நேற்று இந்தியா டிஸ்கவரி செண்டர் (இந்திய புராதன புலப்பாட்டு மையம்) நடத்திய விழாவிற்கு சென்றிருந்தோம். அந்த நிகழ்வில் இருந்து சில காட்சிகள்:
ஒளிப்படத் தொகுப்பு
பேட்டி
இந்த மையம் ஆரம்பிப்பது குறித்த நேர்காணலை இங்கேக் கேட்கலாம்:
நிகழ்வுகள்
செய்திக் குறிப்பை இங்கே வாசிக்கலாம்: Launch Of “India Discovery Center” (IDC) In Greater Boston
அவர்களின் வலையகம் இங்கே இருக்கிறது: India Discovery Center – Home
ஏன் துவங்குகிறார்கள்?
- அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தில் யூதர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு கலாச்சார நடுவகங்கள் இருக்கின்றன. அது போல் இந்தியருக்கும் உருவாக்குகிறார்கள்.
- அடுத்த தலைமுறையினருக்கு நம்முடைய மூதாதையர் குறித்த விழிப்புணர்வையும் பண்டைய பெருமையையும் எடுத்துரைக்கப் போகிறார்கள்.
- இந்து மதத்தினர், இஸ்லாமியர், கிறித்துவர், என நம்பிக்கை சாராமல் அனைவரும் ஒன்றுகூட ஒரு இடம் தேவை.
எப்படி அமைக்கப் போகிறார்கள்?
- கோவில்களை நிறைய கட்டி இருக்கிறோம். ஆனால், இது மதம் அல்லாத, சமயம் சாராத முயற்சி.
- வட இந்தியர்கள் கூடும் இடம், தமிழர்கள் ஒன்று சேரும் சங்கம் என்றெல்லாம் இருக்கும். இது தெற்காசியருக்கான பொது மையம்.
- சிந்து சமவெளி நாகரிகம், சரித்திரம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி, என பன்முகங்களை 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கி, இந்தக் கால இன்ஃபோசிஸ் வரை பதிவு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
- இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் நண்பர்களிடமும் நெருங்கியவர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
- உங்கள் அலுவலில் பேசி, பொருளோ, பணமோ, நிரலியோ மற்ற உதவியோ பெற்றுத் தாருங்கள்.
- உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாதிரி இடங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்