ஜெயமோகன் அமெரிக்க வருகை


விதுரர்களின் வீடுகள்

மகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.

கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா?”

அரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா!”

பிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா!”

வேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.

முற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.

அந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது?” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.

அங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.


JeMo-writer-jayamohan-tamil-authors-Jeyamohan

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


இந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

மற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.


சென்ற 2009ல் வருகை புரிந்த போது:

1. 9 more Meet the Author Jeyamohan Events: Listings | ஜெயமோகன் நிகழ்ச்சிகள்

2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்

3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்

4. அமெரிக்கா: ஜெயமோகன்.இன்

5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு

6. அமெரிக்கா பயணம்: 2009 – jeyamohan.in

7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்

8. Obla Vishvesh :: Three days with Jayamohan | ஆங்கிலப் பதிவு

9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்

10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்

JeMo-Fiction_Novelist-jayamohan-tamil-authors-Jeyamohan

18 responses to “ஜெயமோகன் அமெரிக்க வருகை

 1. நியூஸியின் தெற்குத்தீவு வருகையில் தங்குமிடம் கிறைஸ்ட்சர்ச் துளசிதளத்தில் மட்டுமே!

 2. nice to know that a Tamil writer is recognised and honoured during his
  lifetime! Keep it up Tamil Americans..

 3. நியூ ஜெர்சியில், எழுத்தாளரின் பேச்சு கேட்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா…? ஏதும் நிகழ்ச்சி நிரல் இருந்தால் கூறவும்…

  • இரண்டு சந்திப்புகள் திட்டம் இட்டிருக்கிறோம்.

   முதல் சந்திப்பு – நியு ஜெர்சி: ஜூலை 3 வெள்ளி மாலை – இடம் இன்னும் முடிவாக வில்லை.

   இரண்டாம் சந்திப்பு – கனெக்டிகட் தமிழ்ச்சங்கம் – ஸ்டாம்ஃபோர்டு, நியு ஹாவன். ஜூலை 4, சனி மாலை

   உங்கள் மின்னஞ்சலை bsubra@ஜிமெயில்.காம் அனுப்பி வையுங்களேன்.

  • நியு யார்க் & நியூ ஜெர்சி சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
   தேதி: ஜூலை 2 – வியாழன்
   நேரம்: 6:30 மாலை
   இடம்: Bharat Sevashram Sangha of North America
   3490 Route 27, Kendall Park, NJ 08824

 4. பிங்குபாக்: கனடா -அமெரிக்கா பயணம்

 5. டெட்ராய்ட்டில் அவரை சந்திக்க விரும்புகிறேன். யாரை தொடர்புகொள்ள வேண்டும்?

 6. சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் பிற பே-ஏரியா பகுதி சந்திப்புகளுக்கு யாரை அணுகவேண்டும்? மௌண்ட் சாஸ்டாக்கு வாசகர்கள் வரலாமா?

 7. Jeyamohan sir should visit Chicago. He will like the city architecture

 8. நண்பர் அவர்களே, நான் பாஸ்டனில் தங்கி உள்ளேன் . ஜெயமோகன் ஐயாவை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

  பாஸ்டனில் எங்கு சந்திப்பது?

  • Boston Area meet the Author: A Talk by Jeyamohan
   Date: June 24, Wednesday
   Time: 6:30 PM
   இடம்: Trustee Room in Waltham Public Library

   பாஸ்டன் பகுதி வாசகர் சந்திப்பு & ஜெயமோகன் பேச்சு
   தேதி: ஜூன் 24 – புதன்கிழமை
   நேரம்: 6:30 மாலை

 9. ஜூன் 27 – வாஷிங்டன் டிசியில் அல்லது ஜூலை 5 பிட்ஸ்பர்க்கில் அவரை சந்திக்க விரும்புகிறேன். யாரை தொடர்புகொள்ள வேண்டும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.