ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.
பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.
நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்
ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.
இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.
ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.
நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.
எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.
1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா?! இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண
2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.
3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.
4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.
6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை? ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது? அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம்? அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்!
7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது!?
ஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ!
8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:
புதுமைப்பித்தன்,
கல்கி,
மௌனி,
ஜெயகாந்தன்,
கு.அழகிரிசாமி,
கு.ப.ரா,
சி.சு.செல்லப்பா,
ந.பிச்சமூர்த்தி
லா.ச.ரா,
சுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்
ராஜம் கிருஷ்ணன்,
சுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்
ஆதவன்,
கரிச்சான்குஞ்சு,
ஆர்.சூடாமணி,
ஜெயந்தன்,
ப.சிங்காரம்,
நகுலன்,
ஜி.நாகராஜன்,
லட்சுமி,
நா.பார்த்தசாரதி,
எம்.வி.வெங்கட்ராம்,
பாலகுமாரன்,
ஆர்.சண்முகசுந்தரம்,.
ர.சு.நல்லபெருமாள்,
கந்தர்வன்,
மேலாண்மை பொன்னுசாமி
அன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :
அ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது அம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது பாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை. நாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.
இந்திராபார்த்தசாரதி,
கி.ராஜநாராயணன்,
வண்ணதாசன்,
பிரபஞ்சன்,
வண்ணநிலவன்,
மாலன்
ஆ.மாதவன்,
நீலபத்மநாபன்,
எஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை!
சிவசங்கரி,
பொன்னீலன்,
எஸ்.சங்கரநாராயணன்,
சா.கந்தசாமி,
வாசந்தி,
கோணங்கி,
சோ .தர்மன்,
தோப்பில்முகமது மீரான்,
பூமணி,
சு.வேணுகோபால்,
பாமா,
திலீப்குமார்,
இந்துமதி,
அழகிய பெரியவன்,
சாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.
கோடை காலத்தில் பாஸ்டனின் அட்லாண்டிக் கடலில் நிறைய திமிங்கிலங்களைக் காணலாம். ஒரு மணி நேர அளவில் கப்பலில் கடலுக்குள் பயணித்தால், குட்டியுடன் விளையாடும் தாய், கூட்டமாக இரை பிடிக்கும் இளைஞர் கூட்டம் என விதவிதமாகப் பார்க்கலாம். அடைத்து வைக்கப்பட்ட மீன்காட்சியகத்தில் தரிசிக்காமல், பரந்த வெளியில் சுதந்திரமாக நீந்தும் திமிங்கிலங்களை இயற்கையான பரப்பில் காணலாம்.
பி.ஏ.கே. பசிஃபிக் சமுத்திரத்தில் விதவிதமான திமிங்கிலங்களைப் பார்த்த காட்சிகளை ஒளிப்படமாக இட்டிருந்தார். பாஸ்டனுக்கு வரும் பிரபலங்களுடன் இந்தப் பயணம் செல்வது குதூகலமான நிகழ்வு. ஆசுவாசமாக மூன்று மணி நேரம் உரையாடலாம். வெளியே விரிந்திருக்கும் எல்லையற்ற நீர்ப்பரப்பின் அமைதியோடும், வெயில் கொளுத்தினாலும் கடலின் குளுமையாலும், செல்பேசி இடைவேளிகளும் இடையூறுகள் தவிர்க்கப்பட்டதாலும் ரம்மியமான உல்லாசமான நேரம். சூரியவொளி புகாத ஆழ்க்கடலில், தன்னுடைய இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து அவற்றைப் பிடிக்க எதிரொலி உத்தியை திமிங்கலங்கள் பயன்படுத்தும். அதே போல், வந்திருக்கும் எழுத்தாளர்களும் தங்களுடைய எழுத்துக்கான ’குரலை’ எவ்வாரு அறிந்து கொண்டார்கள் என்று அறிந்துகொள்ள ஏற்ற தருணமாக இந்தப் பயணங்கள் அமையும்.
திமிங்கிலம் காணச்செல்லும் இந்தக் கடல் பயணத்தின் முதல் சிக்கல் – எல்லோரும் வாந்தி எடுப்பது. அலைகளைக் கிழித்துக் கொண்டு எதிர்க்காற்றில் கப்பல் செல்லும். அது எதுக்களிக்கும். கோபம் எழும்போது தேவையில்லாத கதைகளை எப்பொழுதோ வாசித்திருந்த இலக்கியப் புத்தகங்களில் இருந்து நினைவுகூர்வேன். அதற்கொப்ப, எப்பொழுதோ உட்கொண்ட உணவை வெளிக்கொணரும். கப்பல் எங்கும் ஓக்காள உமிழ்வுகள்.
இன்னொரு சிக்கல் திமிங்கிலத்தின் அபான வாயு. கருவாட்டு வாயால் மூச்சுவிட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத மீன்வாடை. திமிங்கிலத்தின் நாக்கில் ஐம்பது பேர் அமர்ந்து செல்லலாம். ஐம்பது பேரும் ஒரே சமயத்தில் குசு விட்டால் எப்படி இருக்கும்?
இப்பொழுது நேற்று நடந்த புதிய பிரச்சினை. வழக்கம் போல் அந்தப் பயணமும் கடலுக்குக் கிளம்பி இருக்கிறது. ஆனால், கார்னிவல் நிறுவனத்தின் கப்பல் பயணங்கள் போல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டுவிட்டது. சேராத இடம் சேர்ந்து கப்பலின் வடம் பாஸ்டனுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களுடன் மாட்டிக் கொண்டது. ”அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்; ஒரு மணி நேரத்தில் கரை திரும்பிடுவோம்” என்று சால்ஜாப்பு சொல்லியவர்கள், கடைசியாக இரவு முழுக்க முழுக்க கடலிலேயே தத்தளித்து இருக்கிறார்கள்.
1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?
2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?
3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?
4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?
5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?
6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?
7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?
8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?
9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?
விருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்?’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது?’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.
“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.
“எம்புட்டு வயசு?”
கேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…
“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது?”
விட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.
சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.
உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை
இயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா? ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி!’ ஆணையிடுகிறது மனது.
எனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.
இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:
யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ‘நான் ஆதவன்’மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.
சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில்இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.
பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.
பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.
ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பாஇதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில்ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.
இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
– 10:33 AM Nov 20th
அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.
‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’
‘ஏஞ்சாமி?’
‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’
‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.
‘த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’
‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’
‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’
‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’
கடந்த ஞாயிறன்று பராக் ஒபாமா ஒவ்வொரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது குழாய்களை சரி செய்யும் ஜோ (Joe Wurzelbacher) என்பவர் கேட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்கிறார்:
வருடத்திற்கு 250,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கும் என்னை மேலும் வரி போட்டு வாட்டுவது சரியாகுமா? என்பது அவருடைய கேள்வி.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde