இவர்தாண்டா இயக்குநர்


cafe-society-woody-allen-kristen-stewart-jesse-eisenberg

சின்ன வயதில் பாக்யராஜை ரொம்பப் பிடிக்கும். சின்ன வீடு திரைப்படத்தில் தவறு செய்தாலும் தர்மசங்கடத்தில் தவிக்கும் கதாபாத்திரத்தை அரங்கேற்றுவார். முந்தானை முடிச்சு படத்தில் துரத்தி துரத்தி காதலிக்கும் இரண்டாம் மனைவியைக் காண்பித்து ஆண் வக்கிரத்திற்கு நன்றாகவேத் தீனி போட்டார். இன்று போய் நாளை வா போன்ற படங்களில் சாமர்த்தியமான பெண்களையும் அசட்டு ஜொள்ளர்களையும் செமையாக சிரிக்க வைத்தார்.

அமெரிக்கா வந்த பிறகு இரண்டு இயக்குனர்கள் அந்த மாதிரி என்னை நம்பிக்கையாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். முதலாமவர் கோயன் சகோதரர். இரண்டாமவர் இங்கே கவனிக்கப்போகும் வுடி ஆலன்.

ஒவ்வொரு படத்திலும் ஏமாற்றாமல் எதையோ ஒன்றை எனக்காக வைத்திருக்கிறார். வசனம் ஆகட்டும்; கதாபாத்திர சித்தரிப்பு ஆகட்டும்; சமூக எள்ளல் ஆகட்டும்; திரைப்படம் நடக்கும் நகரம் ஆகட்டும்… எல்லாமே ரம்மியம்.

என்னுடைய கனவுக்கன்னிகள் எக்கச்சக்கம். ஒரு பட்டியல் போட்டு பார்க்கலாம்…

  1. ஜெகன்மோஹினி ஜெயமாலினி
  2. அழகன் பானுப்ரியா
  3. மின்சாரக் கனவுகள் கஜோல் (டி டி எல் ஜே அசல் என்றாலும்…)
  4. Forget Paris டெப்ரா விங்கர்
  5. Pretty Woman ஜூலியா ராபர்ட்ஸ்
  6. When Harry Met Sally மெக் ரயன்
  7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தபு
  8. பிரேமம் சாய் பல்லவி
  9. நல்லவனுக்கு நல்லவன் ராதிகா

பத்தாவதாக க்ரிஸ்டன் ஸ்டூவார்ட் சேர்கிறார்.

இன்றைய தேதிய கிரிஸ்டன் மிக மிகப் பெரிய நட்சத்திரம். அதாவது தமிழ்நாட்டில் நயன் எவ்வளவு பெரிய நாயகியோ, அதை விட பத்து மடங்கு சூப்பர் ஸ்டார். அவரை அழைத்து, இந்த கதாபத்திரத்துக்குப் பொருந்துவாரா என்று மேக்கப் போட்டு, வசனம் பேசச் சொல்லி, அதைப் படம் பிடித்து, பார்த்த பிறகே வுடி ஆலன் கிரிஸ்டனை நாயகியாக்குகிறார்.

கிரிஸ்டனுக்கும் பேர் சொல்லும் படம் கிடைக்க வேண்டுமானால் டைரக்டர் சொல்லும்படி ஆடித்தான் ஆகவேண்டும்.

இந்தப் படம் என்னுடைய விருப்பமான நகரம் – நகரேஷு நியு யார்க்

படத்தைப் பார்த்தால் நாவல் போல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்தத் திரைப்படம் மிகவும் தேர்ந்த புதினம் போல் நெடுங்கதையாக விரிகிறது. மனதில் எங்கோ ரீங்கரீத்துக் கொண்டே இருக்கிறது.

படத்தில் மிகவும் யோசிக்க வைத்த வசனம்:

சாக்ரடீஸ் ஒரு தபா சொன்னார்: “ஆராயப்படாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தம் எதுவுமில்லை”.  ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படும் வாழ்விலும் எந்த பெரிய அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோணல!

keyart-single-cafe-society-vertical

படத்தில் யூதர்களைக் குறித்த கிண்டல்கள் உண்டு. பணக்கார வர்க்கத்தைக் குறித்த கேலிகள் உண்டு. எல்லாமே உன்னதமான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சிந்தித்து பிறகு வெடித்துச் சிரிக்க வைப்பவை.

மீண்டும் பாக்யராஜிற்கே வருவோம். ஏன் அவரை பிடித்து இருந்தது? ஆணாதிக்கம் இருக்கட்டும். அந்த அப்பாவி ஆண் இமேஜ் பிடித்திருந்தது. அவரின் ஏமாளித்தனம் ரசித்தது. ‘கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப்போகும்’ ஏமாளித்தனம் ருசித்தது.

இந்தப் படத்தின் தலைவனும் இதே மாதிரி கோமாளி. விட்டில் பூச்சியாய் விளக்கில் வீழ்க்கிறான்.

கொலையை நியாயப்படுத்துவது ஆகட்டும்; அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் போது அடங்கிப் போகும் பக்கத்து வீட்டு தத்துவவியலாளர் ஆகட்டும்; பதின்ம வயதுப் பெண்ணை ஆசைப்படும் கிழ போல்ட்டு ஆகட்டும்; கிடைக்காத உச்சாணிக்கொம்பை நோக்கி ஆசைப்படும் நாயகன் ஆகட்டும் – எல்லாவற்றையும் நம்பகமாகக் காண்பித்து நிராசையையும் உளவியலையும் காதலையும் கலந்து கட்டி அடிப்பதில் வுடி ஆலன், ‘விடு ரைட்டு’ என்று தப்பையும் சரியாக மனதில் பதிய வைக்கிறார்.

நான் பார்க்கும் பெண்கள் எல்லாம் சுவலட்சுமிகள் மாதிரி ஆலோசனை மழை பொழிவதிலும், தேவயானி மாதிரி சின்சியர் சிகாமணிகளாகவும் இருக்கையில், திரையில் மட்டும் கனவுக்கன்னியர் வந்து போவர். இங்கேதான் கிரிஸ்டன் ஸ்டூவர்ட் நாயகி கதாபத்திரம் பளிச்சிடுகிறது. கிரிஸ்டன் தெளிவானவர். வாழ்க்கையில் பணம் முக்கியம். ஹாலிவுட்டில் அந்தஸ்து முக்கியம். பருத்தி வீரன் ப்ரியாமணி போல் காதல் மட்டும் கருத்தில் கொள்ளாமல் நிதர்சனத்தை உணர்ந்து முடிவெடுக்கும் சாமர்த்தியவாதிகள்.

இளமைக் காதலை இப்படி காட்சியாக்கியவர்கள் வெகு வெகு சிலரே. தங்கர்பச்சானின் அழகி இப்படியொரு உச்சத்தைத் தொட்டு இருக்க வேண்டும். ஆனால், அலைக்கழித்து, சுமுகமாக க்ளைமாக்ஸ் சொதப்பலில் முடிந்து, சின்னாபின்னமாகி இருக்கும். முதல் மரியாதை காதல் கூட சௌஜன்யமாக இல்லாமல், கொலயெல்லாம் செய்யவைத்து பரிதாபப் பட வைக்கும்.

வுடி ஆலன் உண்மையைச் சொல்பவர். கனவுகள் என்றும் கனவுகளாக இருப்பதால்தான் மெய் மெய்யாகப் பொய்க்கிறது.

kristen_stewart_cafe_society

எண்பது வயசானாலும் ஏமாற்றாத என் டைரக்டர்டா!!

1. Movie Review: ‘Café Society’ and the Twilight of Woody Allen – The Atlantic

2. Review: ‘Café Society’ Isn’t Woody Allen’s Worst Movie – The New York Times

3. ‘Cafe Society’ Movie Review – Rolling Stone

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.