வாழ்க்கைக் குறிப்பு
முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், தன்னுடைய சொத்துக் குவிப்பு போலவே தாடியையும் வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது தாடியை விட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடிக்க, தன் தம்பிக்கு வழி விட்டார். அந்த 44 ஆண்டு ஆட்சியில், மக்களுக்கு நல்லாட்சி தராவிட்டாலும், உலகின் தலைபத்து பணக்காரத் தலைவர்களில் இடம்பிடித்தார். அவரின் சொத்துக் கணக்கு: பிடல் காஸ்ட்ரொ – ஜனாதிபதி – க்யூபா – $900 மில்லியன் (6,300 கோடி ரூபாய்) செல்வம் சேர்த்திருக்கிறார்.
பழைய பதிவுகளில் இருந்து
1. Anna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும் | ஒன்பது ஒப்பீடுகள்
2. ஃபிடல் காஸ்ட்ரோவின் நரபலிகள் ::
ஜனவரி 1, 1959 முதல் மார்ச் 15, 2005 வரை காஸ்ட்ரோ அரசினால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்
படை வீரர்களினால் சாகடிக்கப்பட்டவர்கள் (Firing squad executions) | 5,640 |
சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டவர்கள் | 1,203 |
சிறைச்சாலை மரணங்கள் | 2,199 |
காணாமல் போக்கப்பட்டவர்கள் | 198 |
மொத்தம் | 9,240 |
“Balseros” (கடல் வழியாக தப்பிக்கும் பொழுது உயிரிழந்தவர்கள்) | 77,833 |
மொத்தம் | 87,073 |
சுதந்திரமாக பணத்தைக் கொள்ளையடித்து அனுபவிக்கும் எல்லோருக்கும் பிடல் சார்பாக செவ்வணக்கம்!