Tag Archives: ஆண்

கிருஷ்ணாவும் அவனது லீலைகளும்

  1. ருக்மிணி, (சத்ய)பாமா, ராதா – மூன்று நாயகிகள். பாமா ஆக ஷ்ரதா ஸ்ரீநாத் (நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தவரேதான்).
  2. பாடல்கள் நன்றாக பொருந்துகின்றன. “அலைபாயுதே கண்ணா” கூட உண்டு.

3. தஞ்சாவூர் ஷங்கர் அய்யரின் தில்லானா; ஆனந்த பைரவி ராகம்; இசை: மகேஷ் இராகவன்; பாடுவோர்: வினோத் கிருஷ்ணன், சுஷ்மிதா ரவிக்குமார்; மிருதங்கம்: விவேக் ரமணன்: EDM-ised version of Thanjavur Shankar Iyer’s thillana in Ananda Bhairavi ragam, performed by Vinod Krishnan, Sushmitha Ravikumar with Vivek Ramanan on mridangam. Music arranged by Mahesh Raghvan

4. குறிஞ்சி ராகத்தில் அன்னமாச்சார்யா கிருதியான ‘முத்துகாரே யசோதா’

முத்தமிட்டாள் யசோதா… முற்றத்தில் நல்முத்தை எடுத்து, எத்தனையுன் மகிமைகள்?! தேவகியின் மகனே!!
சரணம்
எத்தனையோ ஆய்ச்சியர்கள், கையிலேந்திய மாணிக்கமே!துஷ்டனான கம்சனை, கொன்றதுன் கை வைரமோ? (2) ஒளிபொழியும் மூன்று லோகத்தில், மரகதமாய் படர்ந்தாய்! (2) எங்கள் உள்ளே வாசம் செய்யும் சின்ன கிருஷ்ணனே! (2)
   (முத்தம்…)
ரதிதேவி ருக்மிணியின்  அதரத்தில் நீ பவழமோ? கோவர்த்தனம் சுமந்த  கோமேதகம் நீயோ? (2) என்றும் சங்கு சக்கரத்தின் நடுவில் நிற்கும் வைடூர்யமே! (2) கதியென்றோம்  எமைக் காப்பாய்! கமலக் கண்ணா !! (2)
   (முத்தம்…)
காலிங்கனின் தலைமேலே நர்த்தனமாய் புஷ்பராகமே!என்றென்றும் ஸ்ரீவெங்கடாத்திரியில் நின்று ஆளும் நீலமே!! (2) பாற்கடலில் அற்புதங்களில், ரத்தினமாம் அற்புதமே! (2) பாலகனாய் திரிந்தாய் பத்மநாபனே !! (2)
    (முத்தம்…)

5. கிருஷ்ணருக்கு முன்பே காதல் இருந்தது என்பதற்கு ஆர்ச்சி சாட்சி. ஆர்ச்சி கதாபாத்திரத்திற்கு பெட்டி + வெரோனிகா என்று இரட்டை நாயகிகள். எண்பதுகளில் சுனௌதி என்றொரு ஹிந்தி தொடர் வந்தது. அதில் வரும் ரெட்டை வால் குருவி போன்ற பாத்திரப் படைப்பு இன்றும் கிளரவைக்கிறது.

6. ஆனால், வெறும் ஆண் பார்வை என்று சொல்ல முடியாத பாத்திரப் படைப்புகள் & வசனங்கள். “சத்யா” கதாபாத்திரம் துவக்கக் காட்சியில் நாயகனை விட்டு விலகும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். “நான் ஒன்றும் உன் உடைமை அல்ல! நீ எவருடன் பழகச் சொல்கிறாயோ, அவர்களுடன் மட்டும் நட்பு பாராட்ட…” என்று “கிருஷ்ணா”வை விட்டு விலகும் ஆளுமை கலந்த நாடியறியும் பயணத்தைத் துவக்குவதில் மகளிர் எண்ணத்தை உரைக்கிறார்.

7. அந்த மாதிரி ஓரிண்டு காட்சிகள் தவிர இது பாலு மகேந்திரா, மஹேஷ் பட், காக்டெயில் போன்ற கொண்டாட்ட படம் இது. “உனக்கு பீரியட்ஸ் டைம் போல – that time of the month” என்று காதலியின் கோபத்தை உதாசீனம் செய்வது முதல் “எல்லோர் மீதும் பிரியம் வருகிறது, இச்சை தோன்றுகிறது” என்பதை நியாயப்படுத்துவது வரை – அக்மார்க் ஆண் படம்.

8. யாராவது, எந்த மடையனாவது பழைய காதலியின் உடன் எடுத்த புகைப்படங்களை ஃபோனில் வைத்து இருப்பானா? அதெல்லாம் பலான படம் போல் பத்திரமாக எங்கேனும் கிளவுட் டிராப் பாக்ஸ் கணக்கில், ரகசியமாக எவருக்கும் தெரியாமல் சேமித்து வைக்க வேண்டாமா? இந்த மாதிரி டெக் தெரியாத கிராக்கி எல்லாம் எப்படி எட்டு பொண்டாட்டி வைத்து சமாளிப்பான்?

9. இதன் அடுத்த பாகத்தை சத்தியமாக எதிர்பார்க்கலாம். பகவத் புராணப்படியும் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு இந்திரநீலம் படியும் கண்ணன் ஜாம்பவதி, கலிந்தி, மித்ரவிந்தா, நக்நஜித்தி, பத்ரா, லஷ்மணா மற்றும் ருக்மிணி, சத்யாபாமா, என்னும் எட்டு நாயகியரை கொண்டவர்.

Rape and Sexual Assault on Women: Actions and Questions

1. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன என்று எப்படி சொல்ல முடிகிறது? அதற்கான தரவுகளோ, முறையான ஆய்வுகளோ இல்லாமல், பொத்தாம் பொதுவாக “ஜாஸ்தியாகி விட்டது” என எப்படி சொல்ல முடியும்?

2. அமெரிக்க கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாமல் போகிறது. குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும் என ஒபாமாவே அறிக்கை விடும் அளவு நிலைமை மோசமாக இருக்கிறது. மேற்குலகில் கற்பு பறிபோய் விட்டது என செய்தியாக்குவதைவிட குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும் என்பதே போராட்டத்தின் காரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எது முக்கியமாக இருக்கிறது? ஒவ்வொருவரும் நிம்மதியாக நடமாட வேண்டும் என்பதா (அல்லது) அநீதி இழைத்தவர்களை காலத்தே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதா?

3. பெண்கள் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் உத்தியோகங்கள் நிறைந்த காலத்தில் இருந்து 24 மணி நேரமும் உழைக்கும் காலகட்டத்திற்கு மாறியிருக்கிறோம். ஆண் மட்டும் தனியே திரும்பும்போது ஜேப்படி என்பது பெரிய பிரச்சினை. இன்று பெண்களும் பின்னிரவில் தனியே பயணிக்கும்போது வேறு பிரச்சினைகளும் எழுகின்றன. இதுவும் உலகளாவிய சிக்கலாகவே இருக்கிறது. இவற்றை எப்படி சமாளிக்கலாம்?

4. பெண்களின் பொய் புகார்கள்: ஈ எம் ஃபார்ஸ்டரின் “பாஸேஜ் டு இந்தியா”வில் இருந்து: “Pity, wrath, and heroism filled them, but the power of putting two and two together was annihilated.” பிரிந்த காதலனைப் பழிவாங்கவோ… உறவினரை உள்ளே தள்ளவோ வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உதவலாம். அந்த வகையில் எவ்வளவு நிரபராதிகள் மாட்டிக் கொண்டிருப்பார்கள்?

5. போர்னோ தளங்கள்: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கத்தி வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா முழுக்கவே கொலைகளும் வெட்டு குத்துகளும் நிறைந்திருக்கின்றன. பாலியல் படங்கள் சுலபமாகக் கிடைப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதை ஒத்துக் கொண்டால் வீட்டுக்கு வீடு அல்லது தெருவிற்கு தெரு இரத்தம் பெருக்கெடுத்து ஓடவேண்டுமோ?

6. மது அதிகம் கிடைப்பதால் மதுவருந்துபவர்கள் பெருகவில்லை. மதுவருந்தும் பணவசதியைப் பலரும் அடைந்திருப்பதால் மதுபானக் கடைகள் பெருகியிருக்கின்றன. அதே போல், கோழி அதிகம் கிடைப்பதால் கோழி சாப்பிடுபவர்கள் பெருகவில்லை. கோழி வாங்கும் சக்தியும் அடிக்கடி வாங்கும் பணவசதியையும் பலரும் பெற்றிருப்பதால், கோழிக்கடைகளும் கோழிப்பண்ணைகளும் பெருகியிருக்கின்றன. கோழி அதிகம் சாப்பிடுவதால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகிறது என நிறுவலாமா?

7. பள்ளிக்காலங்களில் என்னுடைய நண்பன் நிறைய கதை சொல்வான். “நான் அவளுடன் இந்த மாதிரி இருந்தேன்” என கற்பனையும் காமமும் கலந்து புதிது புதிதாக விவரிப்பான். ஆர்வமில்லாமல் கேட்பவர்களும் கூட அவனுடைய எந்த காலட்சேபத்தையும் தவறவிடாமல் கேட்பார்கள். இந்த மாதிரி பொய்யும் புரட்டும் சொல்பவர்கள், இந்தக் காலத்திலும் ஊடகங்களிலும் கல்லூரிகளிலும் இருப்பார்கள். இவர்களைப் போன்றோரை நம்மில் எவ்வளவு பேர் தட்டிக் கேட்டு தடுத்திருக்கிறோம்? இந்த மாதிரி இட்டுக் கட்டி கிசுகிசுப்போரைத் தடுக்க சட்டத்தை விட தனி மனித செயல்பாடு அவசியமா?

8. ஐ.நா. புள்ளிவிவரத்தின் படி மூன்றில் ஒரு பெண்ணாவது பாலியல் வன்முறைக்குள்ளாகி இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பெண்கள் உலகெங்கும்….. ஆணாக எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை. எப்பொழுது வீட்டிற்கு வரவேண்டும், எப்படி அடை அணிய வேண்டும், எங்கே செல்லக் கூடாது, எவ்வாறு நடக்கக்கூடாது என்று எந்த அறிவுரைகளும் வந்ததில்லை. ஆணாக இருப்பதால் மட்டுமே எனக்கு எந்த பய உணர்வும் வந்ததில்லை. ஆனால், பெண்ணால் இருப்பதால் மட்டுமே உருவாகும் அச்ச உணர்வு கலாச்சாரத்தை எப்படித் தவிர்க்கப் போகிறோம்? அவர்களை எப்பொழுது பொதுவெளியில் சுதந்திரமாகப் பேசவிட்டுக் கேட்கப் போகிறோம்?

9. பாலியல் வல்லுறவு கலாச்சாரமாக தனி மனிதன் என்ன செய்ய வேண்டும்? தனி உரையாடலில் அல்லது ஃபேஸ்புக்கில் கீழ்த்தரமான நகைச்சுவை வெளிப்பட்டால் எத்தனை பேர் அந்த நண்பரை கண்டிக்கிறோம்? எத்தனை தடவை கண்டும் காணாமலும் போய்விடுகிறோம்? சினிமாவில், தொலைக்காட்சியில் செய்யப்படும் வார்ப்புரு தோற்றங்களை எவ்வளவு பேர் கண்டிக்கிறோம்? எவ்வாறு அதையெல்லாம் மாற்றப் போகிறோம்?

STEM: Ratio of female workers in Software: India vs US

உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.

சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.

அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.

கற்பை விற்கும் கன்னி

lovevirginity-auction_nevada-sex-brothel-dylan-college-girls
செய்தி இங்கே: Girls Virginity | Auction Bid | Natalie Dylan | Geisha | Onenight Stand | Defloration

கேள்வி இங்கே: 5 questions for woman selling her virginity online | Technically Incorrect – CNET News: “Natalie, 22 years old, is selling her virginity to the highest bidder at Bunnyranch.com. The leading man’s offer currently stands at a breathtaking $3.8 million.

The Bunny Ranch, for those who haven’t been initiated, is an extremely famous brothel in Nevada”

  • வயது 22
  • கல்லூரிச் செல்விற்காக கன்னித்தன்மையை காணிக்கையாக தயார் என்று அறிவித்துள்ளார்.
  • பத்தாயிரம் ஆடவர் களத்தில் குதித்து ஏலம் கேட்டு வருகின்றனர்
  • மூணே முக்கால் மில்லியன் டாலருக்கு பன்னிரான்ச்.காம் (அக்கம்பக்கம் பார்த்து க்ளிக்கவும்; வயதுவந்தோருக்கான வலையகம்)இல் சூடாக பேரம் நடந்து வருகிறது
  • மணமுறிவு பெற விரும்புவோருக்கான ஆலோசனை வழங்குவதில் மேற்படிப்பு செய்யப் போகிறார்

நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் – ஆண்

தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.

தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து…

கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.

அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.

அசல்

பெண்களும் ஆண்களும் சேர்ந்து கல்வி பயிலவா? அது கலவிக்குத்தான் இட்டுச் செல்லும்?

இது நியு யார்க் டைம்ஸின் சமீபத்திய கட்டுரை:
Teaching Boys and Girls Separately – Single-Sex Public Education – Children and Youth – Schools – Gender – New York Times: “Why Gender Matters: What Parents and Teachers Need to Know About the Emerging Science of Sex Differences.”

நண்பரின் விரிவான பதிலில் சில பகுதிகள்:

மார்கரெட் அட்வுட் என்பாருடைய அரை-பெண்ணிய நாவல் ஒன்று 90களில் வந்தது என நினைவு. ‘The handmaid’s tale’ என்று தலைப்பு என நினைக்கிறேன். நல்ல நாவல். இதை ஒரு சுமார் படமாகக் கூட எடுத்தார்கள். (The Handmaid’s Tale (1990))

இந்த நாவலில் இப்படி ஒரு ஆண்- பெண் பிரித்து வாழ்ந்த சமுகம் கற்பனை செய்யப்படுகிறது. இதில் பெண்கள் கடும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, உடல்கூறு வழியே பகுக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் பெண் வெறுப்பை மையம் கொண்ட கதை இல்லை, ஆனால் பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட மத்தியகால யூரோப்பின் பெண்கள் நிலை, இன்றைய அரபிய இஸ்லாமிச சமுதாயப் பெண்களின் நிலை, தாலிபானிய, பின்லாடனிய இஸ்லாமியச் சமுகம் இங்கு கதையில் வரும் உலகம் போன்றது.

இன்னொரு விருப்பமான எழுத்தாளர்- உர்சுலா லெ க்வின் (Ursula le Guin) இவரும் இப்படி ஆண் பெண்கள் கடுமையாகப் பிரிக்கப்பட்ட ஒரு சமுகத்தை வைத்து அருமையான நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த நாவலில் பெண்ணியப் பிரச்சார நெடி குறைவு, உளவியல் நுட்பங்கள் அதிகம்.