Tag Archives: தொலைக்காட்சி

அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்

எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.

ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.

சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.

–  சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்

–  அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்

–  தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்

அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.

அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.

தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.

பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.

அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!

அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.

அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.

காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.

நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.

அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.

போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,

பாபா

Rape and Sexual Assault on Women: Actions and Questions

1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?

2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?

3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?

4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?

5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?

6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?

7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?

8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?

9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?

Who is Who in Tamil TV Morning Shows

ஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.

கலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.

சன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.

பொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.

ஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.

பேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.

இதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.

’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்

தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.

சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.

என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.

அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.

செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?

காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…

”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.

ஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan

அசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும்http://www.jeyamohan.in/?p=36539

இனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…

முந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்

நானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

கிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா? அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே!’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.

ஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.

இது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

விளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்தில் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

விளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.

கடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.

என் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா? கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா? அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.

விளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த நிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.

கூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

நன்றி: ஜெ.

நாட்டு வளம்: பனை மரத்தின் பயன்: இலங்கையும் தமிழ்நாடும்

சாப்பாட்டு நிகழ்ச்சியைக் கூட புதிய தலைமுறை டிவியின் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ செய்முறை விளக்கமாக சுருக்காமல், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜயசாரதி போல் தகவல் அடுக்கும் சாதனமாக மாற்றி இருக்கிறது.

சமீபத்தில் கலிஃபோர்னியா சென்று வந்ததில் இருந்து பனை மரம் மீது பாசம் கலந்த ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சமீபத்தில் ’சோற்று சரித்திர’த்தத்தை பனை மர ஸ்பெஷலாக்கி இருந்தார்கள்.

பனம்பழ புட்டு, வீட்டுக்கு மேலே பனை ஓலை, பனங்கிழங்கு ஃப்ரை என்று இத்தனை உபயோகங்களை ஆதிகாலத்தி தமிழர் கண்டு பிடித்திருக்கிறாள்! மரமாக வளர வைத்து பயன்படுத்துகிறாள். குட்டிச் செடியாகவே எடுத்தும் உபயோகிக்கிறாள்.

இன்றைய சமூகம் இணையத்தைக் கொண்டு சின்ன சின்ன சேவைகளை அறிமுகம் செய்வது போல் அன்றைய நாகரிகம் இயற்கைப் பொருள்களை வைத்து புதுப் புது பயன்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

கூடவே நன்றாக தின்றும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

FeTNA: Finances, Venues: Whitepaper on Federation of Tamil Sangams of North America

பெட்னா அமைப்பு குறித்த தகவல்களின் தொகுப்பு.

எந்த இடங்களில் இதுவரை விழா நடத்தி இருக்கிறார்கள்?

தென்மேற்கு மாநிலம்

ஒரு தடவை – West-South

  • டாலஸ் (டெக்சஸ்): 2005 – Dallas, Texas

மத்திய கிழக்கு

ஆறு தடவை – Mid-Central

  1. 1991 – Hoffman Estates, Illinois
  2. 1993 – Kenosha, Wisconsin
  3. 1995 – Toledo, Ohio
  4. 1998 – Edwardsville, Illinois
  5. 2001 – Southfield, Michigan
  6. 2002 – University Park, Illinois

கிழக்கு கடற்கரை மாகாணங்கள்

பதினேழு முறை! – East Coast

  1. 1988 – Broomall, Pennsylvania
  2. 1989 – Washington, Washington DC
  3. 1990 – Staten Island, New York
  4. 1992 – College Park, Maryland
  5. 1994 – Somerset, New Jersey
  6. 1996 – Stamford, Connecticut
  7. 1997 – Pittsburgh, Pennsylvania
  8. 1999 – Atlantic City, New Jersey
  9. 2000 – Tampa, Florida
  10. 2003 – Trenton, New Jersey
  11. 2004 – Baltimore, Maryland
  12. 2006 – New York, New York
  13. 2007 – Raleigh, North Carolina
  14. 2008 – Orlando, Florida
  15. 2009 – Atlanta, Georgia
  16. 2010 – Waterbury, Connecticut
  17. 2011 – Charleston, South Carolina

சில அவதானிப்புகள்

டிசி தமிழ் மன்ற கூட்டமா?

  • வட அமெரிக்கா என்று சொன்னாலும், எந்த சந்திப்புமே மேற்கு கடற்கரை மாநிலங்களான கலிஃபோர்னியா, வாஷிங்டன், லாஸ் வேகாஸ் போன்ற இடங்களில் நடக்கவில்லை. இத்தனைக்கும், பே ஏரியாவிலும், சியாட்டிலிலும் எக்கச்சக்க தமிழர்கள்.
நிகழ்வுகள்
  • ஒவ்வொரு விழாவிலும் மணப்பொருத்தம், குழந்தைகளுக்கான மாயாஜால நிகழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கான முதலீடு கொடுக்கும் சந்திப்புகள் போன்றவை இடம் பிடிக்கும்.
நட்சத்திரங்கள்
  • ஃபெட்னாவின் வலையகத்தில் உள்ள தகவலின் படி இதுவரை 170 முக்கிய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்.
  • இதில் இரண்டு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 
  • ஒரு விழுக்காடு இலக்கியவாதிகள் என்றால் 25 சதவிகிதம் நடிக, நடிகையருக்கு சென்றிருக்கிறது.

போலி மார்க்கெடிங்
  • முதல் அறிவிப்பில் தவறாமல் முன்னணி சினிமா நாயக, நாயகிகள் இருப்பார்கள். இந்த வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பட்டியலில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா போன்றோர் வருவதாக சொல்லி இருந்தார்கள். தூண்டிலில் மீன் மாட்டிய பிறகு, அதாவது, நிறைய பேர் பதிவு செய்த பிறகு இவர்கள் பெயர் நீக்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால், நடிகர் தனுஷ் வரவில்லை. உடல் நலக் குறைவினால் இளைய தளபதி விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்று ஏமாற்றுவது சகஜம்.
பணம் எங்கே போகிறது?
  • வருடாவருடம் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய் வரவு.
  • இதில் ஏறக்குறைய பத்து லட்ச ரூபாய், விழாச்செலவு.
  • நிகர லாபம் – ஒரு கோடி
கணக்கு விவரம்
  • ஆண்டுதோறும் பத்து சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
  • பத்து பேருக்கு ஆகும் விமானச் செலவு – ஐந்து லட்சம்.
  • இவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் வீடுகளில் விருந்தாளிகளாக தங்குகின்றனர். எனவே சாப்பாடு செலவும், விடுதி அறைக்கான கட்டணங்களும் பெரும்பாலும் எதுவும் சுமையாக இருக்காது.
  • எனினும், கொஞ்சம் பரிசு பொருட்கள் வாங்கித் தருவது, சுற்றுலா கூட்டி செல்வது, உபசரிப்பது – ஆகியவை ஐந்து லட்சம் என வைத்துக் கொள்ளலாம்.
  • அதன் பின், விழா செலவு – இந்தத் தொகை வருமான வரியை FeTNA சமர்ப்பிக்கும்போது கணக்கு காட்டப் படுகிறது.

முன்னாள் சிறப்பு விருந்தினர்கள்

சினிமா

  1. நடிகர் ஜீவா
  2. நடிகர் சார்லி
  3. தொலைக்காட்சி ஈரோடு மகேஷ்
  4. நீயா நானா கோபிநாத்
  5. நடிகர் ஜெயஸ்ரீ
  6. நடிகர் கமல்ஹாசன்
  7. நடிகர் கணிகா
  8. நடிகர் கார்த்தி
  9. நடிகர் குஷ்பு
  10. நடிகர் லஷ்மி ராய்
  11. நடிகர் மதுமிதா
  12. நடிகர் மணிவண்ணன்
  13. நடிகர் மனோரமா
  14. நடிகர் எம் என் ராஜம்
  15. நடிகர் நாகேஷ்
  16. நடிகர் நந்தா
  17. நடிகர் பத்மினி
  18. நடிகர் நாசர்
  19. நடிகர் பசுபதி
  20. நடிகர் ப்ரியாமணி
  21. நடிகர் ராதிகா
  22. நடிகர் ரேவதி
  23. நடிகர் கோடைமழை வித்யா
  24. நடிகர் சந்தானம்
  25. நடிகர் சரத்குமார்
  26. நடிகர் சத்யராஜ்
  27. நடிகர் ஷாலினி
  28. நடிகர் அமலா பால்
  29. நடிகர் சிவாஜி கணேசன்
  30. நடிகர் சிவகுமார்
  31. நடிகர் சினேகா
  32. நடிகர் எஸ் வி சேகர்
  33. நடிகர் விக்ரம்
  34. நடிகர் விவேக்
  35. நடிகர் ஒய் ஜி மகேந்திரா

அரசியல்வாதி

  1. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
  2. சென்னை சங்கமம் ஜெக்த் காஸ்பர்
  3. பாமக அன்புமணி ராமதாஸ்
  4. திராவிடர் கழகம் கி வீரமணி
  5. திமுக கனிமொழி கருணாநிதி
  6. திமுக மு க ஸ்டாலின்
  7. மதிமுக வைகோ

கல்வி, கல்லூரி சந்தையாக்கம்

  1. மதுரை சேதுராமன்
  2. வேலூர் பொறியியல் கல்லூரி ஜி விஸ்வநாதன்

பேச்சாளர்

  1. மம்மது
  2. தமிழருவி மணியன்
  3. சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
  4. பட்டிமன்ற திண்டுக்கல் லியோனி
  5. பட்டிமன்ற சாலமன் பாப்பையா
  6. பர்வீன் சுல்தானா
  7. சுகி சிவம்
  8. பேச்சாளர் ஞானசம்பந்தம்
  9. இளங்குமரனார்
  10. பாண்டிச்சேரி கல்லூரி இளங்கோவன்

இலக்கியம்

  1. எழுத்தாளர் பாலகுமாரன்
  2. எழுத்தாளர் ஜெயகாந்தன்
  3. எஸ் ராமகிருஷ்ணன்
  4. பிரபஞ்சன்

கலை

  1. நடனம் நர்த்தகி

பின்னணிப் பாடல்

  1. பாடகர் அனிதா குப்புசாமி
  2. பாடகர் புஷ்பவனம் குப்புசாமி
  3. பாடகர் ஏ எம் ராஜா
  4. பாடகர் அனுராதா ஸ்ரீராம்
  5. பாடகர் சின்மயி
  6. பாடகர் சின்னப்பொண்ணு
  7. பாடகர் ஹரிணி
  8. பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா
  9. பாடகர் கிருஷ்
  10. பாடகர் மஹாநதி ஷோபனா
  11. பாடகர் நித்யஸ்ரீ மகாதேவன்
  12. பாடகர் பி சுசீலா
  13. பாடகர் சேலம் ஸ்ரீராம்
  14. பாடகர் ஷங்கர் மகாதேவன்
  15. பாடகர் சுசித்ரா
  16. பாடகர் எஸ் பி பி
  17. பாடகர் சுதா ரகுநாதன்
  18. பாடகர் டி எம் சௌந்தரராஜன்
  19. பாடகர் உன்னி கிருஷ்ணன்
  20. பாடகர் வாணி ஜெயராம்

சினிமா பின்னணி

  1. இசையமைப்பாளர் பரத்வாஜ்
  2. இசையமைப்பாளர் இளையராஜா

திரைப்பட நெறியாள்கை

  1. இயக்குநர் பாரதிராஜா
  2. இயக்குநர் சீமான்
  3. இயக்குநர் தங்கர் பச்சான்

பாடலாசிரியர்கள்

  1. கவிஞர் அறிவுமதி
  2. கவிஞர் ஈரோடு தமிழன்பன்
  3. கவிஞர் மு மேத்தா
  4. கவிஞர் முத்துக்குமார்
  5. கவிஞர் பா விஜய்
  6. கவிஞர் தாமரை
  7. கவிஞர் வைரமுத்து

கணக்கு: வரவும் செலவும்

பற்று வரவு பதிவேடு

Location & Venue Waterbury, Connecticut Atlanta, Georgia Orlando, Florida
2010 2009 2008
Contributions and Grants 128,112 130,270 31,670
Program Service Revenue 163,952 116,130 66,780
Investment Income (Interests) 356 5,000
Other Revenue 2,704 639
Totals $295,124 $251,400 $99,089
 
Grants and Similar Amounts Paid 13,400
Benefits Paid to
Salaries, other Compensation and Employee Benefits
Professional Fees and Other Payments to Independent Contractors 3,325 500
Occupancy, Rent, Utilities and Maintenance 20,542
Printing, Publishing, Postage and Shipping 376 763
Other Expenses 163,574 137,929
Total Expenses 249,985 201,217 139,192
Net profit/Loss  $ 45,139.00  $ 50,183.00  $ (40,103.00)

விழா மலர்கள்

2004

2007

2008

2009

2010

2011


தொடர்புள்ள பதிவுகள்:

1. கல்வெட்டு: பலூன் மாமா – கடுப்பைக் கிளப்பும் – FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்

2. Thekkikattan|தெகா: தமிழ் பெரும் விழா – தாமரை – வைரமுத்து: Fetna 2009 – II

3. நம்பள்கி: கேள்விகள்: Federation of Tamil Sangams of North America (FeTNA)

4. உங்க சாதி என்ன? – FETNA கேட்கிறது

5. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா?

6. Fetna Frauds

7. பெட்னா தளம் – 2012 – மேஜிக் ஷோ இன்ன பிற நிகழ்வுகள்

8. பழனி சுந்தரம், தமிழ் ஈழம், பண சுருட்டல் பிரச்சினைகள்:

அ) Beware of Asian Tribune newspaper and Mr. Prakash Swamy!! – Federation of Tamil Sangams of North America (FeTNA)

ஆ) Spilt in FeTNA

இ) Fetna President Pazhani Sundaram quits amidst chaos

சற்றென்று மாறுது வானிலை: காதலர் தின விஜய் டிவி குறும்படம்

Romantic short film “சற்றென்று மாறுது வானிலை”
Directed by Srinivas Kavenayam
Photographed by Santhosh Cinematographer

Performed by
Adith Arun
Syamantha Kiran &
Nandhini Subramanian.

Telecasted in Vijay tv for Valentine’s Day Special

பகுதி 1

பகுதி 2

How to make Badri Seshadri a Tamil Nadu politician?

பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?

1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.

2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.

4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.

6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.

7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.

8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.

9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.

 

தொலைக்காட்சி – சீரியத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: நியு யார்க் நகரத்துவம்