Category Archives: கருத்து

அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை

நன்றி: விஜயபாரதம்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.

47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.

அமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.

இதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.

அப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.

மேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.

மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.

காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

செனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.

ஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.

அமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.

இரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.

அப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.

மக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.

ஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.

ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.

டெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.

ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.

இவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.

பொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.

இந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.

ஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.

ஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.

இரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.

மாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.

மாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.

மாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்
டெலிவிஷனில் கண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.

சார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.

தொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.

ஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்தானிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.

எட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.

பேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.

இந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்ந்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.

ரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.

அவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..

மாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.

மூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.

மெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.

இறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.

பரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.

ஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.

நம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தா.

ஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.

அமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.

உலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒன்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.

ஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..

நம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

தனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.

தனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.

அமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை

பொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ஒரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.

யார் தயவும் தேவையில்லை.

இத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.

நியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.

அதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.

பள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது?

  • மாநிலங்கள்,
  • மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,
  • பள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),
  • பெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,
  • மாவட்டம் தரும் நிதி,
  • மக்கள் கட்டும் வீடு,
  • கடைகள் போன்ற சொத்து வரி (property tax),
  • சில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை

முக்கியமான வருமான தளங்கள் ஆகும்.

கீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.

நீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.

School district tax and property tax get distributed as follows:

55.3% பள்ளி

1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க

1.1% நூலகம்

13.6 % மாவட்டம் (county,)(this helps to run county level charter, academic schools and vocational schools)

28.6% Local purposes (sewage, water, maintenance , to remove snow, spread sand salt etc road etc)

பள்ளி நிதிதிட்டம் :: School Budget: (revenue from property tax(also includes school district tax, state grants, federal grants, PTO fund raisers and some time through bonds)

Personnel : all administrative, teachers’ salaries, benefits 60%

Books, music instruments, orchestra or band expense 10%

Gym – school team expenses (sport shirt etc) 5%

Food: Free food for underserved kids, subsidized food for students 15%

Free breakfast for poor kids

Latchkey program (free before and after care)

Teachers’ professional training, kids participation in interschool competition etc 5%

Free Transportation: If the kid lives in less than 2 miles, cannot use free transportation, but parents get $400 reimbursed per year for this purpose. 5%

Apart from public schools, there are charter schools and academic schools run in each county. They are school for academically talented kids who are sponsored by schools and get selected based on performance in competitive exam,

Vocational schools are also run from the tax that we pay, and they gear to students who want to be trained as baker, carpenter or plumber etc.

இது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டியும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.

இங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

பட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.

மாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.

எ.கா பள்ளியின் செலவறிக்கை: Comparative Spending Guide 2008

எ.கா: பள்ளியின் ரிப்போர்ட் கார்ட்: New Jersey Department of Education :: NEW JERSEY SCHOOL REPORT CARD

மாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

சில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.

மாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.

பெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.

இதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.

அதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்டுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.

இந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.

நியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

எடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.

உடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.

சில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.

அமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்

motor-car-sales-detroit-big-three-gm-chrysler-fordகாலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.

இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?

ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.

நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.

இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?

அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.

இந்த மாதிரி வேலைநீக்கம் செய்யப்பட்ட பாட்டாளிகளை கவனிப்பதற்கு இரண்டு பில்லியன் வரை செலவழிக்கும் நிறுவனங்கள், நிதியமைச்சரிடம் தங்களுக்கும் பிச்சை போடுமாறு கையேந்திருக்கின்றன.

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகருக்கு அருகே மூன்று மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

  • ஃபோர்ட்
  • ஜி.எம் – ஜெனரல் மோட்டார்ஸ்
  • க்ரைஸ்லர்

gm-ford-chrysler-michigan-detroit-cars-auto-brandsஇவர்கள் தவிர ஹோண்டா, நிஸான், டொயோட்டா, ஹூண்டாய், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ போன்ற மகிழுந்து தயாரிப்பாளர்களும் அலபாமா, கென்டக்கி, மிஸிஸிப்பி, ஒஹாயோ, டெனிஸீ, தெற்கு கரோலினா போன்ற மாநிலங்களில் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்: America’s Two Auto Industries – WSJ.com: “Government Aid to GM, Ford, Chrysler Could Preserve Old Way of Building and Selling Cars”

ஹோன்டா, டொயொடா போன்றவர்கள் கார் வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க கூடிய கட்டுமானங்களை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், முதல் மூவரோ இன்னும் பழைய நுட்பங்களைக் கடைபிடித்து, எரிபொருளையும் தாராளமாக குடிக்கும் கார்களை சந்தையில் விடுவதால் விற்பனை சரிவு, வாடிக்கையாளர் எண்ணத்திற்கேற்ப நெளிந்து செல்ல முடியாமை என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ளார்கள்.

gm-sales-decline-profits-losses-sahre-prices-bailoutகுடியரசு கட்சியும் ஜார்ஜ் புஷ்ஷும் முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.

ஒபாமாவும் மக்களாட்சி கட்சி தொழிற்சங்கத் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கடைநிலை பாட்டாளியின் கவனத்தைக் கோரி, பொதுமக்களின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும்.

இன்றைய நிலையில் வெள்ளை மாளிகை முதல் அனைத்து அரசு அதிகாரத்திலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியே பெரும்பானமை கொண்டிருக்கிறது.

இதை முன்பே யூகித்து ஒபாமாவிற்கு தேர்தல் நிதியளித்த Cerberus Capital போன்ற வணிகர்களும், காலங்காலமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தரும் யூனியன் தோழர்களும் இப்பொழுது ஜோடி சேர்ந்து ஜார்ஜ் புஷ்ஷிடம் உதவி கோரி இருக்கிறார்கள்.

என்ன மாதிரி கோரிக்கை? Democrats Seek Help for Carmakers – NYTimes.com

  • மேலே சொன்ன மாதிரி ஆள் குறைப்பு செய்தால், அவர்களுக்கு காலா காலத்திற்கும் பஞ்சப்படி அளிக்க அரசின் உதவி.
  • ஹோண்டா, டொயொட்டா மாதிரி தங்களுடைய ஆலைகளையும் நவீனமாக்க பொருளுதவி.
  • பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் மருத்துவ காப்பீட்டை அந்தந்த மாநிலமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நீக்கப்பட்டவர்களுக்கு அன்றாட உணவுக்குண்டான செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

brand-origin-cars-gm-ford-honda_autosales1ஆனால், அதிபர் புஷ்ஷோ, கொலம்பியா, தென் கொரியா, பனாமாவுடன் ஏற்கனவே ஒப்பந்தாமாகியுள்ள சுதந்திர வர்த்தகத்திற்கு ‘காங்கிரஸ்’ (ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ்) ஒப்புக்கொண்டால்தான் டெட்ராய்ட்காரர்களுக்கு பணப்பெட்டி திறக்க வேண்டும் என்கிறார்: Obama’s Lame Duck Opportunity – WSJ.com: “Let Bush take the free-trade heat.”

  • இந்த ஒப்பந்தம் சட்டமானால் கனரக எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறுவார்கள்.
  • 50,000த்திற்கு மேற்பட்டோருக்கும் வேலை கொடுக்கும் காட்டர்பில்லர், கனடா போன்ற நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிட முடியும்.
  • Corporate Average Fuel Economy (CAFE) போன்ற கதைக்குதவாத குழப்ப விதிமுறைகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, அதிக பெட்ரோல் உபயோகித்தால் அதிகமாக வரி கட்ட வேண்டும் போன்று எளிமையாக்க வேண்டும்.

ஹோண்டா/டொயொட்டாவிற்கு நேராத பிரச்சினைகள் எவ்வாறு டெட்ராய்ட் மூவருக்கு மட்டும் நிகழ்கிறது? Uncle Sam Goes Car Crazy – WSJ.com: “Your government gets into the auto business.”

  • உழைப்புக்கேற்ற ஊதியம் தராமல், எவ்வாறு இவ்வளவு அதிக சம்பளம் தரவேண்டிய நிலை வந்தது? 1930ல் இயற்றப்பட்ட வாக்னர் (Wagner) சட்டத்தைக் கேளுங்கள். அதுதான், வரம்புக்கு மீறிய வருமானங்களை வரவைத்தது.
  • ஒரு வேலைக்கு ஏன் இரட்டிப்பு ஊழியர்கள்? தொழிற்சங்க ஒப்பந்தங்களைப் பாருங்கள். நாகரிக எந்திரங்கள் வந்தாலும், ஆட்குறைப்பு செய்யமுடியாத நிலை.
  • ஒரே நிறுவனத்திலிருந்து வரும் ஒரே மாதிரி கார் மாடலுக்கு ஏன் இவ்வளவு பெயர்கள்? ஐம்பதாண்டுகள் பழமையான “Dealer day-in-court clause” சட்டம் மாறவேண்டும். சந்தைப்படுத்தலும் எளிமையாகும்
  • ஆசியாவின் டெட்ராய்ட்டான சென்னையில் சல்லிசான விலையில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாமே? பெரும்பாலான கார்களை உள்ளூர் தொழிற்சாலைகளில் தயாரிக்காவிட்டால் விற்கமுடியாது என்பது தொழிற்சங்கங்களைத் திருப்தி செய்ய 1970களில் சட்டமாக்கப்பட்டது.

auto-sales-drop-2007-2008-graphs-maps-analysisசரி; அப்படியானால் ஃபோர்ட், ஜி.எம். திவாலாக விடுவிடலாமா?

ஏன் திவாலாக வேண்டும்? Nationalizing Detroit – WSJ.com

  • அமெரிக்காவின் இரயில் நிறுவனங்களுக்கு இப்படித்தான் எழுபதுகளில் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாம் விரயம். எண்பதுகளில் திவால் ஆகும் நிலை ஏற்பட்ட பின், திறந்த மய பொருளாதாரப் போராட்டத்தின் இறுதியில்தான் விடிவுகாலம் பிறந்தது.
  • இப்பொழுது இடைக்கால நிதியுதவி செய்து கை கொடுத்தாலும், விடியலுக்கான பாதையில் செல்லும் எந்த அறிகுறியும் இவர்கள் காட்டவில்லை. மிக முக்கியமாக, உழைப்பில்லா ஊதியத்தை ஊக்குவிக்கும் போக்குகளை கைவிடப் போவதில்லை

திவாலானால் விளையும் பேரிழப்பு: News Analysis – G.M.’s Troubles Stir Question of Bankruptcy vs. a Bailout – NYTimes.com By MICHELINE MAYNARD: General Motors, with dire warnings, is seeking a bailout, but skeptics point to the benefits of bankruptcy, which can offer a new start.

  • எந்த நிறுவனத்தின் காரை நீங்கள் வாங்குவீர்கள்? நாளை காணாமல் போகும் நிறுவனமா? நிதிநிலை ஸ்திரமாக உள்ள ஹோன்டாவா? – இந்தப் பாதை ஜியெம், போர்டுக்கு மரண அடியாக அமையும்
  • 55 ஆலைகளில் வேலை பார்க்கும் 600,000 பேரின் ஓய்வூதியத்தையும் நடுவண் அரசு பொறுப்பேற்க வேண்டி வரும். அல்லது அறுபதுகளைத் தொடும் தொழிலாளிகள் அனைவரும் பென்சன் பணத்தை இழந்து சமூக சிக்கல்களைக் கொண்டு வரும்.
  • ஒரேயொரு டெட்ராய்ட் கார் கம்பெனி நொடிப்புநிலைக்கு (bankruptcy) செல்வதன் மூலம் $175 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செவழிக்க வேண்டி வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். அதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பணத்தை மூன்று நிறுவனங்களிலும் முதலீட்டாக்கி, லாபம் கண்டபின் கழன்று கொள்வது சமயோசிதம்.

என்ன செய்யலாம்? Detroit Auto Makers Need More Than a Bailout – WSJ.com

  • மோசமான முடிவுகளை எடுத்த மேலாளர் குழு மாற்றப்பட வேண்டும்.
  • அதிக சம்பளம் வாங்குபவர்களின் ஊதியம் மட்டுப்படுத்த வேண்டும்.
  • பங்குதாரர்களுக்கு நயாபைசா கொடுக்கக் கூடாது.
  • தொழிற்சங்கம் முதல் உதிரிபாகம் தருபவர் வரை உள்ள ஹைதர் அலி காலத்து பழைய ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தற்காலத்திற்கேற்ப பேச்சுவார்த்தைக்குப் பின் மாற்றியமைக்க வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தை கொன்டு தனியார் நிறுவனங்களுக்கு தீனி போட வேண்டுமென்றால், அதற்கேற்ற விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டும்.

அலசல், செய்தி, பின்னணி, கருத்து:

  1. Editorial: Wall Street Journal Goes Jenkins Jr. Crazy | The Truth About Cars
  2. How Not to Balance a Budget – WSJ.com: A Tax to Grind :: Personal-income growth suffers when states adopt a tax-and-spend approach to fiscal policy
  3. Obama’s Car Puzzle – WSJ.com: In 1968, the Penn Central merger (a proxy for GM-Chrysler) was touted as a fix for a sagging rail business. In two years, the company was in bankruptcy. When a judge couldn’t find new lenders, Washington absorbed them into government-owned Conrail, but the death spiral continued. Finally, Congress passed the deregulatory Staggers Act, which overnight gave the rail industry back its future. Conrail was triumphantly reprivatized in 1987.
  4. Deal Journal – WSJ.com : Why GM Says Bankruptcy Is an Impossibility: “John Stoll files this dispatch on the troubles at the biggest U.S. car maker.”
  5. Radical Change Is Only Hope for Detroit’s Big Three – WSJ.com: LETTERS | NOVEMBER 13, 2008
  6. Democrats Plot Detroit Rescue – WSJ.com
  7. Money for Nothing :: The Wall Street Journal: “U.S. Car Companies Pay Hundreds of Millions of Dollars in Wages to Idled Workers”
  8. If You Like Michigan’s Economy, You’ll Love Obama’s – WSJ.com: Michigan lost 83,000 auto manufacturing jobs during the past decade and a half, but more than 91,000 new auto manufacturing jobs sprung up in Alabama, Tennessee, Kentucky, Georgia, North Carolina, South Carolina, Virginia and Texas.
  9. Bailout Turns on Auto Makers' Viability – WSJ.com

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா

ஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.

தற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:

முன்னாள் செயலர் காலின் பவல்:

பவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

ஓப்ரா வின்ஃப்ரே

ஷெர்ரி ஷெபர்ட்

ஜெஸ்ஸி ஜாக்ஸன்

மேலும்: The Savvy Sista: Colin Powell, Condoleeza Rice and Others React to Obama’s Victory

பாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா?

India reels over Obama’s silence

Asia Times Online :: South Asia news, business and economy from India and Pakistan: By: M.K. Bhadrakumar

India’s leaders are miffed that United States president-elect Barack Obama didn’t give them a telephone call, as he did numerous heads of state around the world — including Pakistan’s.

    அலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:

    • ருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.
    • காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.
    • பில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.
    • சீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.
    • அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.
    • பெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.
    • அதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.
    • இந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —

      • அருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது
      • இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது
    • அமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.

    தனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.

    இது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.


    தொடர்புள்ள செய்திகள்:

    Obama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”

    அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

    கத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

    ஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.

    முன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


    என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்

    அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    'என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?' – வாஷிங்டனில் நல்ல தம்பி

    இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
    தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம்மைத்ரேயன்

    நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.

    மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.

    மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.

    நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

    இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.

    நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து

    பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.

    தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.

    வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.

    கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.

    அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.

    இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

    தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

    இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?

    சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.

    காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.

    பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂

    அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.

    ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.

    என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.

    பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.

    வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.

    வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.

    தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.

    ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.

    அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.

    வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

    எலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.

    எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.

    ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.

    கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.

    ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.

    படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.

    உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.

    இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.

    இவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.

    நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.

    காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.

    அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்

    ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

    முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

    3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

    லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் மக்கள் தேவையைக் கவனிப்பதில் ஹமாஸ் முதலிடம்.

    அராஃபத்தும் அவருடைய ஜால்ராக்களும் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்திக் கொண்டது மட்டும் மிச்சம் (இதில் மூன்றாம் உலக நாடுகளில் அராஃபத்துக்குக் கிடைத்த கதாநாயக அந்தஸ்து மிகவும் நகை முரணானது).

    இஸ்ரேலுக்கும் அராஃபத்தை அமெரிக்கா ஆதரிப்பது வசதியாக இருந்தது. விலைப் போகக் கூடியவர். ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பது இந்த வகையில் சாத்தியமாக இருந்தது.

    ஹமாஸ் தீவிரவாததிற்கு ஒன்றும் குறைந்ததில்லை. ஆனால் அவர்களை ஜனநாயகத்திற்குத் திருப்பாதது இன்றும் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் கொடுக்கும் விலை.

    ஹமாஸ் இலங்கை விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்.

    ஹெஸ்பொல்லா என்னைப் பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை. இன்று இரான், நாளை சிரியா என ஆடை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனாலும் இஸ்ரேலை லெபனானில் மண் கவ்வ வைத்ததில் இவர்கள் பங்கு அதிகம்.

    மேற்சொன்ன இரண்டும் அமெரிக்காவைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை. அதற்கு சரித்திரமே 1900-க்குப் பிறகு திருப்பி எழுதினால்தான் உண்டு. மாற்றம் கொண்டு வரவேண்டியவர்கள் மிதவாத மக்கள். சோகமான விஷயம் என்னவெனில் பொது மக்களும் அரசியல் நிலையாமையில் மிகுந்த கசப்பில் இருக்கிறார்கள்.

    மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரை மக்களாட்சி என்பது அங்கே எண்ணை கிடைக்கும் வரை வராது (எண்ணெய் தீர்ந்தவுடன் அங்கே ஆட்சி செய்ய ஒன்றும் இருக்காது). Pseudo மக்களாட்சி நடக்க வாய்ப்புண்டு. ஒமான் போன்ற நாடுகள் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரம் முழுக்க ராஜா கையில். ஆனாலும் அது ஒரு விதத்தில் நல்லதுதான். இதன் தொடர்ச்சி மேலும் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்.

    4. இஸ்ரேல்: யூதர்களின் தேர்தல் நிதி காணிக்கை; ஊடக ஆதிக்கம்; ஆளுமை நிறைந்த பதவிகள் — இவற்றை தாண்டி மஹ்மூத் அகமதிநிஜாதுடன் அமெரிக்க அதிபர் உரையாடுவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் விளைந்துவிடும்? புஷ், க்ளின்டன்கள் எவ்வாறு இந்த பிரச்சினை நாட்டை கையாண்டார்கள்?

    1979-ல் ஷா வெளியேறியதிலிருந்து அமெரிக்கா இரானை ஜென்ம விரோதியாகத்தான் பார்க்கிறது. இதில் இஸ்ரேலின் பங்கு தேவைப்படவில்லை. அகமதிநிஜாத் தன்னை ஒரு தைரியமான தலைவராகக் காட்டிக் கொள்ள தடாலடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

    • யூதப் படுகொலைகளை ஆராயும் மாநாடு,
    • இஸ்ரேலை ஐரோப்பாவிற்கு விரட்டுவது

    என கானல் நீர் கனவில் அரபு மக்களைத் திருப்தி படுத்தும் வரை இவரோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை.

    இவரின் ஒரு நேர்காணலை கொஞ்ச நாட்கள் முன் தொலைக் காட்சியில் காண நேர்ந்தது. அபத்தமான பதில்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என்று அரசியல் கோமாளியாகக் காட்சி அளித்தார்.

    ஒரு வேடிக்கை என்னவென்றால் இராக்-இரான் யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாக இரானுக்கு அனுப்பப்பட்டது. எல்லாம் சகஜம்.

    மற்ற நாடுகளை தன் வான் படையைக் கொண்டு மிரட்டும் அமெரிக்கா இதுவரை இரானுடன் மோதுவதில் பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

    புஷ், கிளிண்டன்களின் இரான் கொள்கை ரேகனின் அடியொற்றி எடுக்கப்பட்டவை. அதாவது சும்மா சலம்புவது, பின் இரானிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொள்வது.

    5. கல்வியை முன்னிறுத்தும் கத்தார், பஹ்ரைன் போன்ற மேற்கத்திய குடாநாடுகள்; நட்பு கொஞ்சமும் எண்ணெய் நிறையவும் கொண்ட சவூதி அரேபியா, குவைத் போன்றவர்கள்; முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வியாபாரத்தை கவனிக்கும் அமீரகம் – அடுத்த அமெரிக்கா இங்கே ஒளிந்திருக்கிறதா? அல்லது USSR பதுங்கி இருக்கிறதா? இரண்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஆனால் பன்மடங்கு பலம் வாய்ந்த புலி நித்திரை கலைக்குமா?

    கல்வியை முன்னிறுத்தினாலும் மக்களின் சமூக வாழ்க்கை முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனக்குத் தெரிந்தவரை, பெண்கள் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருக்கிறது. நகரங்கள் முன்னேறிய முகம் காட்டினாலும் சிறு கிராமங்களை இந்த வளர்ச்சிகள் அடைகின்றதா என்பதே சந்தேகம்.

    நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஏற்கெனவே OPEC மூலமாக இனந்திருக்கின்றன. ஆனால் ஒன்றியமாக இணைய அனவரையும் கவர்ந்த ஒரு தலைவர் வேண்டும் (நாசர் போல). ஆனால் இந்த குறு மன்னர்கள் அதை யோசிக்கவில்லை. தேவையும் இல்லை என நினக்கிறார்கள். எண்ணை, மதம் இவர்களை இணைத்தாலும் மத உட்பிரிவுகளை (ஷியா, சுன்னி மற்றும் வஹாபி) இவர்களால் வெல்ல முடியவில்லை (வெல்ல வேண்டுமா என்பது வேறு). அது நடக்கும் வரை ஒன்றினைந்த மாகாணங்களாக ஆக இயலாது.

    அமெரிக்கா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

    பொருளாதாரம்? நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னது போல் எண்ணை இல்லையெனில் பொருளாதாரம் இல்லை.

    படைபலம்? இல்லை. இயற்கை வளம்? கேள்விக் குறிதான்.

    அரசியல் பலம்? குரான் வழி ஆட்சி நடப்பதால் இவைகள் இணைய வாய்ப்பு உண்டு. ஆனால் அரசியல் முதிர்ச்சி அடைய மத வழி அரசியல் மட்டும் போதாது.

    பி.கு.: ஒரு கேள்வி தோன்றியது…ஏன் மேற்கத்திய ஊடகங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளை இன்னும் அலாவிதீன், அலிபாபா காலத்திலேயே பார்க்கின்றன என்று…பின் யோசித்ததில் அந்தக் கோணத்தில் படிக்க வேண்டியது நிறைய, இந்த வலைப் பக்கத்திற்கு பொருந்தாது மற்றும் அது சக நண்பர்களோடு விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

    ராஜேஷ் சந்திரா

    என் பார்வையில் ஒபாமா வென்றது எப்படி?

    ஒபாமாவின் வெற்றியின் பின்னணியில் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட பிரச்சாரக் குழுவின் கடும் உழைப்பு மறைந்துள்ளது. ஒபாமாவின் பிரச்சாரக் குழு ஒருங்கிணைக்கப்பட்ட விதம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்ததென்றால் அது ஒபாமாவின் அனுபவமின்மையையை வலுவற்ற கருத்தாக்கியது. தேசிய அளவில் தனது எதிர் போட்டியாளைர்கள் அளவுக்கு அறியப்பட்டிராத ஒரு சாதாரண செனெட்டர் உட்கட்சி தேர்தலில் வென்றதை பலரும் ஒபாமாவின் செயல்திறனுக்குச் சான்றாகக் கண்டனர்.

    துவக்கத்திலிருந்தே ஒபாமா எடுத்துக்கொண்ட பிரச்சாரக் கரு ‘மாற்றம்’. வீழ்ந்து கிடந்த ஜார்ஜ் புஷ்ஷின் Approval Ratingஐ தனக்கு சாதகமாக பயன்படுத்தியது ஒபாமாவின் அணி. ஒரே செய்தி. மாற்றம். ஒரே செய்தி. நம்பிக்கை. ஒரே செய்தி. நம்மால் முடியும். மீண்டும் மீண்டும் ஒபாமாவின் பிரச்சாரம் ஒபாமா என்றாலே மாற்றமும் நம்பிக்கையும் தரும் தலைவர் என்பதை நிறுவியது. ஒரு கட்டத்தில் ‘மெசியா’ என எதிரணியினரால் கேலி செய்யுமளவுக்கு இதன் உச்சம் இருந்தது.

    ஒபாமாவின் சிறப்பான வெற்றி உட்கட்சி தேர்தல் வெற்றிதான். வெள்ளையினத்தவர் பெரும்பான்மை இருக்கும் ஐயோவா மகாண உட்கட்சி தேர்தலில் அவர் வென்ற பின்னரே அவர் ஒரு முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். அந்த வெற்றி தந்த ஊக்கமும் நம்பிக்கையும் கறுப்பினத்தவரை தூண்டிவிட்டது. அதன் பின்னரே வரலாறு உருவாக்கப்பட்டது.

    மெக்கெயினின் தோல்விக்கும் அவரது பிரச்சாரம் மிகப் பெரிய காரணம். தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘மாவெரிக்’ என தன்னைக் காட்டிக்கொண்ட மெக்கெய்ன் முற்றிலும் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களையும், வலதுசாரிகளையும் மட்டுமே திருப்திப்படுத்தும் பிரச்சாரத்தை செய்தார். ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளால் ரிப்பப்ளிக்கன் கட்சி மிகவும் வலுவிழந்திருந்தது. அதன் அடிப்படை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதொருப்தி நிலவியது. அவர்களை மீட்டெடுக்கும் வேலை மெக்கெய்னுக்கு பெரிதாய் பட்டது. இதன் விளைவாக சாரா பேலின் துணை அதிபர் போட்டியாளரானார். ஒபாமாவுக்கு எதிரான அனுபவமின்மை குற்றச்சாட்டு வலுவிழந்தது. மட்டுமல்ல ஊடக நேர்காணல்களில் படு மோசமாக பதிலளித்து கேலிக்குரியவரானார் பேலின். மெக்கெய்னுக்கு சுமையாக அமைந்தார். அடிப்படை ரிப்பளிக்கன் கட்சிக்காரர்கலைத் தவிர்த்த பெண்கள் பேலினை தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளவில்லை.

    டெமெக்ராட்டிக் கட்சி முதன் முறையாக 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்தது. தங்களுக்கு அதிகம் ஆதரவு தரும் மகாணங்களிலும் மேலும் எந்தப்பக்கமும் சாயலாம் என இருக்கும் நடுநிலை மகாணங்களிலுமே இரு கட்சிகளும் போட்டியிடுவது வழக்கம். ஒபாமா 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்தார். விளைவாக தேசிய அளவிலான கருத்துக் கணிப்புக்களில் சாதகமான முடிவுகளைப் பெற முடிந்தது. இதற்கு தேவைப்பட்ட நிதியை அவரால் திரட்டவும் முடிந்தது. அமெரிக்கத் தேர்தல்களிலேயே அதிக நிதி செலவிடப்பட்ட தேர்தல் இது. அதிக செலவு செய்தவர் ஒபாமா.

    மெக்கெய்னின் பிரச்சாரம் ஒபாமாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை குறிவைத்தது. தன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காயன்றி ஒபாமா மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தகைய எதிர்மறை பிரச்சாரம் ரிப்பளிக்கன்கள் மத்தியில் செல்லுபடியானதை மறுக்க இயலாது. விளைவாக மெக்கெய்ன், பேலின் பிரச்சாரக் கூட்டங்களில் வந்தவர்கள் ஒபாமாவை தீவிரவாதி என்றும் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியது கட்சி சாரா நடுநிலையாளர்களை வெறுப்பேற்றியது.

    இந்தத் தேர்தலில் இளைஞர்களின் பங்கு சிறப்பானது. உட்கட்சி தேர்தல் முதலே ஒபாமாவின் பிரச்சாரம் இளைஞர்களை ஈடுபடுத்தியது. இணையம் முதற்கொண்ட இளைஞர்களின் களங்களில் ஒபாமாவின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. இறுதியில் இளைஞர்களை வாக்குச் சாவடிகளுக்கு இட்டுச் சென்றது. பல இளைஞர்களும் தங்கள் பெற்றோருக்கும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கும் ஒபாமாவை குறித்த உண்மைகளைச் சொல்லி விளங்கச் செய்தனர். மெக்கெய்னின் வயது அவருக்கு எதிரான பண்பாக அமைந்தது.

    ஆளுமை விஷயத்தில் மெக்கெய்ன் முதலிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு ரிப்பப்ளிக்கன் செனெட்டராக இரு கட்சிக்காரர்களுடனும் சுமூக உறவை வைத்துக் கொண்டவரும், கட்சிக்கு எதிரான முடிவுகளை துணிந்து எடுப்பவரும் ஊடகங்களால் விரும்பப்படுபவருமாயிருந்த மெக்கெய்ன் விவாதங்களின்போது எரிச்சலுடனும் கோபத்துடனும் நிதானமிழந்தும் காணப்பட்டது கவனத்துக்குள்ளானது. குறிப்பாக ஒபாமாவின் திடமான், உறுதியான ஆளுமைக்கு எதிரில் மெக்கெய்னின் ஆளுமை சறுக்கல்கள் பூதாகரமாய் தெரிந்தன.

    ஒபாமாவிற்கு பெரும்பாலும் வாக்களித்தவர்கள் பெண்களும் சிறுபான்மையினருமே. ஜனநாயகத்தில் ஒருங்கிணைந்த சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்பதை கறுப்பினத்தவர்களும், இங்குள்ள ஹிஸ்பானிக்குகளும் உணர்த்தியுள்ளனர்.

    ஒபாமா இனப்பின்னணியில் பிரச்சாரம் செய்யவில்லை. அப்படியே அவர் செய்திருந்தாலும் அதற்கு வலுவிருந்திருக்காது. அவர் அடிமைகளின் வழி வந்த ஆப்ரிக்க அமெரிக்கர் அல்லர். அவர் முழுக்க முழுக்க வெள்ளையினப் பின்னணியில் வளர்ந்த கறுப்பர். நிறத்தினனடிப்படையில் பிரிவினை என்கிறபோது நிச்சயம் அவருக்கும் பல கசப்பான இனப் பிரிவினை அனுபவங்கள் இருந்திருக்கும். ஆயினும் மற்ற பல கறுப்பினத் தலைவர்களைப்போல கசப்பான அடிமைத்தன வரலாற்றை கேட்டோ அனுபவித்தோ வளர்ந்தவரல்ல ஒபாமா. இந்த வித்தியாசம் மிக நுணுக்கமானதும் முக்கியமானதுமாகும். இதனாலேயே அவர் தன்னை அமெரிக்காவில் வாழும் ஒரு கறுப்பன் என்றில்லாமல் கறுப்பாகத் தெரியும் ஒரு அமெரிக்கனாக முன்நிறுத்த முடிந்தது. அவரது ஆளுமை அமெரிக்காவின் மதிப்பீடுகளில் தோய்ந்தது, வெறும் கறுப்பின ஆளுமையல்ல அது. அவரது கனவுகள் அமெரிக்காவுக்கானதாயிருந்தது கறுப்பினத்தவருக்கானதாயில்லை. அமெரிக்க மதிப்பீடுகளின் மையத்தை நோக்கி எல்லா இனத்தவரையும் அவரால் இழுக்க முடிந்தது இதனாலேயே.

    மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சார அணி, துவக்கத்திலிருந்தே சொல்லப்பட்ட நிலையான பிரச்சார செய்தி, இனம் தாண்டி அனைவரையும் உள்ளடக்கிய பிரச்சாரம், கூடவே ஒபாமாவின் கவர்ச்சிகரமான, நிகழ்காலத் தலைவருக்கு தேவையானதாய் கருதப்படுகிற ஆளுமை ஒபாமாவின் பலமாய் அமைந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளும், தவறுக்கும் மேல் தவறிழைத்த, தன் ஆதரவாளர்களை மட்டுமே திருப்தி செய்த பிரச்சாரமும் மெக்கெய்னின் பலவீனமாய் அமைந்தது.

    ஒபாமா ஏன் வெற்றி பெற்றார்? – கருத்துத் தொகுப்பு

    (தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)

    மிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்?

    மிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்?

    மணி மு. மணிவண்ணன்

    ஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.

    அவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.

    அவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.

    ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது என்று நான் மகிழ்கிறேன்.

    ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாம் எல்லா இந்தியர்களின் தலைவராக மட்டும் இதுவரை பார்த்ததில்லை.

    ஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்

    ஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்

    பெண் தலைவர்களும் வேறு ஆண் தலைவரின் தொடர்பினால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து வென்றிருக்கிறார்கள் – மாயாவதி உள்பட.

    ஒபாமா கருப்பினத் தலைவர் இல்லை. அவர் கருப்பினத் தலைவராய் மட்டும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் வெல்லும் நிலையை எட்டியிருக்க முடியாது.

    ரோனால்டு ரேகன் நடிகர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் வென்றதற்குக் காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவரது அரசியல் கொள்கைகள்தாம் அவரை ஆளுநராக்கின.

    பின்னர் 70 வயதில் அதிபர் தேர்தலுக்கு அவர் போட்டியிடும்போது அவர் நடிகராய் இருந்தார் என்பதே ஒரு தலைமுறைக்குத் தெரியாது.

    வரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு

    வரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு

    கென்னடி கத்தோலிக்கர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.

    ரேகன் நடிகர், முதியவர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.

    ஒபாமா கருப்பர் என்பதையும் மீறி வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார்.

    ஒபாமா வெறும் ஒரு முறை மட்டும் தேர்தலில் வெற்றி பெரும் அரசியல்வாதியில்லை.

    ஒரு தலைமுறைக்கே மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவர்.

    மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கனவை நிறைவாகும் வேளை வந்திருக்கிறது. அதற்கேற்ற தலைவர் வந்திருக்கிறார்.

    பாரதி கொண்டாடியிருப்பான்.

    “விடுதலை விடுதலை விடுதலை
    பறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை”

    தமிழருக்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலம் வரவில்லை.

    – மணி மு. மணிவண்ணன்
    சென்னை, இந்தியா.

    (அவரின் முந்தைய பதிவு: அரசியல் ஆழிப்பேரலை)


    ட்விட்டரில் கிடைத்த விடைகள்:

    rarunach

    Why:

    • Iraq war
    • New generation of voters.

    How:

    • His movement
    • eloquency
    • McCain’s erratic campaign.

    thendral

    • media
    • VP
    • JohnM’s projection
    • first time voters
    • asians
    • thanks to Bush!

    PriyaRaju

    • People don’t want 4 more years of Dubya style politics
    • Palin was the final spanner in the works.

    விளம்பர மூழ்கடிப்பு: பணம் பத்தும் செய்யும் – அதிபரும் ஆக்கும்?

    Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com: Democrats are spending far more heavily than Republicans on field operations, after years of ceding the advantage in organizing to the GOP voter-turnout machine.

    குழப்பமும் காரணம்

    விநோத வில்லன் வடிவ ஜோ - சராசரியா? செல்வந்தரா?: குழப்பமும் காரணம்

    Finance records show Democrats have hired five to 10 times more paid field staff in swing states than the Republicans.

    Democrats have set up 770 offices nationwide, including in some of the most Republican areas of traditionally “red” states — like one in Goshen, Ind., a manufacturing town with a population of about 30,000. It is the seat of Elkhart County, which voted for President George W. Bush in 2004 by more than 40 percentage points. By comparison, Republicans have about 370 offices nationwide.

    In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall.

    The senator’s presidential campaign along with the Democratic National Committee have put at least $112 million into state parties in recent months, a review of campaign-finance filings shows. They have poured $6 million into both North Carolina and Virginia and even sent $1.8 million into Montana — nearly two dollars for every resident of that state.

    Four years ago, the party’s get-out-the-vote effort was largely run by an independent group named America Coming Together, or ACT, which was financed with $164 million from rich liberals but legally prevented from coordinating with their candidate.

    ACT was also legally restricted when it came to mentioning candidates, and was fined $775,000 after allegedly attacking President Bush in its voter drives.

    The GOP spent an estimated $22 million on personnel from June 1 to Oct. 15, compared to $19 million over the same period in 2004.

    Democrats have increased their staff expenditures from $30 million to $56 million — and they employed an estimated 4,500 workers making more than $1,500 a month as of mid-October, the latest information available. Sen. McCain and the Republicans had about 1,100 at that point.

    The expansion was made possible by Sen. Obama’s decision to decline public financing for his campaign, freeing himself from its spending caps. Instead he has relied on the legions of supporters who have already contributed over $600 million.

    Sen. McCain is limited to spending the $84.1 million he accepted from the government after his September nomination. Sen. Obama is on track to spend more on television advertising than any candidate in history, likely spending more than $100 million on ads in October alone.


    செய்தித்தாள், தினசரி, பத்திரிகை, ஊடகங்களின் அமோக ஆதரவு

    Newspaper Endorsements – A Final Tally – Interactive Graphic – NYTimes.com: In their presidential endorsements, most editorial boards supported the same party in 2008 as they had in 2004. But there were some notable exceptions.


    வாக்கு மதிப்பு – ஒரு சிலரின் ஓட்டு பலரின் ஓட்டை விட சாலப் பெரிது

    அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I பதிவைப் பின் தொடர்ந்து:

    Op-Chart – How Much Is Your Vote Worth? – Op-Ed – NYTimes.com

    மைத்ரேயன்:

    இந்தக் கட்டுரை சுருக்கமாக ஒரு பிரச்சினையை விளக்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு தழுவிய தேர்தல். இப்படி ஒரு தேர்தலை இந்தியாவில் நடத்த முடியாது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நபராலும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த அளவில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி அவர்கள் மரியாதையைப் பெற்று நாடு பூரா அங்கீகாரம் தந்து அதன் வழியே நாடாளும் தகுதி பெற முடியாது என்று நினைக்கிறேன்.

    அதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடு சில்லு சில்லாக உடைந்து அங்கங்கே பிராந்திய சத்ரபதிகள் தாமே முடி மன்னராக ஆள்கின்றனர். மத்திய அரசு பெயரளவு ஒரு பெரும அரசாகச் செயல்படுகிறது.

    அமெரிக்க அதிபர் இன்னமும் பொதுமக்கள் நடுவே இருந்து அங்கீகாரம் பெறும் நபராகவே தெரிய வருகிறார்.

    ஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா? அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

    மைத்ரேயன்:

    Op-Chart – Op-Chart – How Much Is Your Vote Worth? – Interactive Feature – NYTimes.com: “This map shows each state re-sized in proportion to the relative influence of the individual voters who live there. The numbers indicate the total delegates to the Electoral College from each state, and how many eligible voters a single delegate from each state represents”

    These Voters Matter the Most :: Capital Journal – WSJ.com

    • Young and Hispanic voters.
    • Suburban Philadelphia voters.
    • New Hampshire voters.
    • Virginia voters.
    • North Carolinians.

    Every vote in Tuesday’s election is equal, of course, but some are more equal than others. That is to say, some votes have more strategic significance.

    அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

    * ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

    * இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

    * 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.

    தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

    * ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

    * காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

    * எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

    * சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

    * ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.

    மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

    * உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.

    விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

    * அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

    * நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

    பார்ப்போம்…!!!

    மூக்கு சுந்தர்