Tag Archives: செல்வாக்கு

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

அங்கே டி ஆர் பாலு; இங்கே டிமாஸி

அங்கே…

1. டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – ஜெயலலிதா
2. டி.ஆர்.பாலு – 100% guilt, 0% regret !
3. மன்மோகன் சிங் இது நியாயமா?:

தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இங்கே…
Just the ticket for brokers – The Boston Globe: “They hire an associate of DiMasi, watch scalping bill pass the House”

ரஜினி படம் வெளியான அன்று நூறு ரூபாய் நுழைவுச்சீட்டு, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். அந்த மாதிரி உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சிகள் ‘அரங்கு நிறை‘ந்து விட்டால், ப்ளாக்கில் விற்பார்கள். இந்த மாதிரி விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

‘மறு-விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்காது’ என்று அனேகமாக அறுதியிட்டு சொல்லும் நிலையில், சபாநாயகர் திடீரென்று தன் ஆதரவை மாற்றிக் கொண்டு, கள்ளச்சந்தை, கவுண்டரிலேயே சந்தைப்படுத்தல் என்று எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

250,000 டாலர் கிடைத்தால் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

இந்த மாதிரி வாக்களிப்பது சட்டப்படி குற்றம் கிடையாது. காசுக்காக சட்டமன்ற உறுப்பினர்களை ‘லாபி‘ செய்வதற்கு நடைமுறைகளை வழிவகுத்திருக்கிறார்கள்.

இப்போதைய பிரச்சினை: ஐயாயிரம் அமெரிக்க வெள்ளிக்கு மேல் லாபியிஸ்ட்களிடம் பெற்றுக் கொண்டால், வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அவ்வாறு செயல்படாமல் 250,000 ‘ஊக்கத்தொகை’ வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சர்ச்சை கிளப்பியிருக்கிறது.

அவனவன மகனுக்கு மந்திரி பதவி கேட்கும் காலத்தில், டியார் பாலு பெட்ரோல் பங்க் கேட்டது குற்றமா?