இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:
- மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
- ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
- ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
- மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
- நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
- ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
- சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
- அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
- சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 10, America, அமெரிக்கா, அரசியல், இந்தியா, ஒப்பீடு, சினிமா, செய்தி, ஜாதி, தசாப்தம், தொகுப்பு, நிகழ்வு, நிறம், பத்தாண்டு, மதிப்பீடு, Comparisons, Conflicts, Events, Extremism, India, Lists, News, PM, Presidents, Rajiv, Reservation, Sonia, Terrorism, Top, Topical, Unique, US, USA, views
ராகுல் காந்தி |
ரஜினிகாந்த் |
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு |
ஹீராவாக நடிக்கும் வயசு |
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் |
மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர் |
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு |
தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு |
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். |
சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப் |
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் |
அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார் |
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் |
ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர் |
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு |
துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு |
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் |
எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ் |
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் |
சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார் |
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது |
அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்? |
முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இளமை, ஒப்பீடு, காங்கிரஸ், காந்தி, சினிமா, சூப்பர் ஸ்டார், சைனா, தலைவர், தளபதி, திரைப்படம், மாணவர், ரஜினிகாந்த், ரஜ்னி, ரஷியா, ராகுல், ருசியா, Cinema, Congress, Faces, Famous, Films, Gandhi, Movies, Names, People, Persons, Politics, Ragul Ganthi, Rahul, Rajini, Rajini Ganth, Rajinikanth, Rajnikanth, Tamil Cinema
சாரு நிவேதிதா |
கமல்ஹாசன் |
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் |
தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார் |
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். |
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார். |
35 ஆண்டுகளாக எழுதுகிறார் |
50 ஆண்டுகளாக கலைச்சேவை |
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். |
சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது. |
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். |
ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா |
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். |
கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார். |
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது |
ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம் |
அமரந்தா, அவந்திகா |
வாணி, சரிகா |
நடிகர் |
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர் |
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். |
மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு. |
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, ஒப்பீடு, கமலஹாஸன், கமல், கமல்ஹாசன், சாரு, சாரு நிவேதிதா, சினிமா, திரைப்படம், Charu, Charu Nivedhitha, Cinema, Films, Kamal, Kamalahassan, Movies, Saru Nivethitha, Writers