நானும் பேயோனும் அவர் வீட்டில் இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தோம். எப்போதாவது ஒரு மாறுதலுக்காக வாசிப்போம். இருவருக்கும் இலக்கியம் தெரியாது. ஆனால் சினிமாவும் தெரியாது. எனவே இலக்கிய நூல்களை வைத்து சினிமா போல் பார்த்தோம். காபிதான் குறிக்கோள்.
இலக்கிய புத்தகத்தின் மாடர்ன் ஆர்ட் அட்டையில் வலதுகையை ஊன்றி குரோசவாவை யோசித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது.
“அட, என்னாச்சு திடீர்னு?” லபக்குதாஸ் கவலை தெரிவித்தார்.
“என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சு.”
“உங்க பொண்டாட்டி பக்கத்து ரூம்லதான இருக்காங்க.”
“அதுனாலதான்.”