கோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்


டைட்டசுக்கு ஏழு வயது. அவனது எல்லைகள், கோர்மெங்காஸ்ட்டுக்குள் அடங்கும். அவன் நிழல்களில் உயிர்ப்பால் அருந்தினான்; தாய்ப்பால் போல் சடங்கு வலைகளும் அவனுக்கு புகட்டப்பட்டது: அவனது காதுகளுக்கு – எதிரொலி; அவன் கண்களுக்கு – கல்லினால் ஆன இடர்ப்பின்னல் தளம்: எனினும் அவனுடைய உடலுக்குள் பிறிதொன்று நுழைக்கப்பட்டது – அவனின் நிழலாகவுள்ள மரபுடைமை எச்சம் தவிர. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, அவன் ஒரு சிறு குழந்தை.

ஒரு சடங்கு, எப்போதும் வகுக்கப்பட்டதை விட மிகவும் கட்டாயமானது, கடுமையான பற்றுக்கோடுண்ட கும்மிருளை எதிர்த்துப் போராடுகிறது. இரத்த சடங்கு; குதித்து கொப்புளிக்கும் இரத்தத்தின் சடங்கு. உணர்வின் இந்த விரைவுகள் அவரது முன்னோர்களுக்கான பூர்வஜென்மக் கடனில்லை, ஆனால் கள்ளமில்லாத புரவலர்களுக்கு, கிரேதாயுக துவாபரயுக உலகின் ஆழமான குழந்தைப் பருவத்தினருக்காக…

பிரகாசமான இரத்தத்தின் பரிசு. ‘அழுகை’ என்று முணுமுணுக்கும்போது சிரிக்கும் இரத்தம். சீரே சட்டங்கள் வளைந்துகொடுக்கும் போது துக்கப்படுகிற இரத்தத்தின் ‘மகிழ்ச்சி!’ பெரிய நிழல்களில் சிறிய புரட்சி!

Titus the seventy-seventh. Heir to a crumbling summit: to a sea of nettles: to an empire of red rust: to rituals’ footprints ankle-deep in stone. Gormenghast.

இதன் குறியீட்டில் நான் ஏன் அக்கறை எடுக்கிறேன்? கோட்டையின் இதயம் ஒலிக்கிறதா இல்லையா என்று நான் கவலைப்படுவது எதற்காக? எப்படியிருந்தாலும் நான் தெளிவாக விரும்பவில்லை! அவர்கள் எப்போதும் சொன்னதைச் செய்தால் யார் வேண்டுமானாலும் ஆரோக்கியமாக முடியும். நான் வாழ விரும்புகிறேன்! பார்க்க முடியவில்லையா? ஓ, பார்க்க முடியவில்லையா? நான் நானாக இருக்க விரும்புகிறேன்; என்னை ஆளாக்க, அசல் நபராக்க மாறுகிறேன்; குறியீடாக முற்றுப்பெற மாட்டேன்.

அவர் தனது வலதுபுறத்தில் இருண்ட விளிம்பை விட பயந்திருந்தார், ஏனென்றால் தனது இருப்பிடத்தின் மீதிருந்த ஒரே பிடிப்பு அது மட்டும்தான்; ஆனால் இப்போது அவர் அதை தீய திட்டத்தின் ஒரு பகுதியாக உணர்ந்தார்.

அவர் கவனித்தபோது பயம் அவர் மீது வளர்ந்தது. அவர் ஒரு சிறுவனை விட ஒரு மானாக வளர்ந்து உருமாறிவிட்டார்; ஆனால் அவரது அனைத்து வேகத்திற்கும் அவர் பயணக் கலையில் புதியவராக இருந்தார் – பாசி-பாய்ச்சல் மூலம் – திடீரென்று, அவர் காற்றில் இருந்தபோது, அவரது கைகள் இருபுறமும் நீட்டின போது, அந்தரத்தில் சமநிலையை எட்டிய சமயம், அவர் ஒரு உயிரினத்தின் ஒரு நொடியின் மிகச்சிறந்த பகுதியைப் பார்த்தார்.

தன்னைப் போலவே, அது காற்றின் நடுவே இருந்தது, அதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. உருவில் பெரிதாக இருந்தாலும் டைட்டஸ் அடர்த்திக் குறைவாகக் கட்டைமக்கப்பட்டு இருந்தது. இந்த உயிரினம் நேர்த்தியாக மெல்லியதாக இருந்தது. அது ஒரு இறகு போல தங்கக் காற்று வழியாக மிதந்தது; மென்மையான உடலின் பக்கவாட்டில் மெல்லிய கைகள், தலை சற்று விலகி, ஒரு தலையணையில் இருப்பது போல் சிறிது சாய்ந்தது.

டைட்டஸ் இப்போது தான் தூங்கிக்கொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்: அவர் தன் கனவின் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தார்: அவரது பயமானது கொடுங்கனவு: அவர் இப்போது பார்த்தது இறந்த ஆவியுருத் தோற்றத்தைத் தவிர வேறில்லை; அது அவரை பேயாட்டமாக வேட்டையாடிய போதிலும், புகையாக மறையப்போகும் இரவை விரைவாகப் பின்தொடர்ந்து வரப்போகும் நம்பிக்கையற்ற அபத்தத்தை அவர் அறிந்திருந்தார்.

மேலும்/மூலம்: Gormenghast, the official website: Official Gormennghast website with extracts and the story behind the Titus books

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.