தலை பத்து குறிப்புகள்:
- அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
- தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
- நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
- ர வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
- இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ் வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
- மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
- ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
- படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
- எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
- அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு | படம் | குறிப்புகள் |
1977 | 16 வயதினிலே | முதல் படம் |
1978 | கிழக்கே போகும் ரயில் | கிராமம் – காதல் – ராதிகா |
1978 | சிகப்பு ரோஜாக்கள் | குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!
நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு |
1979 | புதிய வார்ப்புகள் | பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர் |
1979 | நிறம் மாறாத பூக்கள் | மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி |
1980 | நிழல்கள் | வைரமுத்து உதயம்
வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு |
1980 | கல்லுக்குள் ஈரம் | இயக்குநர் இல்லை
என்றாலும், மீண்டும் ரசிக்கலாம் |
1981 | அலைகள் ஓய்வதில்லை | ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ…. |
1981 | டிக் டிக் டிக் | மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது |
1982 | காதல் ஓவியம் | பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா? |
1982 | வாலிபமே வா வா | போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ் |
1983 | மண் வாசனை | ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!! |
1984 | புதுமைப் பெண் | ஏவியெம் #MeToo |
1985 | ஒரு கைதியின் டைரி | சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை |
1985 | முதல் மரியாதை | இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள் |
1986 | கடலோரக் கவிதைகள் | கொடுமை |
1987 | வேதம் புதிது | நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே! |
1988 | கொடி பறக்குது | அமலா டைம்ஸ் |
1990 | என் உயிர் தோழன் | சரிவின் உச்சிக்காலம் |
1991 | புது நெல்லு புது நாத்து | கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா? |
1992 | நாடோடித் தென்றல் | இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா? |
1993 | கேப்டன் மகள் | எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள் |
1993 | கிழக்குச் சீமையிலே | மீட்சி |
1994 | கருத்தம்மா | பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம் |
1995 | பசும்பொன் | முடியல |
1996 | தமிழ்ச் செல்வன் | இதற்கு குஷ்பூவே தேவலாம். |
1996 | அந்திமந்தாரை | அவார்ட் வேணும் |
1999 | தாஜ் மஹால் | பையன் வேணும் |
2001 | கடல் பூக்கள் | பையனும் வேணும்; அவார்டும் வேணும். |
2003 | ஈர நிலம் | மகனுக்காக |
2004 | கண்களால் கைது செய் | ப்ரியா மணிக்காக |
2008 | பொம்மலாட்டம் | அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு |
2013 | அன்னக்கொடி | அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால் |
detailed analytics!!