செம்புற்றுப் பழம் விளைவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதை அறுவடை செய்வதை கொண்டாட்டமாக செய்திருக்கிறார்கள். அறுவடை முடிந்தவுடன் பொங்கல் திருநாள் போல், கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஸ்டராபெரி திருநாள் வருகிறது.
கலிஃபோர்னியாவில் இருந்தும் ஃப்ளோரிடாவில் இருந்தும் இறக்குமதி ஆகிற காலகட்டத்தில் உள்ளூரில் சாஸ்திரத்திற்காக காக்காவிற்கு பிண்டம் வைப்பது போல் ஸ்டிராபெர்ரி திருநாளும் சந்தையாக மாறி இருக்கிறது. பொம்மைகளுக்கு ஆடை தைப்பவர்களும், ஊசிமணி/பாசிமணி விற்பவர்களும், இரும்புக்கொல்லர்களும் தங்கள் தொழிலை கலையாக காண்பிக்கும் விழா.
முன்னொரு காலத்தில் கேமிரா கிடையாது. புகைப்படம் எடுக்க முடியாது. ஓவியம் வரைந்து, தங்களை பிரதிபலிப்பது புகழ் பெற்ற பண வருவாய் மிக்க உத்தியோகமாக இருந்தது. இன்றோ ஓவியம் என்பது கலை வெளிப்பாடு. இயந்திரங்களை வைத்து நகைகளும், பாத்திரங்களும் தயாரிக்கும் காலத்தில் கொல்லர்களும் தச்சர்களும், தங்கள் புராதன பணியகத்தை கலைக்கூடமாக மாற்றி செய்முறை விளக்கம் அளித்து பொழுதுபோக்கு சாதனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை.
நான் கணினி நிரலியாளன். இன்னும் கொஞ்ச காலத்தில் வேர் அல்காரிதங்கள் கொண்டு மென்கலன்கள் தானே தயாரித்துக் கொள்ளும் நிலை வரும்போது, இப்படித்தான் if தீர்மானம் எழுத வேண்டும் என்று பூங்காவில் கடை விரித்து டெமோ தர வேண்டுமோ!?
ஜூலி கணபதியும் நந்தலாலாவும் தோஷமில்லை. தோற்றுவாய் தெரிந்துவிடும். ஆனால், உலக சினிமா குறித்து எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் கபர்தார். ‘துணையெழுத்து‘ விகடன் வாசகரும் வெளிறுவார்; ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ இலக்கிய ஆர்வலரும் பிளிறுவார்.
சோ ராமசாமி நாடகம் போட்டால் தோஷமில்லை. இலக்கியவிரும்பியும் மாற்றுப்பிரதி பிரகடனவாதியுமான பிரசன்னா ராமசுவாமி நாடகம் போட்டால்?
நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே இந்த மாதிரி நாடகத்தை விமர்சிக்கலாம். கிடைப்பதோ கலைஞர் டிவி ஒளிபரப்பு மட்டுமே… அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்.
1. டிவி பார்வையாளர்: அழகிக்கு ஃபோகஸ் கொடுப்பது சரியே. ஆனால், அவ்வப்போது பிக்சர் இன் பிக்சர் மாதிரி மொத்த திரையும் காமிங்கப்ப்பா…
2. பரத நாட்டிய சுப்புடு: முன்னாடி பத்மா சுப்ரமணியம் பாட்டி வருவார்; இப்பொழுது அவர் இடத்தில் அனிதா ரத்னம். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…
தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honor Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது. முஸ்லீம்களை இந்த நாடகம் இழிவு செய்கிறதா?
மூன்று பேர் நடுவில் வரும் ஒப்பாரியில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் மு.க. அழகிரி, ஸ்டாலின், கனிமொழியின் குறியீடா?
ஒலிப்பேழையில் சினிமாப் பாடல், பேக்ட்ராப் பவர்பாயின்ட் ஸ்லைடுகள், ‘மானாட மயிலாட’ குத்தாட்டம், ப்ரொஜஷன் ஸ்க்ரீனில் ஃப்ளிக்கர் ஒளிப்படம் – இவை எல்லாம் இருந்தால் நவீன நாடகம் தயார்?
அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு
ThatsTamil
ஐந்தாவது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம் வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.
ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.
இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.
இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.
கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.
முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.
பிரளயன் பேட்டியில் பிரசன்னா ராமஸ்வாமி
சமகால தமிழ் நாடகம் தொடர்பா ஒரு ஏழு நிமிடத்திற்கு ஒரு சின்ன டாக்குமெண்ட்டரி செய்யவேண்டியிருந்தது. அப்படி செய்யும்போது பிரசன்னா ராமசாமியை ஒரு பேட்டி எடுத்தேன். அதில் அவர் ரொம்ப சரியாகச் சொன்னார். தென்னிந்திய நாடகங்களோடு சமகால தமிழ் நாடகங்களை ஒப்பிடும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.
மலையாள-கர்நாடகா நாடக உலகில் பெரிய சாதனைப் படைப்புகள் பல வந்திருக்கு. காவலம் நாராயண பணிக்கர், சங்கரப்பிள்ளை, அப்புறம் பி.வி.கரந்த், கிரிஷ்கர்னாட், பிரசன்னா என்று பெரிய ஆளுமைகள் உண்டு. அடுத்த தலைமுறையினர் நாடகம் தயாரிக்கிறபோது இந்த பெரிய ஆளுமைகளின் பாதிப்பு அந்த பாணி முற்றிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.
ஆனா தமிழ் நாடகம் அப்படி இல்ல. பன்முகத் தன்மையோடு இருக்கு.
எங்கள் சென்னைக்கலைக்குழுவுக்கு ஒரு பாணி. கூத்துப்பட்டறைக்கு வேறு பாணி. பரிக்ஷா ஞாநிக்கு இன்னொன்று. அப்புறம் மங்கையோட மௌனக்குரல், மேஜிக் லேண்டர்ன், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலுசரவணன், முருகபூபதி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. எல்லோருக்கும் முன்னோடியான ராமானுஜம் சாருக்கு தனித்த பாணி. இந்த பன்முகத் தன்மைதான் தமிழ் நாடகத்தோட சிறப்பு.
இது கேரளாவிலும் இல்ல. கர்னாடகாவிலும் இல்ல. இது உண்மைதான். ஆனா இந்த ஆற்றல்களையெல்லாம் கொண்டு தமிழ் நாடகத்தின் உண்மையான சவால்களை நாம் சந்திக்க தவறுகிறோம்.
கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.
நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.
கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.
கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.
நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.
உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.
வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.
‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.
Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.
‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.
தமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.
The Japanese artist Toko Shinoda’s fluid, elegant work owed much to calligraphy, but she also complemented its anci… twitter.com/i/web/status/1…1 day ago
#சொல்வனம் என்றால் இசை; நாதம்; சங்கீதம். தியாகராஜா முதல் இளையராஜா வரை எல்லோரைக் குறித்தும் உருகியும் உணர்ந்தும் கறா… twitter.com/i/web/status/1…3 days ago
Bengal & Bangla Lit Special #2 - Interviews, Story Translations and Original Essays, Reviews; Please share your fee… twitter.com/i/web/status/1…4 days ago
Gray once asked Kobe how he would like to be remembered. He responded, “As a talented overachiever. Blessed with ta… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde