தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும், சமகாலத்தின் மிக முக்கியமான, நிராகரிக்க இயலாத ஒரு போக்காக பில்டப் கொடுத்து நிறுவ முயல்வதைப் படிக்கநேர்வது கடுப்பேற்றும் விஷயம்.
பெரியார் குறித்து எழுதியிருந்த வாசகருக்கு எழுதியிருந்த பதிலிலும், பல காலம் முன்பு தங்கமணிக்கு கீதை குறித்து எழுதியிருந்த பதிலிலும், பதிலைத் தொடங்குமுன்பே, ‘இதுகுறித்து நாகரிகமாகக் கேள்வி எழுப்பியதற்கு நன்றி’ என்ற ஆழ்நீரோட்டத்துடன் தான் பதில் தொடங்கியிருக்கும். இதுதான் இந்த சுயபிரஸ்தாப இலக்கிய ஜல்லி லாரி, தனது பிரசங்கத்தைத் தொடங்குமுன்பே தன்னுடன் உரையாடுபவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்ராயம்.
எவ்வளவு நாசூக்கான உத்தி – சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவது அல்ல; விஷ்ணுபுரம் சுஜாதாவைத் தாண்டியது என்ற வெகு தெளிவான பிரக்ஞையோடு, சுஜாதாவின் முன் அதை வைத்து ‘உன்னால் இதற்கு முன்னுரையாவது எழுதமுடியுமா’ என்று தான் அவரைத் ‘தாண்டிவிட்டதை’ பஸ்மாசுரன் போல உணர்த்துவது!! பள்ளியில், நான் சென்ட்டம் நான் சென்ட்டம் என்று பரீட்சைக்குப் பரீட்சை பேப்பரை ஆட்டிக்கொண்டு திரிந்து, நீ எவ்வளவு நீ எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு திரியும் முதல்பெஞ்சுப் பயல்களின் சல்லித்தனம் போன்றதைத் தாண்டி இதில் வேறேதும் இல்லை.
அங்கதம் என்ற போர்வை போர்த்தினாலும், தன்னை மீறியவர்களுக்கு செக் வைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் உத்தி இது என்பதும், அங்கதத்தை விமர்சனத்துக்காக உபயோகிக்காமல் ஒரு escape/defense mechanismஆக உபயோகிக்கிறவர்கள் கையில் இது கிடைக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பதையும் இதுமாதிரிப் பத்திகளைப் படிக்கும்போது உணரமுடிவது பிறருக்கும் சாத்தியமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.
அவரது பத்திகளின் he said she said anecdotes பெரும்பாலானவை தினமலர் பாணியிலான ‘என்று மக்கள் நினைக்கிறார்கள்‘ பாணியிலானவை என்பதுதான் என்பது என் ஊகம்.
மெக்கென்னாஸ் கோல்டு காலத்து கிழடுகள் (மரியாதைக்குறைவாக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்) எவற்றிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டாலும் மெக்கென்னாஸ் கோல்டா, அந்த பருந்து(கழுகு) வர்ற சீன் தானே? என்பார்கள் – ரஜினின்னா யாரு, இந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில பிடிப்பானே, அவந்தானே என்று இங்கே சந்தித்த ஒரு போன தலைமுறை மலையாளி என்னிடம் கேட்டது போல.
இன்றைக்கு சுஜாதாவைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியாகச் சித்தரிப்பது போல, ஜி.கே.செஸ்டர்டனையும் அவரது ‘Father Brown’ கதைகளையும் போர்ஹேஸ் முன்னோடியாகக் கொண்டிருப்பதையும், புனைபெயரில் ராஜேஷ்குமார் ஸ்டைலில் துப்பறியும் கதைகளை எழுதியதையும் ஒரு ‘புரட்சி’ யாக போர்ஹேஸ் சுயதம்பட்டமடித்து எழுதி நான் படித்ததில்லை!!
- மண், வேர், வெங்காயம் என்று பேசுபவனை தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திருக்கவேண்டும் என்று மடக்கலாம்.
- குமுதம் விகடன் படித்து வருபவனை, சிறுபத்திரிகைகளில் நடப்பது குறித்த எந்த அறிவுமற்றவர்கள் என்று மடக்கலாம்,
- கொஸாக்குகளையும் பனியையும் கற்பனை செய்துகொண்டு, ராதுகா பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் மட்டுமே அபாக்கியமாகத் தனது தொடக்கத்தைக் கொண்டுவிட்டவர்களிடம், அவர்களுக்கு வெகுஜன இலக்கியம், pulp குறித்த புரிதல் எப்படி இல்லை என்று அவனையும் மடக்கி அடிக்கலாம்.
- பல்ப்பையும் படித்து சிறுபத்திரிகையையும் படித்தவனாக இருந்தால் ஆன்மீக, தத்துவ விசாரமும் விளக்கெண்ணெயும் இருக்க வேண்டும் என்று டபுள் இம்பாக்ட் கொடுக்கலாம்.
வெளிப்படையாகப் பேசாத பாண்டிகளால் ‘காலை’க் கழுவுது என்றுதான் சொல்ல முடியும்; குண்டியைக் கழுவுது என்று வெளிப்படையாகச் சொல்ல வெக்கப்படமாட்டானா பாண்டி?
தனது Order of thingsன் முன்னுரையில், இந்தப் புத்தகத்தைப் படிக்குமளவு முயற்சியெடுக்கும் வாசகன் இதை எப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நன்றியுடன் கூறுகிறேன் என்னும் எழுத்தாளர்கள் எங்கே, என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும் என்று எழுதும் இந்த சல்லிப்பயல்கள் எங்கே.
தமிழ் எழுத்தாளர்களின் முதன்முதலில் பாத்டப்பைப் பார்த்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான் என்றும் ‘பதிந்து’ வைத்துவிட்டால், பொருந்தவேண்டிய இடத்தில் தானாக அது பொருந்திக்கொள்ளும்.
பாண்டிப்பயல்களின் மொழியில் pubic hairக்கு வார்த்தை இல்லை என்று அங்கதப் பத்தி எழுதும் இவரின் ‘மலம்’ கதையில், கதை முழுக்க மலம் மலம் மலம் மலமோ மலம்தான். மருந்துக்குக்கூட ‘பீ’ கிடையாது, பொறவு என்ன? அவ்வளவு அக்கறை இருந்தால் pubic hairக்கு வார்த்தை கேட்ட மூத்த எழுத்தாளருக்கு நாஞ்சில் பாசையில் சிதிமயிர் என்று எடுத்துக் கொடுத்திருப்பதுதானே. ஓ, அதை நாங்களெல்லாம் செய்யமாட்டோம் திராவிட இயக்கத்தில் ஊறி வந்த பாண்டிக்குஞ்சுகள்தான் செய்யும், இல்லையா.
பாண்டிகள்தான் கேவலம். பாண்டிப் படங்களில் நடிக்கும் ஆர்யா என்ற பையனும் கூட ‘பாய்’ பையந்தான் (இன்சைடர் இன்பர்மேசன்). பாண்டிகள் பேரிலிருந்து ஜாதியைக் கழற்றி வைத்துவிட்டார்கள். புதிய தலைமுறை ஜாதியை முற்றிலும் கழற்றப் பார்க்கிறது, அடுத்த தலைமுறையில் மீதி இருப்பதும் காணாமல் போகவேண்டுமென்றுதான் நம்பிக்கை வைக்கவேண்டும்.
கேரளத்தை விட ஜனத்தொகை அதிகமுள்ள தமிழ்நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகத்தான் இருக்கும். கர்நாடகா ஆந்திராவில், ஏன் கேரளத்திலும் இருப்பது போல ஒன்றிரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்திலா மொத்த மாநிலத்தின் அரசியலும் இருக்கிறது? லிங்காயத்துகள், கம்மாக்கள் ரெட்டிகளைத் தாண்டி ஆந்திரா கர்நாடகாவில் யாருடைய ஆதிக்கமாவது (பிரதிநிதித்துவமாவது) இருக்கிறதா?
கல்லூரியில் படிக்கும்போது தெற்கிலிருந்து வரும் நாடார் பையன்களை பொதுவாக ‘பனையேறி கொட்டை தேஞ்சு போன’ கோஷ்டிகள் என்று இன்னொரு கும்பல் (குறிப்பாக, இதுவுமே ஒரு தென்தமிழகக் கும்பல்) கிண்டலடிக்கும் – ஆக, இதிலுள்ள ‘அங்கத’ உணர்வை ரசிப்போமா நாம்? தோழர்களுக்கு நடுவில் என்றால் சரி, அது தான் கிண்டலடிக்கும் மற்றவனுடனான சௌஜன்யத்தைப் பொறுத்தது. அதைத் தாண்டி, பொதுவில் எழுதும்போது ‘நாடார்கள் பனையேறிப் பனையேறி கொட்டை தேஞ்சுபோன கோஷ்டிகள்’ என்று மற்றொரு தமிழன் எழுதுவதற்கும் ‘கறுப்பர்களுக்கு சாமான் வளர்ந்துள்ள அளவு மூளை வளர்ந்திருக்கலாம்’ என்று ஒரு வெள்ளைக்காரன் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை – இரண்டும் அங்கதம் அல்ல – கேவலமான ரசனை.
– சன்னாசி