ஏதோவொரு காரணத்தால் “நாயகன்” படத்தை மீண்டும் பார்த்தேன். சில குறிப்புகள்
- பிசி ஸ்ரீராம்: விடி ஸ்டேஷனில் எங்கோ துவங்கும் கேமிரா அந்தச் சின்ன பையனில் போய் நிற்கும் துவக்கத்தில் இன்றும் பிரமிக்கிறேன்.
- தீம் மியுசிக்: படம் நெடுக குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஒரே பின்னணி இசை. அதனாலேயே எல்லாத் தப்பும் கண்ணை மறைக்கிறது
- கார்த்திகா: படத்தின் பலமே, பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான நடிகர் தேர்வு. அதுவும் இவர்
- நாசர்: எம்புட்டு ஒல்லியாக, இளமையாக இருக்கிறார்!
- அஞ்சலிக்கு முன்பே இத்தனை குழந்தைகளை வைத்து படம் எடுக்கிறார் மணி.
- நம்மாளு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கூட இருக்கிறாரே!
- விஜயனை உங்களுக்குத் தெரியும். ஆர்.ஜே. ரத்னாகரை இன்னொரு விஷயத்திற்காக பார்த்திருக்கிறேன். இவரைப் போன்ற அதிகாரிகளையும் மேலாளர்களையும் எப்படித்தான் ஒரே படத்தில் நடிக்க வைத்தாரோ!
- ஏ,ஆர்.எஸ்., ஜனகராஜ் என்று அதிகம் நடித்துவிடும் அபார நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர், கமலிடம் கோட்டை விட்டார்.
- படத்தின் வன்முறையை இப்போது பார்த்தால் கூட அதிர்கிறது.
- கள்ளக் கடத்தலையும் பாலியல் தொழிலையும் இவ்வளவு கவர்ச்சிகரமாகக் காட்ட முடியுமா?