையம் சென்று விடுகிறோம். இன்னும் கொஞ்ச நேரம்தான்… பொறுத்துக் கொள் என்று மனதை சமானப்படுத்தி, சண்டை சச்சரவு தவிர்க்க இந்த அவசரம் பயன்படுகிறது.

நடுத்தர வர்க்கம் எப்பொழுதுமே பேருந்து நிலையத்திற்கோ இரயில் பயணங்களுக்கோ முந்தின நாளே போய் காத்திருக்கும் வழக்கம் உடையது. அதன் எச்சங்களும், விமான நிலைய வருகைக்கு கால்கோள் இட்டு, வேரூன்றி நிற்கிறது. கொஞ்சம் முன்னாடி போனால், முந்தின ஃப்ளைட்டிலேயே இடம் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஒரு மாமாங்கம் முன்பு ஜார்ஜ் புஷ்ஷும் ஒசாமா பின் லாடனும் செய்த கைங்கர்யத்தால் பதினைந்து நிமிடம் முன்னாடி போய் வானூர்தியில் உட்கார்வது எல்லாம் மலையேறிப் போயாச்சு.

இந்த மாதிரி ஊருக்கு முன்னாடியே கிளம்பி காத்திருக்கும் நேரத்தில் புத்தகக் கடையை மேய்வது ரொம்பவே பிடித்த விஷயம். மேக்சிம், எஃப்,எச்.எம், ஸ்டஃப் எல்லாம் வா…வா… என்று கிளுகிளுப்பூட்டினாலும், புதிதாக என்ன பிடித்திருக்கிறது என்று மேய்ந்ததில் http://www.complex.com/ & http://www.wallpaper.com/ ஈர்த்தது.

வடிவமைப்பு, செய்நேர்த்தி, உள்ளடக்கம், சொந்த சரக்கு, வித்தியாசம் காட்டி அடையாளப்படுத்துதல் என்று பல விதங்களில் கவர்ந்தது.

What I like about Tamil Nadu?

நியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.

  1. முட்டை பரோட்டா சவுண்ட்
  2. வேஷ்டி டப்பாகட்டு
  3. தெருவோர இட்லி கடை
  4. காலை ஹோட்டலில் ஊதுபத்தி
  5. டீக்கட பென்ச்
  6. கோவில் திருவிழா
  7. காலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது
  8. யாரையும் அக்கானு கூப்பிடறது
  9. ஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது
  10. பழைய பேப்பர் கட
  11. மாட்டு வண்டி சவாரி
  12. தெருநாய்
  13. டிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து கொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்
  14. வாய்க்கால்
  15. மசாலா பால்
  16. வெத்தல
  17. சிதறு தேங்கா
  18. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது
  19. ஆட்டோ வாசகங்கள்
  20. முட்டை போண்டா
  21. வேப்பமரம்
  22. மரத்தடி பிள்ளையார் கோவில்
  23. நுங்கு
  24. தெருவோர கட்சிக் கூட்டம்
  25. மல்லிகப்பூ
  26. சந்தைக்கு காத்திருப்பது
  27. கனகாம்பரம்
  28. பதநீர்
  29. கொடுக்காபுளி
  30. தாவணி
  31. பாண்டிச்சேரி சரக்கு
  32. பட்டுப் பாவாட
  33. சாம்பார் வடை
  34. ரயில் சத்தம்
  35. இடியாப்பம்
  36. வயலோர வெளிக்கி
  37. புளியோதரை
  38. அய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு
  39. அடை அவியல்
  40. அக்ரஹாரத்து மடிசார் மாமி
  41. இட்லி தோசை
  42. கொசுறு வாங்குவது
  43. அல்வா
  44. வாழைமரம்
  45. கோலம்
  46. மார்கழி மாசப் பூசணிப்பூ
  47. அய்யர் கோவில் பொங்கல்
  48. மாரியம்மன் கூழ்
  49. பன்னீர்
  50. பட்டு புடைவை
  51. வாழையில சாப்பாடு
  52. பறை சாவு மேளம்
  53. ரஜினிகாந்த்
  54. சில்க் ஸ்மிதா
  55. ரேடியோ மிர்ச்சி சுசித்ரா
  56. சரோஜ் நாராயணசாமி
  57. அண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது
  58. குருவி ரொட்டி
  59. ஆரஞ்சு மிட்டாய்
  60. ராஜராஜ சோழன்
  61. கல் கோனான்
  62. இலந்தை வடை
  63. கோமணம்
  64. மாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது
  65. பல்லவன்
  66. தலைப்பாக்கட்டு
  67. சந்திரலேகா
  68. சுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு
  69. பலாப்பழம்
  70. மௌன ராகம்
  71. நவ்வாபழம்
  72. ‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்
  73. ப்ளாட்பாரத்தில் கிடைக்கும் உலகம்
  74. இலந்தப் பழம்
  75. சாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்
  76. ஏவியெம்
  77. சாயரட்சை நாதஸ்வரம் & தவில்
  78. நரசூஸ் காபி
  79. பொன்னியின் செல்வன்
  80. கொழுக்கட்டை
  81. குமுதம் நடுப்பக்கம்
  82. பிள்ளையார் எறும்பு
  83. ஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்
  84. ஏர் கலப்பை உழுதல்
  85. ம.பொ.சி. மீசை
  86. தட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்
  87. எம்.ஜி.ஆர் தொப்பி
  88. ரேஷன் க்யூ
  89. ஆதிமூலம்
  90. புன்னகை அரசி
  91. விவேகானந்தர் பாறை
  92. தமிழ்99
  93. பெயருக்கு முன் பட்டப்பெயர்
  94. சீரணி அரங்கம்
  95. சரோஜாதேவி
  96. டேப் ரிகார்டரில் இளையராஜா
  97. முன் ஜாக்கிரத்தை முத்தண்ணா
  98. ஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை
  99. புரியாத மொழியில் கோவில் கல்வெட்டு
  100. தந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை
  101. மொய் 101
  102. எல்லாரையும் தல போடுவது
  103. திருக்குறள்
  104. விஸ்வநாதன் ஆனந்த்
  105. கைலி
  106. கஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்
  107. உலகெலாம் பல்கிப் பெருகுவது
  108. ஸ்தோத்திரம் 108
உங்களுக்கு என்ன பிடிக்கும்?

மிஎதொ – என்ன தெரியுமா?

மிகவும் எளிய தொகுத்தளிப்பான் (really simple syndication)