பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.
உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.
பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.
தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.
பாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க?
1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா
2. ஜெயமோகன்
3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்
முந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்
4. இரா முருகன்
5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!
மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!
ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?
ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”
எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.
7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்
– பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்
என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.
8. படலை
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
9. பிபிசி:
1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு
11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்
12. தருமி
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5
Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”
Balu Mahendra – An Era: STAR Vijay
Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV
Balu Mahendra about Vaali -Vaali Birthday Special
New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra
Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13
Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra
இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.
நேரம்: மாலை 5.30 மணிக்கு.
நினைவை பகிர்பவர்கள்:
- கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
- ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
- எழுத்தாளர் சந்திரா
- எழுத்தாளர் தமயந்தி
- தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
- பத்திரிகையாளர் ஞாநி
- எழுத்தாளர் பவா செல்லத்துரை
- எழுத்தாளர் மாலன்
- ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
- எழுத்தாளர் சா. கந்தசாமி
- இயக்குனர் தாமிரா
- எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
- நடிகை ரோகினி
- எழுத்தாளர் பிரபஞ்சன்
- நடிகர் நாசர்
- எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
- ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
- பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
- ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
- ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
- எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
- இயக்குனர் வஸந்த்
- கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
- கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
- எடிட்டர் லெனின்
- ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
- இயக்குனர் வெற்றிமாறன்
- பாடலாசிரியர் ந. முத்துக்குமார்
ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்
Kamal Haasan’s tribute to Balu Mahendra | Business Line:
Balu Mahendra: A fascinating journey in filmdom – The Hindu
The Balu Mahendra I knew – The Hindu